பட்டடை
பொருள்
பட்டடை(பெ)
- சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை (குறள், 821)
- அடைகல்
- பணை
- கொல்லன் பட்டறை; களரி
- குவியல்
- தானியவுறை
- தானியம் இடுவதற்கு ஓலைகளால் அமைத்த படுக்கை
- ஆணி முதலியன செல்லுதற்கு அடியிலிருந்து தாங்குங் கருவி
- கரையிலிருக்கும்போது பூமியிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணி தாங்கி
- தலையணையாக உதவும் மணை
- உட்காரும் பலகை
- கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை
- அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
- தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு
- சுவரிலிடும் மண்படை
- குடிவாரம்
- சாகுபடி செய்கை
- பட்டடைக்குத் தண்ணீர் இறைக்க
- இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு
- ஐந்தாம் சுரமாகிய இளியிசை
- வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து (சிலப். 3, 63)
- ஓர் இசைக் கரணம்
- கழுத்தணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- anvil
- smithy, forge
- stock, heap, pile,as of straw, firewood or timber
- corn-rick, enclosure of straw for grain, wattle and daub, granary
- layer or bed of olas for grain
- anything held against another, as a support in driving a nail; prop to keep a thing from falling or moving
- frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground
- support for the head in place of a pillow
- piece of board temporarily used as a seat
- plank used for cross in a channel
- the platform of the car that carries the idol
- block of wood provided with iron-tubes for explosion of gun-powder
- repeated explosion of gun-powder stuffed in iron-tubes
- a layer or course of earthwork, as in raising mud-wall
- portion allowed to ploughmen from the proceeds of a harvest
- cultivation, irrigation
- plot of wet land cultivated mainly by lift-irrigation
- (Mus.) the fifth note of the gamut
- one of the movements in playing a lute
- neck-ornament
விளக்கம்
பயன்பாடு
- தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு.
- கொல்லப் பட்டடை
- மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +