பம்மு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பம்மு (பெ)
- மறை; பதுங்கு.
- மேகம் முதலியன மூட்டம் போடுதல்
- நெருக்கமாக/அடர்த்தியாக இரு; செறி
- ஒலி
- நூலோட்டு. பம்மித் தைக்கிறது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- lurk, creep; skulk; hide
- lower, as clouds
- be close, thick, crowded
- sound
- baste, pin a seam to be sewed
விளக்கம்
பயன்பாடு
- அவன் எங்கேயோ பம்மிவிட்டான்.
- ஊர் பயந்து சாகிறது. மனிதர்கள் அஞ்சி ஒடுங்கி வீட்டுக்கள் பம்மிக் கிடக்கிறார்கள், ([1])
- குத்தாட்டம், குஜால் ஆட்டம் என தமிழ் சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. குடும்பத்தோடு படம் பார்த்த காலம் போய், குடும்பத்திற்குத் தெரியாமல் படத்தைப் பார்த்து விட்டு பம்மிப் பம்மி வீட்டுக்கு வர வேண்டியிருக்கிறது இப்போது. ([2])
- மரங்களிலிருந்து உதிர்ர்ந்திருந்த இலைச் சருகுகளில் கால் பதித்தால் எழுகிற சலசலப்பு ஒலி கூடக் கேட்கவிடாமல், பம்மிப் பம்மி நடந்து போய் விருந்தினர் மாளிகையில் புகுந்து விட்டான் அவன். (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பம்மு--- DDSA பதிப்பு + வின்சுலோ +