நூலாம்படை
நூலாம்படை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிலந்தி வலை; தூசு படிந்த ஒட்டடை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- காரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, நூலாம்படை போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது (காமராஜர் காரின் பரிதாப நிலை, தினமணி, 15 ஜூலை 2010)
- சிலந்திக்கு நூலாம்பூச்சி என்று பெயர். அது, தன்னுடைய நூலால் கட்டிய வலைக்கும் சரி, அது பயன்படுத்தி முடிந்த பிறகு--அந்த இடத்தை விட்டு நீங்கிய பிறகு--தூசு படிந்து கிடக்கும் ஒட்டடைக்கும் சரி, நூலாம்படை என்று பெயர் (சந்த வசந்தம், கூகுள் குழுமம்)
- உங்கள் வீடுகளை நூலாம்படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை! (சுட்டி விகடன்)
- நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
- ஊஞ்சல் ஆடி வாழ்வோம் (திரைப்பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +