பழையவை பரணியில் உள்ளன

தொகு


குறும்பக்கங்கள் பற்றிய ஆய்வு

தொகு

இன்று காலை நானும், கந்தசாமியும் கூகுளின் அரட்டைஅரங்கத்தில் (chat room) இரண்டு மணி நேரம் விவாதத்தித்தோம். அதன்படி கண்டறிந்த ஆய்வுகளை உங்களிடம் சொல்கிறேன்

  • இத்தொடுப்பில் ஏறத்தாழ 5000 சொற்கள் உள்ளன. இவையனைத்தும் மேம்படுத்தினாலே நமது விக்சனரியின் எண்ணிக்கை அதிகமாகும்.
  1. அவர் ஆய்வுபடுத்திய சொல் -எல்லாரும்
  2. நான் ஆய்வு செய்த சொல் - பஞ்சாரம்

நீங்களும் இந்த ஆய்வுகளைத் தொடர வேண்டுகிறேன். குறைந்த பட்சம் எந்தெந்த மாற்றங்களைச் செய்தால், (இப்பட்டியலில் உள்ள சொல்லில்), மொத்த எண்ணிக்கை அதிகமாகும்.என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

நான் 3மணிநேரத்திற்குப் பிறகு இங்கு வருவேன்.நன்றி. வணக்கம்.த*உழவன் 08:32, 10 ஜனவரி 2010 (UTC)

    • தங்களின் கருத்துக்களைக் கண்டேன். நான் 1 மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டேன். நாம் மூவரும் சேர்ந்து மேலும் ஆய்வு செய்வோம்.
    • 500 --- ஐநூறு சொற்களின் கடைசியில் 98 பைட்டுகளின் நிலையில் உள்ளது. அந்த பட்டியலில் உள்ள சொற்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் படங்களையும் --- ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் கொடுத்து வருகிறேன்.
    • அப்படி செய்வதால் சொல் விளக்கமும், பைட்டுகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

அவ்வாறு நான் முயற்சி செய்த சில சொற்கள் --- வெள்ளையடித்தல், கால் கொலுசு, dvd --- டிவிடி, sauce --- சுவைச்சாறு ஆகிய சொற்களாகும்.

  • முன்பே சொல்லியிருந்தால் நானும் வந்திதருப்பேன். பொதுவாக க் கணினித்துறையில் இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை இருக்கும். இருப்பினும், நீங்கள் இருவரும் தொடர்ந்து பங்களிப்பது எனக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. தமிழ் விகசனரி தொடரோட்டத்தில் இப்பொழுது நாம் மூவரும் ஓடுகின்றோம்.

கந்தசாமி அவர்கள் தினம்5சொற்களையாவது, பதிவேற்றம் செய்வேன் என்று திண்ணமாக இருக்கிறார். நானும் அங்ஙனம் இருக்கிறேன். நமக்கு முன்னே இத்தாலிய மொழியினர் வருகின்றனர். அவர்களைக் கடக்க இன்னும் 500-600 வார்த்தைகளே உள்ளன. முன்பு சுட்டிய சொல்லில் குறைந்த து, என்னென்ன மாற்றங்கள் செய்தால் எண்ணிக்கை அதிகமாகும்?

இன்னும் 30 நிமிடங்கள் இருப்பேன்.த*உழவன் 16:13, 10 ஜனவரி 2010 (UTC)

த*உழவன் அவர்களுக்கு, வணக்கம்.

குறும் பக்கங்கள் --- இந்த பட்டியலில் எப்போது பார்த்தாலும் 5000---குறும்பக்கங்கள் இருக்கும். ஆகவே நாம் முதல் 500---மிகக்குறுகிய பக்கங்களில் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

கீழ்கண்ட ஆய்வில் எனது கருத்துக்களையும் கூறியுள்ளேன். Please see the Statistics:


Good words --- Total Users --- Active Users

Italian --- 1,02,755 --- 10,523 --- 65

Tamil --- 1,02,404 --- 1,780 --- 13


Current Status of No. of words --- 1,02,467 There is less than 300 words difference only. I hope that we can take over the Italian position within 10 days only.


Total Words --- 1,14,676 Good Words ---- 1,02,404 Difference ---- 12,272 I hope these 12,272 words are either in SHORT PAGES --- OR --- DEAD END PAGES ( = 1,171 ). So, we should concentrate in improving these 2 main areas. I hope that daily at least 1 to 10 words should be taken care for improvements. After that I hope the new GOOD words will be automatically added into the list.

நான் மேலே குறிப்பிட்டவாறு,

1)தொடராப் பக்கங்கள்

2)குறும் பக்கங்கள்

இந்த இரண்டு சிறப்புப் பகுதிகளிலும் நான் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன்.

ஒரு சிறு வேண்டுகோள் --- இந்த இரண்டு சிறப்புப் பகுதிகளையும் தினசரி பட்டியலாக மாற்ற வேண்டும்.

தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:13, 11 ஜனவரி 2010 (UTC)


1)மிக்க மகிழ்ச்சி. குறும்பக்கங்கள் என்னும் தொடுப்பில் எப்போதும்5000 இருக்குமா? நாம் அதை மேம்படுத்தும் போது அது அப்பட்டியலில் நீங்காமல்(அதேபோல் தொடரா பக்கத்திலும் நீங்காமல் உள்ளது) உள்ளதே? எனக்குப் புரியவில்லை. எனினும் , அப்பட்டியலிலை தினமும் பங்களிக்கிறேன். 2) தொடராப் பக்கத் தொகுப்பையும், குறும் பக்கத்தொகுப்பையும் முன்பக்கமுள்ள பின்னணியில் - செய்ய வேண்டியவை என்பதில் சேர்க்கவா? அல்லது தினசரிப் பட்டியல் ? எனக்குப்புரியலை?


த*உழவன் அவர்களுக்கு, வணக்கம்.

  1. குறும்பக்கங்கள் என்னும் தொடுப்பில் எப்போதும் 5000 சொற்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் வளப்படுத்திய சொற்கள் அவைகளின் பைட்டுகளின் அளவை பொருத்து அவைகளின் இடத்தில் போய் இருக்கும். (Actually, after our improvement of the word, it will be visible in its position in the sorted list which is based on the byte count --- this list is prepared on DAILY Bsis) --- Now the words which you have modified is not visible in the beginning of the list. It has gone to its position as per their byte count.
  2. Dead End pages --- தொடராப் பக்கங்கள்--- sorted on October, 22, 2009. This list will vary if we do the improvement. Now it is constant. So, to make it upto date, we should include this also in DAILY list.

1)தொடராப் பக்கங்கள்

2)குறும் பக்கங்கள்

--- இந்த இரண்டு சிறப்புப் பகுதிகளையும் தினசரி பட்டியலாக மாற்ற வேண்டும்.

I hope it is clear. Yes Both the above topics should be prepared at the end of the day, that is, at least DAILY ONCE. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 16:24, 11 ஜனவரி 2010 (UTC)


முடிந்த உரையாடல்களை ப் பரணிடுங்கள்

தொகு

உங்களின் கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டேன். அதன்படி, இருவரும் செய்வோம். இன்னும் சில மாதங்களுக்கு, கந்தசாமி அவர்கள் தனித்தியங்குவார். தமிழ் - எசுப்பானியம் என்பதில் ஈடுபடுவார். குறும்பக்கங்களில் உள்ள சொற்களிலுக்கு வேறு விக்சனரித்திட்டத்தளத்துடன், தொடர்பு இல்லையென்றால் பின்வரும் இணைப்பைக்கொடுத்தால், உடனே எண்ணிக்கை அதிகமாகிறது. அது யாதெனில், [[en:{{PAGENAME}}]] என்பதே அது.

உங்களின் பழையப் பேச்சுகளை, எனது பேச்சுப்பக்கம் போல பரணிடலாம் உங்களுக்கு தேவைப்படின், செய்து கொள்ளவும்.அதன் மூலம் பேச்சுப் பக்கத்தின் பைட்டுகள்(bytes) குறையும். த*உழவன் 16:52, 11 ஜனவரி 2010 (UTC)

தமிழ்ப் பக்க வடிவம்

தொகு

TRYPPN! குறவன், குறத்திக்கான பக்கங்களைப் பார்த்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பு மிகக் கீழே உள்ளது. பொருள் தேடி வருவோர் மொழிபெயர்ப்பு எங்கே என்று பக்கத்தில் தேடவேண்டி இருந்தால், அவர்கள் விரைவில் அதைக் கண்டுபிடிப்பதில் பொறுமை இழக்க வாய்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்பு மேலே இருத்தல் நலம் என்பது என் கருத்து.

முரடன் பக்கத்தை நான் நேற்று த*உழவனின் ஒரு அண்மைய பக்கத்தைப் பார்த்துச் செய்தேன்.

த*உழவனே!, நாம் அனைவரும் ஒரே வடிவைத் தேர்ந்தெடுக்க தமிழ்ச் சொற்களுக்கு எதை முன்மாதிரியாக வைப்பது? பழ.கந்தசாமி 04:07, 12 ஜனவரி 2010 (UTC)


  • நண்பரே! குறத்தியின் உரையாடற் பகுதியைப் பாருங்கள். முடிந்தால் முன்பு உரையாடிய மாதிரி, குறும்பக்கங்களில் அக இணைப்புகள்(internal links) கொடுங்கள். கொடுத்தால் எண்ணிக்கை அதிகமாகிறது. பொங்கலுக்குள், இத்தாலியைக் கடக்க ஒரு முயற்சியே இது.த*உழவன் 05:52, 12 ஜனவரி 2010 (UTC)


தமிழ் 14-வது நிலைக்கு உயர்த்தப்பட்டது

தொகு

பழ.கந்தசாமி, த*உழவன் இருவருக்கும் வணக்கம்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் 14-வது நிலைக்கு உயர்த்தப்பட்டது

நம் மூவரின் தொடர் முயற்சியால் --- தமிழ் 15-வது நிலையிலிருந்து 14-வது நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. http://s23.org/wikistats/wiktionaries_html.php

அடுத்த படியை ஓராண்டுக்குள் தாண்ட முயற்சிப்போம். பொங்கலோ பொங்கல் !!!

நல்வாழ்த்துக்கள். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:44, 13 ஜனவரி 2010 (UTC)


  • பொங்கலோ பொங்கல்! pongalலில் ஈடுபடுங்கள். அடுத்த படியென்ன, பல படிகள் நாம் மூவரும் தாண்டமுடியும். வாழ்த்துக்கள் .த*உழவன் 02:27, 13 ஜனவரி 2010 (UTC)

  • பெரியண்ணன் அவர்களே, உங்களுக்கும், குடும்பத்தில் அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

தொடர்ந்து நீங்கள் உற்சாகத்துடன் பங்களிப்பது புத்துணர்ச்சியையும் உந்துதலையும் அளிக்கிறது. நன்றி! தீபாவளிக்குள் இலகர (100,000) வார்த்தைகள் என நானும் த*உழவனும் திட்டமிட்டுச் செய்தோம். பொங்கல் முன் இத்தாலியைத் தாண்டமுடிந்தது அம்மொழியின் வார்த்தை எண்ணிக்கை ஏதோ காரணத்தினால் குறைந்தது ஒரு காரணம். (ஓரிரு வாரங்கள் முன்பு நம்மைவிட 2000 அதிகம் இருந்தது!)

  • ஜெர்மானிய மொழி நம்மைத் தொடர்கிறது (2000 பின்). எப்படியிருப்பினும், பக்கவடிவம், நல்ல மொழிபெயர்ப்பு என்று நாமனைவரும் தொடரவேண்டும்.
  • மீண்டும் பொங்கல் வாழ்த்துகள். வார இறுதியில் அரட்டையில் சந்திக்க முயல்வோம். பழ.கந்தசாமி 02:36, 13 ஜனவரி 2010 (UTC)

 - இப்பக்கத்திலும் கந்தசாமியவர்கள் மேற்காட்டிய பக்கத்திலிருந்து, இற்றையாக்கம் செய்து விட்டேன். தமிழ் (stub ratio - 0.8947) என்பதை வைத்துப் பார்க்கும் போது, இன்னும் மேலே வரும். சீன மொழியின் (stub ratio - 0.4\\\) வருகிறது.த*உழவன் 06:39, 13 ஜனவரி 2010 (UTC)


வாழ்த்துக்களுக்கு நன்றி.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி --- எனது கருத்துக்கள்.

1) விக்சனரியின் புள்ளி விவரத்தின்படி --- மொத்த சொற்கள் = 1,14,761 அதில் நல்ல சொற்கள் = 1,02,678. மீதம் = 12,083. ஆக பன்னிரண்டாயிரத்திற்கு அதிகமான சொற்கள் --- எங்கோ, ஏதோ ஒரு காரணத்தினால் வெளிவராமல் ஒளிந்து கொண்டிருக்கின்றன. முதல் வேலையாக அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

2) மொத்த பயனர்கள் = 1,789. அதில் கடந்த 30 நாட்களில் தொகுத்தவர்கள் = 14 பேர் மாத்திரமே. மேலும் 100-க்கு மேற்பட்ட தொகுப்பு செய்தவர்கள் --- http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ActiveUsers

---Pazha.kandasamy (பேச்சு | பங்களிப்புகள்) [587 edits in the last 30 days]
---TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்) [671 edits in the last 30 days]
---தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) ‎(நிர்வாகி) [2,166 edits in the last 30 days]
---பரிதிமதி (பேச்சு | பங்களிப்புகள்) [106 edits in the last 30 days]
ஆக மொத்தம் --- 4 --- நான்கு பேர்கள் மட்டுமே பங்களிக்கிறோம் என்பது புள்ளிவிவரக் கணக்காகும்.

எப்படி புதுப்பயனர்களை இங்கு வரவழைப்பது என்பது பற்றி யோசனை செய்ய வேண்டும்.

த.உழவன் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை:

தொடராப் பக்கங்கள் --- DEAD END PAGES --- இதில் மொத்தம் 1,171 சொற்கள் உள்ளன. --- http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:DeadendPages&limit=500&offset=1000
மேற்கண்ட பக்கத்தில் குறிப்பிட்டவைகளை கவனத்துடன் படிக்க வேண்டுகிறேன். இந்த பக்கத்தை கடைசியாக 22-10-2009-ல் இற்றைப்படுத்த பட்டது.
தொடராப் பக்கங்கள் --- DEAD END PAGES --- to be updated immediately --- இதை உடனே இற்றைப்படுத்த வேண்டுகிறேன்.
(காரணம்) நான் 12-01-2010 அன்று, பல சொற்களுக்கு, உள்-இணைப்பு கொடுத்துள்ளேன். அதன் மூலம் பல சொற்களை வெகு சுலபமாக கூட்ட முடிந்த்து.
தொடராப் பக்கங்களின் --- தற்போதய நிலை தெரியாது. ஆகவே, இதை இற்றைப்படுத்தினால் உண்மை நிலை தெரிந்து கொண்டு பயணத்தை மேற்கொண்டு தொடரலாம்.
இதனைச் செய்தால் குறைந்தது 1,000 (ஆயிரம்) சொற்களை பத்து நாட்களுக்குள் கூட்ட முடியும் என்பது எனது நம்பிக்கை.

வாழ்க தமிழ் --- வளர்க நம் தொண்டு.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:56, 13 ஜனவரி 2010 (UTC)


தொடராப்பக்கங்கள்

தொகு

இப்பக்கம் தற்காலிகமாக இற்றைப்படுத்த முடியாது என்று வருகிறது. ஏனென்று புரியவில்லை. மேலதிகாரியான இரவியிடம் கேட்டுள்ளேன். விக்கிக்கணினி குறித்த பயிற்சியைக் கேட்டுள்ளேன். விரைவில் தருவார்களென்று எதிர்பார்க்கிறேன். எனது அன்றாட செயல்கள்

  1. பொதுவாக நீங்கள் குறிப்பிட்டபடி நிறையப் பக்கங்களில் 500பைட்டுக்கும் குறைவாக உள்ளவற்றை மேம்படுத்துகிறேன்.
  2. கருவச்சொற்களில் இந்தியாக்கம் செய்கிறேன். அதன்மூலம், இந்தி - தமிழ்சொற்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
  3. பிறவிக்கித்திட்டங்களிலும், வாரம் ஒரு முறை ஈடுபடுகிறேன்.
  4. எந்த பக்கத்தில் எந்த அக இணைப்பும், புற இணைப்பும் இல்லாமல் இருக்கிறதோ அதை பகுப்பு செய்யும் போது, பக்க எண்ணிக்கை அதிகமாகிறது. தினமும் குறைந்தது 10 செய்யவேண்டும்
  5. அக இணைப்பு தரும் போது இல்லாப் பக்கங்களுக்கு (சிவப்பாக வரும்) கொடுக்க க் கூடாது என்று பழ. கந்தசாமி தெளிவுப்படுத்தினார். அதனையும் மறவாமல், அக இணைப்பு செய்தால் இப்ப அதிகமான எண்ணிக்கை மீண்டும் குறையாது என்பதைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பேச்சுப்பக்கத்தினை பரணிட்டால் நல்லதெனக் கருதுகிறேன். நன்றி. வணக்கம். த*உழவன் 13:35, 13 ஜனவரி 2010 (UTC)


பகுப்பு:ஆங்கிலம் - பறவைகள் என்பதிலுள்ள சொற்களில், (swan போல)பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள் என மாற்றவும். அதாவது சொற்களிலுள்ள இடைவெளியை எடுத்து விடவும். நன்றித*உழவன்


மஞ்சுவிரட்டு

தொகு

மேலும் பல நிகழ்படங்கள். விக்சனிரிக்கு இணைப்பு தரலாமா? பட இணைப்புத்தருவதில் அடிக்கடி அசத்துறிங்க. எனக்கு SVG படக்கோப்புகளில் ஆர்வம் உள்ளது. அது பற்றி உங்களுக்குத் தெரிந்தால், சொல்லிக் கொடுக்க முடியுமா? THE INDIAN VEGITATIONS - இந்தியாவின் முக்கியத்தாவர மண்டலங்கள் - இதைப் போன்ற பல படங்களை அக்கோப்புகளாக மாற்ற வேண்டும். காணும் பொங்கல்=களிநாள்(களி-அளவற்ற,மட்டற்ற மகிழ்ச்சி)-->கரிநாள் வாழ்த்துக்கள்த*உழவன் 02:42, 16 ஜனவரி 2010 (UTC)

 ஆலமரத்தடி பலருக்கும் ஒரே கருத்தைத் தெரிவிக்க ஏற்படுத்திய அமைப்பு ஆகும். எனவே, நாம் அவ்விடத்தைப் பயன் படுத்துவோம். வாருங்கள். Wiktionary:ஆலமரத்தடி. (._.)த*உழவன் 05:03, 16 ஜனவரி 2010 (UTC)

அக இணைப்பு

தொகு
  • குவியம் கண்டேன். அதில் சிவப்பு இணைப்புகள் அதிகம் உள்ளன. அது மாதிரி வராமல் பார்த்துக் கொள்ளவும். சிவப்பு இணைப்புகள், நம் விக்சனரியின் தரத்தைத் தாழ்த்தி விடும். நம்மை தலைமை விக்சனரியினர் கவனிக்கின்றனர்.stub ratio தமிழில் தற்போது 8.??. அது குறைந்து விடும். எனவே, அக இணைப்புகள் தரும் போது, அதற்கான பக்கத்தை உருவாக்கவும். பகுப்பு செய்தாலே பக்க எண்ணிக்கை உருவாகி விடும்.

மேலும், பகுப்புகளை செய்யும் தானியங்கியை கந்தசாமி அவர்கள் கண்டறிந்துள்ளார். அதன்மூலம் இந்த மாதத்தில் , ஆயிரமாவது எண்ணிக்கை அதிகமாகும்.

பட இணைப்பு தருவதில் இதுவரை நான்தான் அதிகம் செய்துள்ளேன். நீங்கள் அதனைச் சிறப்பாக செய்கிறீர்கள். எனவே, என்னை விட அதிகம் செய்ய வேண்டும். அது உங்களுக்கு ஒரு மைல் கல்.சிறப்பு.

நீங்கள் உருவாக்கிய பட இணைப்புத் தரவேண்டியப் பகுப்பில் சில சொற்களுக்கு, பட இணைப்புகள் தந்துள்ளேன். நீங்களும் அதைச் செய்யுங்கள். ஒரு சொல்லுக்கு, 4படங்கள் மட்டும் செய்தால், நான் ஒரு வருடத்தில் செய்ததை விட, சில மாதங்களில் நிறையச்சொற்களுக்கு பட இணைப்புகளைச் செய்து முடித்து விடலாம். தொடர்ந்து செய்தால், விக்சனரி உள்ளவரை உங்களின் சிறப்பு போற்றப்படும். தயவுசெய்து தமிழ்சொற்களுக்கு படமிடுங்கள்.முடிந்தவரை ஆங்கிலச் சொற்களைத்தவிர்க்கவும்.

சில தினங்கள் குறைவாகவே இங்கிருப்பேன். நன்றி.த*உழவன் 06:19, 17 ஜனவரி 2010 (UTC)

ஈராயிரம் தொகுப்புகள்

தொகு

TRYPNN! விக்சனரியில் ஈராயிரம் தொகுப்புகளையும் தாண்டி வேக இரயில் போல நீங்கள் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி. மிகக்குறுகிய காலத்தில் இதைச் செய்திருப்பது மிகவும் சிறப்பு.--பரிதிமதி 21:25, 17 சனவரி 2010 (இந்திய நேரம்)

சேவடி‎--- சிகப்பு நல்லதே

தொகு
  • மறவாமல் பார்க்கவும். சிவப்பு நிறம் வராமல் பார்த்துக்கொள்ளவும். ஒருசொல்லுக்கு ஒருமுறை வந்தால் கூட பரவாயில்லை. நம் தரம் குறைவ என்று மற்றவர் கூறக்கூடாது அல்லவா? த*உழவன் 00:45, 18 ஜனவரி 2010 (UTC)
    • த*உழவன் அவர்களுக்கு, காலை வணக்கம்.
தங்களது கருத்துக்களை கண்டேன். காலை 9 மணிக்கு மேல் இற்குண்டான விளக்கத்தை தருகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்.

வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 01:08, 18 ஜனவரி 2010 (UTC)


த*உழவன்,பழ.கந்தசாமி, பரிதிமதி ஆகியோருக்கு வணக்கம்.

பரிதிமதி அவர்கள் என்னை தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி.

த.உழவன் அவர்களுக்கு வணக்கம்.

மேலும் --- Stub --- பற்றிய சிறு ஆய்வை கீழே கொடுத்துள்ளேன் (Please See the Table below).

1) --- Stub --- in Wikipedia --- http://en.wikipedia.org/wiki/Stub In Wikipedia, a Wikipedia stub is a short article in need of expansion.

2)--- Stub --- in Wiktionary --- http://en.wiktionary.org/wiki/stub (wikis) A page providing only minimal information and intended for later development

3) --- Table Showing the STUB --- Statistics.

Reference Date: 18-January-2010 *** 19,906 = WORDS Required to go to the NEXT Position.


Position in Wictionary Language Local Language Code No. of Good Words (GW) Total No. of Words (TW) Hidden Words (NOT GOOD Words)(HW = TW-GW) Stub Ratio (GW/TW) Stub Ratio as Calculated by Wiki Total No. of Users Active Users % of Users Active
13 Norwegian (Bokmål) Norsk (Bokmål) no 123,165 130,773 7,608 0.9418 0.9418 1,947 20 0.974
14 Tamil தமிழ் ta 103,259 114,867 11,608 0.8989 0.8989 1,803 15 1.202
15 Italian Italiano it 102,715 119,808 17,093 0.8573 0.8573 10,699 55 1.945
16 German Deutsch de 100,850 128,138 27,288 0.7870 0.7870 27,707 228 1.215

So, it is clear that STUB is calculated as === ( No. of Good Words / Total No. of Words).

--- தாங்கள் கருதியபடி --- சிவப்பு நிறம் உள்ள சொற்களினால் தரம் பாதிக்கப்படும் என்பது சரியானது அல்ல. தங்களுக்கு கூறியவர்கள் எந்த ஆய்வும் செய்யாமல் கூறியுள்ளார்கள் என்பது எனது கருத்தாகும்.

தங்களுக்கு கூறியவர்களிடம் --- எனது மேலே கொடுத்துள்ள சிறு ஆய்வினை தயவுசெய்து காண்பிக்கவும். மறுகருத்து இருப்பின், எனக்குத் தெரிவிக்கவும்.

தற்போது, தொலைக்காட்சியில் --- கறை நல்லது --- என்று --- Surf Excel --- Avertisement --- வருகிறது. பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோன்று --- சிவப்பு நல்லது --- என்பது எனது கருத்தாகும். காரணம் --- சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் இன்னும் எழுதப்படவில்லை என்று குறிக்கிறது. இந்த சொற்கள் எல்லாம் ஓரிடத்தில் பார்ப்பாரின்றி குவிந்து கிடக்கின்றன.

வேண்டிய பக்கங்கள் --- Wanted Pages --- http://ta.wiktionary.org/wiki/சிறப்பு:WantedPages

இதில் 5000---(ஐயாயிரம்) சொற்கள் --- எல்லையின் கடைசிப்பகுதியாகும். (That is the Maximum Limit in a LIST in Wiki). இதனை கடைசியாக 22-10-2009-ல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகள், அடித்தல் கோட்டுடன் காட்டப்பட்டுள்ளன.

மேலும் இதனை, தினமும் கட்டாயமாக, ஒரு முறை, இற்றைபடுத்த வேண்டும். இதற்கான ஏற்பாட்டை, தாங்கள் செய்ய வேண்டுகிறேன்.

பின்பு, எந்த புது வார்த்தைகளை, உருவாக்க வேண்டும் என்று எண்ணும் போது, கவலையே இல்லை, இந்த --- வேண்டிய பக்கங்கள் --- உதவிக்கு வரும்.

என்னுடைய கணக்குப்படி, இதில் குறைந்த பட்ச்சம் 25,000 சொற்கள் இருக்கக்கூடும். கடைசியில் குறிப்பிட்ட சொல்லில், (2 இணைப்புக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மாதிரி, ( 1 இணைப்புக்கள் ) பக்கங்கள் 20,000-க்கும் அதிகமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

நாம் சொற்களின் எண்ணிக்கையை கூட்ட 4 வழிகள் தெரிகின்றன. 1) புதுச்சொற்களை மனதில் தோன்றியபடி செய்யலாம்.

2) ஒளிந்திருக்கும் சொற்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். (அக-இணைப்பு --- Internal-Link மூலம்)

3)DeadEndPages--- தொடராப் பக்கங்கள் --- இதில் உள்ள பக்கங்களில் அக-இணைப்பு கொடுத்தால் சொற்களின் எண்ணிக்கை கூடும். அதே சமயத்தில் வருங்காலத்தில் உருவாக்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

4) புதுச்சொற்களை தேடிக்கண்டு பிடிக்காமல் --- வேண்டிய பக்கங்களில் உள்ள சொற்களை உருவாக்கலாம்.

இப்படி செய்தால் நாம் இன்னும் இரண்டு படிகள் தாண்ட வாய்ப்புள்ளது.

ஆகவே, சிகப்பு நல்லதே.

தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:05, 18 ஜனவரி 2010 (UTC)


 உங்களது ஆய்வுக்கட்டுரை கண்டேன். அனைவருக்கும் பொதுவானக் கருத்துக்களை நீங்கள் ஆலமரத்தடியில் (முதற்பக்கத்தில் காணமுடியும்.) தெரிவித்தல் நலம். அனவரும் பாரக்க முடியும். விக்கிப்பீடியாவில் இருப்பவர் பெரும்பாலும் அங்கு வந்து சென்று விடுவர். எடுத்துக்காட்டு-நக்கீரன். பரிதிமதி போன்று ஒருசிலரே இங்கு வருவர்.

எனினும், இந்த ஆய்வினால், எனது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள். அவசியம் நீங்கள் சொன்ன முறைகள் கவனிக்கப் படவேண்டியதே. தமிழ் சொற்கள் மற்றும் அதன் பகுப்புகள் 40% தான் சரியாக உள்ளன. அதை நிச்சயம் கவனிப்போம். அதை விட குறைந்த நேரத்தில், பகுப்பு செய்வதினால் எண்ணிக்கையைக் கூட்ட முடியும்.

ஆனால், இப்பொழுது அல்ல என்பது என்கருத்து. எனெனில், ஒவ்வொரு சொல்லிலும் தொகு என்பதைச் சொடுக்கி, பிறகு தேவையான மாற்றங்களைச் செய்து, பிறகு சேமிக்கிறோம்.

எந்தப்பக்கத்தினையும் தொகுக்க, நாம் திறந்து மூடாமலேயே சேமிக்கும் வழியை பழ.கந்தசாமி அவர்கள் கண்டறிந்துள்ளார். தினமும் ஏறத்தாழ இந்திய நேரம் காலை 6-10 மணிக்குள் அது நம் விக்சனரியில் பதிவேறுகிறது. 10,15 நிமிடங்களிலேயே 100 சொற்களின் எண்ணிக்கைக் கூடி விடும்.

இதற்கு நாம் இருவரும் அவருக்கு ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும். உங்களின் நேரத்தினை இதற்கு செலவழிக்க, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் ஒத்துவரும், தினமும் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்று தெரிவித்தால், அதுபற்றி நான் கூறுகிறேன்.

இன்று வெறும் 50 சொற்கள் தான் பதிவேறியது. நான் ஆர்வக்கோளாறால் ஒரு தவறு செய்து விட்டேன். அதை உடன் கண்டறிந்து, கந்தசாமி சரி செய்துவிட்டார். ஏற்கனவே, இன்னும் ஓரிரு மாதங்கள் வேலை அதிகம் என்று சொல்லியிருந்தார். எனினும், இந்த அரிய வழியைக் காட்டியுள்ளார். அவரது இணைய வேகம்2mbpsக்கும் மேல். அதனால் நம்மை விட, அவர் எளிதில் முடிக்க முடியும்.

உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்து முடிக்கும். அப்புறம் ஒரு விசயம். நாம் ஒரு இலக்கு நோக்கி இயங்குபவர்கள். நமக்குள் இடைவெளி கூடாது. த*உழவனே என்று நீங்கள் அழைப்பதையே நான் விரும்புகிறேன்.

உங்களைப் போன்றோர் ஒத்துழைத்தால் இம்மாதமே குறைந்த பட்சம் 3000 சொற்களைக் கூட்டலாம்.

உங்கள் நேரத்தினை எனக்காக செலவிட்டமைக்கு மிக்க நன்றி. (._.)த*உழவன் 17:31, 18 ஜனவரி 2010 (UTC)

    • த.உழவனே, வணக்கம்.
1) பழ.கந்தசாமி அவர்கள் கண்டறிந்ததை எனக்கு சிறிது விளக்கினால் நான் இன்னும் பல நல்ல செயல்களால் --- விக்சனரிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. ஆகவே எனக்கு, சிறிது வழிகாட்ட வேண்டுகிறேன். --- எப்பகுதியில் தேடவேண்டும் என்றும், ஒரு உதாரணமும் காட்டவேண்டும் --- என்று கேட்டுக்கொள்கிறேன்.
2)என்னுடைய ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைக்கும். காலை 5 - 7; 12-1; மாலை 5 – 6, 9 - 10 --- இந்த நேரங்களில், தினமும் குறைந்த அளவு 3 மணி நேரத்தை ஒதுக்க முடியும். ஆகவே, தாங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் நன்று.
தங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:46, 19 ஜனவரி 2010 (UTC)

தானியங்கி - சட்டத்துறை பதிவேற்றம் 50 சோதனை

தொகு

அண்மையப் பக்கத்தைப் பார்க்கவும்த*உழவன்

---பாராட்டுக்கள்--- தங்களது சோதனை வெற்றியடைந்து விட்டது என்று எண்ணுகிறேன்.
Please tell me the techniques used --- I will also start. Waiting for your Reply please. Again Congratulation for the TEST Runs.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:22, 19 ஜனவரி 2010 (UTC)
  • தானியங்கிக்காக சொற்தொகுப்பை மட்டுமே நான் தயாரித்து அனுப்புகிறேன். முன்பகத்திலிருந்து அகரவரிசையில், பகுப்பில்லா ஆங்கிலக் கூட்டுச்சொற்களை எடுத்து அனுப்புகிறேன்.

விரைவில் நமக்கு கந்தசாமியவர்கள் சொல்லிக்கொடுப்பார். நீங்கள் அதனை விரைவாகப் புரிந்து கொள்ள இயலும். நான் கொஞ்சம் மந்தம். ஏனெனில், உங்களைப் போன்று நான் கணினித்துறைச் சார்ந்தவன் அல்ல. விரைவில் விளக்கங்களுடன். அவருக்கு நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிற்து என்று கூறினார். இருப்பினும் தமிழ் விக்சனரிக்கு நேரம் ஒதுக்குவேன் என்று உறுதியளித்துள்ளார். உடன் கேட்டுச் சொல்கிறேன்.

ஆங்கிலப் பகுப்புகளை உருவாக்கும் போது, பகுப்பு:ஆங்கிலம்-தொகுப்புச் சொற்கள் இதை ஒருமுறை கவனித்து விட்டு, உருவாக்கவும். தமிழ் பகுப்பில் தமிழ் சொற்கள். ஆங்கிலப்பகுப்பில்,ஆங்கிலச் சொற்கள், இந்தியில் இந்தி என்பது போல.. நன்றி. தகவலறிந்தவுடன் தொடர்புகொள்கிறேன்.

விக்கி ஊடக நடுவத்தில் விடுபதிகை என்ற சொல்லுக்கு அடுத்து கடிகாரம் வருகிறது. கணினி நிரல் என்பதால் எனக்குப் புரியவில்லை. நீங்கள் அது பற்றி ஆய்ந்தால் நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவில் கூட அவ்வசதியில்லை. நீங்கள் செய்தால் சிறப்பு. த*உழவன் 12:47, 19 ஜனவரி 2010 (UTC)

தானியங்கி பற்றி

தொகு

TRYPPN! ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தானியங்கி நிறுவலும் இயக்கமும் எளிதுதான். தானியங்கி பற்றி எனது குறிப்புகளை நான் ஆலமரத்தடியில் சேர்த்துள்ளேன். பழ.கந்தசாமி 16:33, 19 ஜனவரி 2010 (UTC)

  • விண்டோஸ் தானியங்கியை நேரம் கிடைத்தால் முயற்சித்துப் பார்க்கவும்
பழ.கந்தசாமி அவர்களுக்கு, வணக்கம்.
நான் இதைத் தான் நெடுநாட்களாகத் தேடி வந்தேன். கிடைத்து விட்டது. மிக்க மகிழ்ச்சி. என்னால் செய்ய முடியும் என்று எண்ணியமைக்கு நன்றி.
முயற்சி செய்கிறேன். முயற்சி திருவினையாகும்.
தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:01, 20 ஜனவரி 2010 (UTC)

தானியங்கி---AWB---AutoWikiBrowser

தொகு

பழ.கந்தசாமி, த.உழவன் ஆகியோருக்கு வணக்கம்.

தானியங்கி---AWB---AutoWikiBrowser--- வேலை செய்ய துவங்கியுள்ளது.

தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:33, 21 ஜனவரி 2010 (UTC)


  • AWB பார்ப்பதற்கு மகிழ்ச்சி. நானும் எப்படி பயன்படுத்துவது ? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்பக்கத்தில் உள்ள toolserver நன்றாக இருக்கும். இதில் வரும் optin என்றால் என்ன?
    • OPT IN --- You have Opted as a default Option --- for the Display of Daily/Weekly Graph. Please see just above the ---- Contribution Summary --- the last point in the list.
I hope that it is not displaying anything related to the user. It displays some old information for the period of 12/2005 to 06/2006. It may be for the whole of the Database, which we need not worry so much. Please ignore those details, which are meaningless for us.
Regards ---(time shortage to write in Tamil)--- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:47, 21 ஜனவரி 2010 (UTC)
  • நாம் இப்ப பகுப்புகள் செய்வதால், அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள ஆவல். குறிப்பாக பகுப்புச் சேர்ப்பு மற்றும் பகுப்பு நீக்கம் இருந்தால், சில ஆயிரங்களை நாம் அனைவரும் குறைந்த நாட்களில் அடைய முடியும். எதிர் பார்ப்புடன் முடிக்கும்.

த*உழவன் 05:13, 21 ஜனவரி 2010 (UTC)

AWB-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது

தொகு

TRYPPN! நீங்கள் AWB-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் விக்சனரியின் உண்மையான முன்னேற்றம்

தொகு

நிறையப் பக்கங்களை இணைப்புக் கொடுக்கவேண்டிய பக்கங்கள், படங்கள் கொடுக்கவேண்டிய பக்கங்கள் என்று பகுப்பதற்குப் பதில், நேராக அவற்றில் சிலபக்கங்களுக்கேனும் விளக்கமோ படமோ கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்போதுதான் விக்சனரி உண்மையான முன்னேற்றம் அடைகிறது. இல்லையென்றால், இந்த அனைத்துச் சொற்களுக்கும் நாம் இன்னொரு நாள் தனியாகச் சென்று விளக்கமோ படமோ கொடுக்கவேண்டும்? அது இரட்டை வேலையென்று தோன்றுகிறது. நன்றி பழ.கந்தசாமி 19:14, 23 ஜனவரி 2010 (UTC)

  • எனக்கு, இன்னும் தமிழ்த்தட்டச்சின் வேகம் தேவையான அளவு இல்லை. இந்த காரணத்தினால் நான் பகுப்பில் ஈடுபட்டுள்ளேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளேன்.
  • இன்னும் ஒரு வாரத்திற்குள், நானும் புதிய சொற்களை உருவாக்குவதிலும், பிழைகள் திருத்தம் செய்வதிலும் ஈடுபடுவேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:07, 25 ஜனவரி 2010 (UTC)

சேலத்து தகவலுழவனுக்குப் பாராட்டுக்கள்

தொகு

தகவலுழவனுக்கு வணக்கம்.

  • தங்களுடைய சாதனையை --- தமிழ் விக்கிபீடியாவில் --- விக்கிப்பீடியர் அறிமுகம் --- இதில் குறிப்பிட்டுள்ளார்கள். எனது நல்வாழ்த்துக்கள்.
அதை படித்தபின், சேலம் --- தங்களுடைய சொந்த ஊர் என்று தெரிகிறது.
சேலத்தில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறினால் நன்றாக இருக்கும். காரணம், நானும் பழைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். மேலும் சேலம் அரசினர் கலைக்கல்லூரியில் பயின்றவன்.
ஆகவே, தங்களுடைய மேல் விவரங்களைத் தெரிவத்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:55, 25 ஜனவரி 2010 (UTC)

  • AWB---ஐ தாங்கள் உபயோகிக்கிறீர் என்பது தெரிந்து, மகிழ்ச்சியடைகிறேன். மேலும், நான் எழுதிய குறிப்புக்கள் தங்களுக்கு உதவியாக இருந்தனவா என்பதனை அறிய ஆவலாக உள்ளேன்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:55, 25 ஜனவரி 2010 (UTC)


  1. AWBகுறிப்புகள் மிக அருமை. உண்மையான ஈடுபாடு அற்றவர் அதனைப் பார்த்தால், நிறைய விசமத்தனத்தைச் செய்து விடுவர் என்ற கவலை உள்ளது. நமது விக்கி அதிகாரி இரவியிடம் பேசியுள்ளேன்.

நிறையப் பேசினாம்.AWBயை, இனி நீங்கள் தான் நிருவாகிக்கப்போகிறீர்கள். சில வெள்ளோட்டங்களையே, அதில் செய்துள்ளேன். அண்மையப்பக்கத்தில் தானியங்கிகளை மறை என்ற ஒரு தேர்வு உள்ளதல்லவா? அப்பயன்பாட்டை இதனுடன் இணைக்கவேண்டும். அவ்வப்போது AWB பாரக்கவும். இன்று கூட அதில் ஒரு ஐயத்தைக் கேட்டுள்ளேன்.

நிறைய AWB பற்றி கலந்துரையாடுவோம். கந்தசாமியவர்கள் மிகுந்த வேலைச் சுமை இருப்பதாகக் கூறியிருந்தார். நாம் மூவரும், விக்சனரியின் மூவராவோம். முத்தமிழ்,முக்கனி என்பது போல..

Tamil bot என்ற பொதுப்பெயரில், mediawikiயிடம் botவாங்கினால், அது பலவகையில் நல்லது என்று இரவி விளக்கினார். மீடியா விக்கிக் கணக்கெடுப்பில் உதவும் என்று கூறினார். அவரை இவ்வாரத்தில் நேரில் சந்திப்பேன். சந்தித்தால் உங்களுட்ன தொட்ர்ப்பு கொள்கிறேன்.

நான் படித்தது சேலம் அல்ல. திருச்சி பிசப் இபர் கல்லூரி. MLIS பிறந்தது ஆத்தூர். --த*உழவன் 07:15, 25 ஜனவரி 2010 (UTC)

விக்சனரி இலச்சினை ஓட்டெடுப்பு-2010

தொகு

இத்தொடுப்புப் பக்கத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுங்கள். ஒரு நிமிடம் தான் ஆகும். இடப்பக்கமுள்ள புத்தகவடிவிலான இலச்சினை(சின்னம்)யைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், வலப்பக்கம் உள்ளதில் (தொன்மையான மொழிகளில்) தமிழ் இல்லை. இடப்பக்கமுள்ள புத்தகவடிவில் தமிழைக் கொண்டு வர முடியும் என்று அங்குள்ள உரையாடல்களைக் கவனிக்கும் போது தெரிகிறது.

ஒரு மாதத்திற்கு முன் இந்திய உயிரினங்கள்(தாவரம்+விலங்கு) பற்றிய தொடுப்பினை எடுத்து வைத்திருந்தேன். எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை.

AWBயை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்கு நன்றி. நாம் அனைவரும் Tamil bot என்ற பொதுப்பெயரில் விரைவில் இயங்க உள்ளோம். இரவியுடன் இதுபற்றி உரையாடி உள்ளேன். சுந்தர் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பல மொழிகளைத் தாண்டுவோம். நம்மால் முதல் 5 இடத்தில் ஒன்றை எட்ட முடியுமென நம்புகிறேன்.

தாமரையில் உள்ள தமிழ் வார்ப்புருக்கள் எப்படி உள்ளது. சொற் எண்ணிக்கையை அதிகரிக்க, நான் எடுக்கும் முதல் படி. விரைந்து செயல்படும் போது ஏற்படும் பிழைகளைத் தவிர்க்கவும், புதிய பயனர்களால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்கவும். இந்த வார்ப்புருக்கள் உதவுமென நம்புகிறேன். ஆங்கிலச்சொல்லுக்கு dove அடிப்படை அமைவு போல, இந்தி சொல்லுக்கு 90% உருவாக்கிவிட்டேன். தமிழ் சொல்லமைப்பை இனி கவனிப்போம்.

இன்னும் 10தினங்கள் நான் அதிகம் வரமாட்டேன். முடிந்தால் இப்பக்கத்தில் கொஞ்சம் பரணிடுங்களேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 14:24, 30 ஜனவரி 2010 (UTC).

ஆங்கில பெயர்ச்சொல் வடிவமைப்பு

தொகு
  1. இப்பக்கத்தில் உள்ள ஆங்கிலப்பெயர்ச்சொல் படிவத்தினை, பலரது கருத்தினை ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளேன்.
  2. பயன்படுத்திப் பார்த்து, தங்கள் கருத்தினை, இங்கு இடவும்.
  3. இவ்வடிவமைப்பின் இறுதிநிலைக் கருத்தோட்டங்கள், இப்பகுதியில் நடந்தது.த*உழவன் 07:23, 6 பெப்ரவரி 2010 (UTC)

chicken foot பயன்பாடு- Scripts Wiki ???

தொகு

chicken foot என்பதைப் பயன்படுத்திப் பார்த்தேன். இதனைப் பயன்படுத்தும் போது, அடிக்கடி செய்யும் வேலைகள் எளிமையாக்கப் படுகின்றன. இதன் Scripts Wiki என்ற பகுதியை நமக்கு பயன்தரலாம். எனக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்று விளங்கவில்லை. உங்களின் கருத்தாய்வை எதிர் நோக்குகிறேன்.த*உழவன் 05:08, 9 பெப்ரவரி 2010 (UTC)

  • த.உழவனுக்கு, வணக்கம்.
தங்களது, ஆர்வத்தையும் முயற்சியையும் பார்த்தேன். மகிழ்ச்சி. நான் Firefox and Chickenfoot --- இரண்டையும் பதிவிறக்கம் செய்து சோதனை செய்து கொண்டுள்ளேன். எனது கருத்துக்களை இரண்டு நாட்களுக்குள் கூறுகிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:24, 9 பெப்ரவரி 2010 (UTC)

 மிக்க மகிழ்ச்சி.பெரியண்ணன்! இணையத்தில் நிறைய நமக்கு உள்ளன. அவற்றை பதிவேற்றுவதில் தான், தொழில் நுட்பம் தேவை. உதாரணத்திற்கு, இத்தளத்தினைக் காணுங்கள் கீழ்காணும் செயல்களில், தொழில் நுட்பங்கள் தேவை.

  1. நகல்/படி எடுப்பது எப்படி?
  2. அப்படி எடுத்தப் படியை, நமது படிவத்தில் ஒட்ட வேண்டும்.
  3. அப்படி தயாரித்தப் படிவங்களை, விரைவாக பதிவேற்ற வேண்டும்.

ஒவ்வொன்றாக நாம் செய்வதை விட, தொழில் நுட்ப செய்தால் நன்றாக இருக்கும். அவசரமில்லை. ஆனால்,மேற்கண்ட குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். சுந்தரும், இரவியும் விக்கிப்பீடியாவில் கவனமாக இருக்கின்றனர். எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. உங்களைப்போன்றவர் எனக்கு வழிகாட்டினால், தமிழைப் பலபடிகள் மேலேற்ற முடியும். நன்றி.வணக்கம்.த*உழவன் 13:12, 9 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா ஓட்டெடுப்பு

தொகு

மின்னஞ்சல் காணவும். தமிழ்விக்கிப்பீடியாவில் ஓட்டளிக்கவும்.இன்னும்6.45மணி நேரமே உள்ளது.த*உழவன் 17:19, 24 பெப்ரவரி 2010 (UTC)

AWB பற்றி

தொகு
  • எனது நீண்டநாள் ஆசை இன்று சுந்தர், இரவி மற்றும் உங்களால் இன்று நிறைவேறுகிறது. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தானியங்கிகளைக் காட்டு என்பதைச் சொடுக்கி விட்டு, கவனிக்கவும். நன்றி. வணக்கம்

த*உழவன் 01:32, 18 பெப்ரவரி 2010 (UTC)

  • உங்களின் மின்னஞ்சல் வேண்டும். நீங்கள் ஏற்கனவே கொடுத்ததைக் குறித்து வைக்க மறந்து விட்டேன். மன்னிக்கவும். AWB பற்றி எனது நிலையைத் தெரிவிக்கவிரும்புகிறேன்.பேரா.மு. இளங்கோவன் சென்னைப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் விக்கித்திட்டங்களைப் பற்றி, கருத்தரங்கு நடத்த உள்ளார். அவருக்கு உதவியாக இருக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். மின்மடலில் விரிவாக ... நன்றி. வணக்கம். த*உழவன் 02:19, 21 பெப்ரவரி 2010 (UTC)
  • த.உழவனுக்கு,வணக்கம்.
தங்களுடைய செய்திகளைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
சென்னைப்பல்கலைத்தில் விக்கித்திட்டங்களைப் பற்றி, கருத்தரங்கு நடத்த பேரா.மு. இளங்கோவன்

அவர்களுடன் செல்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  • தாங்கள் கூறியபடி, அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தானியங்கிகளைக் காட்டு என்பதனை சொடுக்கிவிட்டுப் பார்த்தேன். தானியங்கிகள் மூலம் தொகுத்த அனைத்தையும் காண்பிக்கிறது. நல்லதொரு மாற்றம்.
  • எனது மின்-அஞ்சல் ppnindia@gmail.com
  • TamilBOT --- மூலமாக தாங்கள் பல பகுப்பு மாற்றங்கள் செய்துள்ளதைக்கண்டேன். எனக்கு அது பற்றி விவரமாகக்கூறவும்.
  • AWB---பற்றி எனக்கும் அவ்வளவு நல்ல கருத்தில்லை. தங்களது கருத்துக்களைக்கூறவும்.
  • தங்களது பதிலைப் பார்த்த பின் எழுதுகிறேன். நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:09, 21 பெப்ரவரி 2010 (UTC)

  • பெரியண்ணன்!ஓரளவு பகுப்புகளில் முதற்சுற்று மாற்றங்களை உருவாக்கி விட்டேன். இனி find and replace செய்வது பற்றி, மின்னஞ்சலில் கற்றுத் தாருங்கள்.

(எ-கா)

  • <small>[[பெயர்ச்சொல்|பெ]]</small> என்பதை, {{பெ}} என்பதாக மாற்ற வேண்டும். இதுபோல பல உள்ளன. இதன் மூலம் பெரும்பான்மையானச் சொற்களை இற்றைப்படுத்திவிடலாம்.
  • sundar botன் பகுப்புப் பிழைகளை, பாதி குறைத்துவிட்டோம். அதே போல, உசாத்துணைகளில் பெரும்பங்கு பிழைகளோடு காணப்படுகிறது.

இதற்காகத் தான் find and replace செய்வது பற்றி, கேட்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இம்மாத த்திற்குள் எனக்கு வழிமுறைகளைக் கற்றுத்தர, மின்னஞ்சலிடுங்கள். நன்றி. எதிர்பார்ப்புடன் முடிக்கும்,த*உழவன் 18:31, 4 மார்ச் 2010 (UTC)

தங்களது சோதனைகள் வெற்றிவழியில் இருக்கிறது என நினைக்கிறேன். எனது மகிழ்ச்சியை, படங்களாக க் காட்டுகிறேன்.

மின்னஞ்சலைப் பார்த்தேன். எனக்குள்ளே துள்ளல். இப்பொழுது ஆங்கில உச்சரிப்புக்கான கோப்புகளை ஆராய்கிறேன். மிக்க நன்றி. வணக்கம் --த*உழவன் 13:32, 5 மார்ச் 2010 (UTC)

AWB ஆசானே! எப்படி இருக்கிங்க! ரொம்ப வேலை அதிகமா? உங்களை நீண்ட நாளைக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி! த*உழவன் 07:19, 22 மார்ச் 2010 (UTC)

    • த.உழவனுக்கு வணக்கம்.
    • திருச்சிக்கு விடுமுறையில் சென்றிருந்தேன். இன்று அலுவலகம் வந்தேன். தொடர்வோம் நம் தமிழ் பணியை. நன்றி வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:31, 22 மார்ச் 2010 (UTC)

புதுச்சொற்களில் ஆங்கிலம்

தொகு
  • உங்களின் புதியச் சொற்களுக்கான பதிவேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், ஆங்கில விளக்கம் அருமை. அதனை முதலில் குறிப்பிடாமல், விளக்கம் என்பதன் கீழ் வந்தால் நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன்.ஏனெனில், தமிழ் விக்சனரியில், தமிழுக்கு முதலிடம் தந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.வணக்கம்த*உழவன் 04:50, 5 ஏப்ரல் 2010 (UTC)

பட இணைப்பு

தொகு

பெரியண்ணன்! காவிரியைக் கண்டேன். நீங்கள் படமிடுதலில் நிபுணர். எனக்குப் பொறாமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் அசத்தல்.இன்னும் சில நாட்களில், தமிழிணையப் பல்கலைக் கழக இணைப்புப் பணிகள் முடிந்துவிடும். AWB மூலம்கடந்து வந்தப் பாதைகளைப் பார்க்கிறேன்.ஆனந்தக்கண்ணீர். என் நன்றியை, சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்த*உழவன் 05:30, 6 ஏப்ரல் 2010 (UTC)

பகுப்பு --- பட இணைப்புள்ள சொற்கள்

தொகு

த.உழவனுக்கு வணக்கம்.

பட இணைப்புள்ள சொற்கள் --- என்ற பகுப்பைத் துவங்க உள்ளேன். (தமிழ், ஆங்கிலம், இந்தி) இது பற்றிய தங்களது கருத்தையும் பரிந்துரையையும் அறிய ஆவல்.

எனது விருப்பம் கீழே உள்ளவை.

[ [பகுப்பு:பட இணைப்புள்ள சொற்கள் - தமிழ்]]
[ [பகுப்பு:பட இணைப்புள்ள சொற்கள் - ஆங்கிலம்]]
[ [பகுப்பு:பட இணைப்புள்ள சொற்கள் - இந்தி]]

இப்படிச்செய்தால் --- எல்லா பட இணைப்புச் சொற்களும் ஒரே இடத்தில் வரிசையாகத் தெரியும். தேட வேண்டியது இல்லை. ஆகவே இதனைச் செயல் படுத்த விரும்புகிறேன்.

தற்போதுள்ள பகுப்புக்களின் அமைப்பில் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பொருந்துகின்றன.

[ [பகுப்பு:தமிழ்-பட இணைப்புள்ள சொற்கள்]]
[ [பகுப்பு:ஆங்கிலம்-பட இணைப்புள்ள சொற்கள்]]
[ [பகுப்பு:இந்தி-பட இணைப்புள்ள சொற்கள்]]

ஆனால் ஒரு தொல்லை. கவனியுங்கள் --- (தமிழ்-பட), (ஆங்கிலம்-பட), (இந்தி-பட) --- என்று சினிமா படத்தை போன்ற தவறான கருத்தைத் தருகின்றன. ஆகவே இந்த தலைப்புள்ள பகுப்புகளை தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து.

ஆகவே, இது பற்றிய தங்களது கருத்தையும் பரிந்துரையையும் அறிய ஆவல்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:27, 16 ஏப்ரல் 2010 (UTC) --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 23:28, 16 ஏப்ரல் 2010 (UTC)

  • உங்களின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். இருப்பினும் இத்தகையப் பகுப்புகளிலுள்ள சொற்களை அதிகரிப்பதை விட,1000 சொற்களை மட்டும் பட்டியலிடலாம். பட இணைப்பு கொடுத்து விட்டு, பிறகு மீண்டும் 1000 சொற்கள் தொகுக்கலாம். பகுப்பு:தமிழ்-பட இணைப்புள்ள சொற்கள் என்பதனை விட, பகுப்பு:பட இணைப்புள்ள சொற்கள்-தமிழ் என்று பகுப்பது உயரிய சிறந்த கருத்தே. அருமை!எனது சிந்தனையைத் தூண்டியமைக்கு நன்றி. வணக்கம்.த*உழவன் 23:39, 16 ஏப்ரல் 2010 (UTC)

bot உரிமை

தொகு

தங்களின் awb பயனர் கணக்குக்குத் தானியங்கி உரிமை வழங்கப்பட்டுள்ளது.--ரவி 15:30, 14 ஏப்ரல் 2010 (UTC)

தங்களது தானியங்கி பற்றி..

தொகு
  • மின்னஞ்சல் காணவும்.த*உழவன் 05:19, 16 ஏப்ரல் 2010 (UTC)
  • த.உழவனுக்கு, வணக்கம்.
  • கவனித்தேன்.மகிழ்ந்தேன். என்னுடைய கணினியில்AWBயில் கோளாறு வருகிறது. நன்றாகதான் இருந்தது. இப்பொழுது find & replace பயன்படுத்த முடியவில்லை. நீங்கள் என்ன antivirus பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் பகுப்புப் பணிகள் முடிந்தவுடன் சொல்லுங்கள். windows XP தானே பயன்படுத்துகிறீர்கள்? இம்மாதம் எனது பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும். நன்றி.வணக்கம். த*உழவன் 06:51, 16 ஏப்ரல் 2010 (UTC)

மன்னிக்கவும். சரியாக படிக்கவில்லை பட இணைப்புள்ள பகுப்பு இப்போதைக்கு வேண்டாம். அதற்கு பதில் பட இணைப்புக் கொடுக்கத் துவங்கலாம்த*உழவன் 23:43, 16 ஏப்ரல் 2010 (UTC) பகுப்பு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள் நீங்கள் உருவாக்கிய இப்பகுப்பில், பட இணைப்புக் கொடுக்கத்துவங்குகிறேன். நீங்களும் இணைந்தால், நன்றாக இருக்கும். இப்போதைக்கு ஒருசொல்லுக்கு ஒருபடம் அல்லது ஒருகாட்சியகம்.வணக்கம்.த*உழவன் 23:47, 16 ஏப்ரல் 2010 (UTC)

உறையூரின் தங்கத்தேர்

தொகு

திருச்சி பிசப் இபர் கல்லூரியில் தான் நான் படித்தேன். அப்போது காண இயலாத, தேரின் அழகைக் காட்டியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும், நீங்கள் படங்கள் இணைப்பதை இரசிக்கிறேன். விரும்புகிறேன்.த*உழவன் 04:51, 8 மே 2010 (UTC)Reply

  • த.உழவனுக்கு வணக்கம். உறையூர் வெக்காளியம்மன் தங்கத்தேர் 5 மாதங்களுக்கு முன்பு தான் செய்யப்பட்டது. ஆகவே தாங்கள் படிக்கும் போது பார்க்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இப்போது அதனை பார்த்து பரவசப்படுங்கள் ஆனந்தப்படுங்கள்.
  • மேலும் இதில் ஒரு சிறப்பம்சம். இந்த படத்தை எடுத்து விக்கிமீடியா காமன்சில் இணைத்த பாக்கியத்தை நான் பெற்றேன் என்று மகிழச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 15:18, 9 மே 2010 (UTC)Reply

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு

தொகு

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

ஆங்கில பன்மைச்சொற்கள் தானியங்கி

தொகு
  • எப்படி இருக்கிங்க! நல்லா இருப்பிங்கன்னு நம்புகிறேன். நிறைய பணியடர்வா? நீங்கள் திரும்ப வந்தது குறித்து மகிழ்ச்சி.

இதிலிருந்து தற்போது எண்ணிக்கையைக் கூட்டுகிறேன். நீங்களும் முடிந்தால் இணைய வேண்டுகிறேன். உங்களுக்கு நேரம் இருக்குமெனின், பகுப்பு:ஆங்கிலம்-பன்மைச்சொற்கள் என்பதனை பார்வையிட்ட பின்பு, அதனைப் போலவே செய்தால் நன்றாக இருக்கும். ஆவலுடன், எதிர் நோக்கும்--(த*உழவன் 06:16, 17 ஜூன் 2010 (UTC))


த.உழவனுக்கு வணக்கம்.

நான் எங்கும் போகவில்லை. ஒரு மாபெரும் பணியில் --- இரவி, சுந்தர் ஆகியோருடன் இணைந்து செயல் பட்டேன். அதாவது, தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான --- கட்டுரை போட்டியில் ஒரு விக்கி-நடுவராகவும் --- தேர்வு பணியில் தொடர்ந்து பங்காற்றவும் --- வாயப்பு கிடைத்தது.

அம்மாபெரும் பணி இனிதே முடிவுற்றது. ஆகவே இனி தங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றுள்ளேன்.

தாங்கள் குறிப்பிட்டவற்றை சிறிது ஆய்வு செய்த பின் செயலைத் தொடங்குவோம்.

நன்றி. வணக்கம். பெரியண்ணன்.


வணக்கம் த.உழவன்.

இரண்டு பன்மைச்சொற்களை உருவாக்கியுள்ளேன். சரிபார்க்கவும். ---sister --- sisters and sistren

நன்றி. வணக்கம். பெரியண்ணன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:44, 18 ஜூன் 2010 (UTC)

  • பெரியண்ணன், sistren என்பது வழக்கொழிந்த பயன்பாடு என ஆங்கில விக்கி கூறுகிறது. காண்க: http://en.wiktionary.org/wiki/sistren அதற்கேற்ப தமிழ் விக்சனரியில் திருத்துகிறேன். வணக்கம்!--George46 19:44, 18 ஜூன் 2010 (UTC)
  • தங்களதுsisters கண்டேன். George46 அய்யா அமைத்தது போல, (வழக்கொழிந்த பயன்பாடு) என்பதனையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும். மற்றபடி உங்களது இம்முதற்பதிவு அருமை. செல்வா அவர்களிடம் கொடிகளில் இரண்டு அல்லது மூன்று மட்டும் போதும் என சொல்ல நினைக்கிறேன். கொடிகள் குறித்து உங்களின் கருத்தென்னெ?(த*உழவன் 05:06, 19 ஜூன் 2010 (UTC))
  • த*உழவன், பவுல் என்பது என் திரைப்பெயர். அவ்வாறே அழையுங்கள். பிற மொழி விக்கிகளுக்கும் பங்களிப்பதால் அடையாள எளிமை கருதி George46 என்று கையொப்பமிடுகிறேன். அவ்வளவே. "அய்யா"வை விட்டுவிடலாம் :)--George46 13:50, 19 ஜூன் 2010 (UTC)

நிருவாகப் பொறுப்பு

தொகு

வணக்கம் பெரியண்ணன். நிருவாகப் பொறுப்பு குறித்து சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். பொதுவாக, ஒரு பயனர் இன்னொரு பயனரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிவார். அதன் பிறகு, முன்மொழியப்பட்டவர் அந்த முன்மொழிவை ஏற்றுப் பொறுப்பேற்க விருப்பம் தெரிவிப்பார். பிறரின் முன்மொழிவு இல்லாமல் ஒருவர் தன்னைத் தானே நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிந்தும் நிருவாக அணுக்கம் வேண்டலாம். இந்நிலையில், நிருவாக அணுக்கம் கொண்டு எப்படி இன்னும் சிறப்பாகச் செயல்பட இயலும் எனத் தெரிவிப்பார். அதன் பிறகு, மற்ற பயனர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பர். இது வரை, தமிழ் விக்கித் திட்டங்களில் ஒருவர் முன்மொழிய இன்னொருவர் ஏற்கும் வழக்கமே உள்ளது. இது வரையான உங்கள் விக்கிப் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. நீங்கள் இன்னும் சிறிது காலம் அன்றாடம் வந்து தொடர்சியாகவும் முனைப்பாகவும் பங்களித்து விக்கி முறைகளில் தேர்ச்சி அடையும் போது, உங்களை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புவேன். நன்றி--ரவி 11:35, 26 ஜூலை 2010 (UTC)

ரவி அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் விளக்கத்திற்கு நன்றி. இன்னும் தொடர்ந்து பங்களித்து விக்சனரியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவேன். நிர்வாக பொறுப்பை என்னைவிட மூத்த பங்களிப்பாளர்கள் தற்போது ஏற்றுக்கொள்ளட்டும். தகுந்த காலம் வரும்வரை காத்திருப்பேன். ஆகவே, நிர்வாக பொறுப்பு தேர்வில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:04, 27 ஜூலை 2010 (UTC)

  • இரவியும், நீங்களும் உரையாடுவதால் நானும் இங்கேயே தொடர விரும்புகிறேன். உங்களுக்கான ஆதரவினைச் செல்வா நேற்று, இரவி உங்களுடன் உரையாடிய பிறகு, 3மணிநேரம் கழித்து அளித்துள்ளார். நீங்கள் விலகிக் கொள்கிறேன். என்று சொன்ன பிறகு நான் என்ன செய்வதென்று புரியவில்லை. எது எப்படி இருப்பினும், நீங்கள் எனக்கு துப்புரவு பணிகளில் ஏற்கனவே தோள் கொடுத்து இருந்தீர்கள். அதே போல AWBஐ நான் கற்றுணரந்ததே, உங்களால் தான். அதே போல நான் தெரிந்து கொண்டதை, உங்களுக்குச் சொல்ல எண்ணுகிறேன். அதில் இன்னும் சந்தேகங்கள் உள்ளன. உங்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். தயவுசெய்து வாரம் ஒரு முறையாவது மின்னஞ்சலைக் காணவும்.--த*உழவன் 01:40, 27

ஜூலை 2010 (UTC)

புரிதலுக்கு நன்றி, பெரியண்ணன். செல்வா சுட்டியது போல் நிருவாக அணுக்கம் என்பது தளப் பராமரிப்பு, துப்புரவுக்கான ஒரு கூடுதல் பொறுப்பே. நிருவாகப் பொறுப்பு உள்ளவர்களின் முக்கியப் பணிகள் மூன்று: 1. தேவையில்லாத பக்கங்களை நீக்குவது 2. பொறுப்பற்றுச் செயற்படும் பயனர்களைத் தடை செய்வது. மாற்றுக் கருத்துள்ள இடங்களில் பயனர் உரையாடல்களைக் கவனித்து இந்த முடிவைச் செயற்படுத்த வேண்டும். 3. முறையற்ற தொகுப்புகளை மீள்விப்பது. எனவே, அன்றாடம் வந்து தொடர் ஈடுபாடும் முனைப்பும் காட்டும் பங்களிப்பாளர்கள் இப்பொறுப்பை ஏற்பது பொருத்தமாக இருக்கும். இது போன்ற பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் வழமை போலவே தங்கள் பங்களிப்புகளை எந்த இடையூறும் இன்றி நல்கலாம். இதில் மூத்த பங்களிப்பாளர்கள், இளைய பங்களிப்பாளர்கள் என்பதெல்லாம் இல்லை. தமிழ் விக்சனரி போன்ற வளரும் விக்கிகளில் ஒன்றிரண்டு மாதங்கள் நல்ல வகையில் பங்களித்தும் இப்பொறுப்புகளில் ஆர்வம் காட்டியும் நிருவாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். --ரவி 10:44, 28 ஜூலை 2010 (UTC)

நன்றி

தொகு

TRYPPN, நிருவாக அணுக்கம் தொடர்பாக உங்கள் ஆதரவு வாக்குக்கு நன்றி, அடிக்கடி வந்து தங்கள் ஆர்வப் பங்களிப்புகளை ஆற்றவும். பழ.கந்தசாமி 17:02, 26 ஜூலை 2010 (UTC)

திருச்சி பெரியண்ணன், நிருவாகப் பொறுப்புக்காக நீங்கள் எனக்கு அளித்த வாக்குக்கு மிக்க நன்றி. நிருவாகப் பொறுப்பு இல்லாமலே ஏறத்தாழ எல்லாவற்றையும் செய்யலாம். விக்கிப்பீடியாவிலும் சரி, இங்கு விக்சனரியிலும் சரி நான் செய்ய விரும்பும் பணிகள் அனைத்தையும் ஏறத்தாழ இப்பொறுப்பு இல்லாமலே செய்ய இயலும். இப்பொறுப்பானது பதவி பெருமை எல்லாம் ஏதும் இல்லை. சில பக்கங்களை நீக்கல் முதலான சிறப்புப் பொறுப்புகள் இருக்கும், அவ்வளவுதான். கூடிய விரைவில் நீங்களும் இப்பொறுப்பை ஏற்கலாம். விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகள் (கட்டுரைப்போட்டியில்) மிக அருமையானவை. நீங்கள் விக்சனரியிலும் தொடர்ந்து பங்களித்து பெருமை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி. --செல்வா 01:43, 27 ஜூலை 2010 (UTC)

உங்கள் அணுகுமுறை மிகவும் போற்றத்தக்கதாய் உள்ளது; நிருவாக அணுக்கம் தொடர்பாக உங்கள் ஆதரவு வாக்குக்கு நன்றி. --பரிதிமதி 04:03, 27 ஜூலை 2010 (UTC)

சென்னை + அழைப்பு

தொகு
  • பெரியண்ணன்! அகரமுதலியியல் பற்றி அறிய, சென்னைப் பல்கலைக் கழகம் வர எண்ணியுள்ளேன். முடிந்தால் உங்களின் அலைப்பேசி எண் தரவும்.இப்பொழுது உங்களுக்காக கூகுளின் அரட்டை அரங்கில் காத்திருக்கிறேன். என்னிடத்தில் காலை 8 முதல் 10வரைமின்தடை. முடிந்தால் இப்ப வாருங்கள். அல்லது 10-12.30வரைக் காத்திருக்கிறேன். ஆவலுடன்--த*உழவன் 02:11, 27 ஜூலை 2010 (UTC)
த.உழவனுக்கு வணக்கம். எனது கைப்பேசி எண்---093 360 39 139---தங்களது மடலை தற்போது தான் கண்டேன் ( 4:36 மாலை ). தாமதத்திற்கு வருந்துகிறேன். மற்றவை பின்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:15, 27 ஜூலை 2010 (UTC)
  • உங்கள் எண்ணைக் குறித்துக் கொண்டேன். வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னமே, உங்களிடம் தெரிவிக்கிறேன்.உங்களுக்கு MsExcel-லில் நன்கு பழக்கம் உண்டா? இருப்பின் தெரிவிக்கவும். நீங்கள் தினமும், நம் விக்சனரி வருவது கண்டு மகிழ்ச்சி. விரைவில் படங்களை மேம்படுத்த வழமைப் போல கைகொடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன். படங்கள் குறித்த மற்றவரின் கருத்தினையும் இங்கு நீங்கள் காணலாம். பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் என்பதற்கு முன்னுரிமை தாருங்கள். தமிழக அரசு தமிழில் பொறியியல் பட்டம் பெற்றால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சொன்னதால் போட்டாபோட்டி நடைபெறுகிறது. பங்களிப்பாளர் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. செல்வா போன்றவர்கள் இச்சொல் போல நன்கு கட்டமைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பொறியியல் சொற்கள் இன்னும் 40,50 ஆயிரங்கள் அதிகரிக்கும். மற்றவை பிறகு. நன்றி.வணக்கம்--த*உழவன் 11:48, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

தகவலுழவனுக்கு வணக்கம். தாங்கள் தொடர்பு கொண்டமைக்கு நன்றி.

  • தற்போது நான் விக்கி-மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். என்னால் முடிந்த அளவு செய்து கொண்டுள்ளேன்.
  • எனக்கு MsExcel-ல் நல்ல அனுபவம் உண்டு. அதை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று தெரிவித்தால் அதன்படி முயற்சி செய்யலாம்.
  • 25-ந் தேதி வரை மொழி பெயர்ப்பில் ஈடுபடுவேன். பிறகு தங்களுடன் கலந்து கொள்வேன்.

நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:58, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உங்களுக்காகக் காத்திருப்பேன். எனக்கு ஆங்கில அறிவு கொஞ்சம் குறைவு. அதனால் உங்களுடன் மொழிபெயர்ப்பில் உடன் வர இயலவில்லை. நீங்கள் செய்வது கண்டு மகிழ்ச்சி. 25ந்தேதி இங்கு வந்தவுடன் என்பக்கத்தில் கூறவும். நான் தானியங்கியில் முன்பை விட தேறி உள்ளேன். சுந்தர் இட்ட விதையை என்னுள் விதைத்த தை என்றும் மறவேன். மிக்கநன்றி. எனக்கும் பணி(பணம் பண்ணும்நேரம்!) நேரம் வந்து விட்டது. வருகிறேன். வணக்கம்--த*உழவன் 07:08, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

படத்தோற்ற வேகம்

தொகு

African buffalo என்ற பக்கம் தோன்றும் போது, கொடிப்படங்கள் ஒரே படமாகத் தோன்றாமல் , ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகிறது. அதன் பிறகே வலப்பக்க பெரியபடம் மெதுவாகத் தோன்றுகிறது. குறைவான இணைய இணைப்பில் செயல்படுபவர்கள், நாம் இருவரே என்பதால் உங்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு எப்படி படங்கள் தோன்றுகிறது. எனக்கு256kbps என்று கூறுகிறார்கள். ஆனால், பதிவிறக்க, பதிவேற்ற வேகம் 21முதல் 28 kbps-க்குள் மாறி மாறி அமைகிறது. இதற்கே மாதம் ரூபாய்550 வசூலிக்கின்றனர். நீங்கள் என்ன இணையச்சேவைப் பயன்படுத்தறிங்க? பணிக்கு நேரமாகி விட்டது. கிளம்புகிறேன் வணக்கம்--த*உழவன் 07:24, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

தகவலுழவனுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டபடி கொடிகள் உடன் தெரிகின்றன. மேலும் எருமைமாட்டுப் படம் முதலில் பார்க்கும் போது மெதுவாக 10 செக்கண்டிற்குள் தெரிந்தது. பிறகு அடுத்த தடவை பார்க்கும் போது உடனே தெரிகிறது.
நான் இங்கு ஏர்டெல் (Airtel) ரூ. 98 திட்டப்படி 2 -GB Limit for the month --- வரையறையுடன் பயன் படுத்துகிறேன். 460 -kbps வேகம். விவரங்களை சேவை நிறுவனங்களிடம் தெரிந்து கொள்ளவும். எனக்கு இந்த திட்டமே போதுமானதாகும். I recommend this for you. This connection is taken along with a mobile. Rest fine -----திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:28, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

உங்களின் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. நான்ICSஎன்ற நாமக்கல் நிறுவனம் (WAN method) (256kbps) Tata photon (135kbps) இரண்டை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன். இரண்டுமே அவ்வப்போது நன்கு செயல்படுவதில்லை. நீங்கள் சுட்டியபடி பயன்படுத்தி பார்க்கிறேன். இந்த வசதியைப் பெற, எத்தகைய அலைப்பேசியை வாங்க வேண்டும்? குறைந்த விலையில் குறிப்பிடவும். நன்றி.வணக்கம்--த*உழவன் 04:54, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

தகவலுழவனுக்கு வணக்கம். தாங்கள் கேட்டபடி விவரங்களைத் தருகிறேன்.
  • (1) முதலில் அங்கு ஏர்டெல்(Airtel) சேவை உள்ளதா என்பதனைத் தெரிந்து கொள்ளவும்,
  • (2) பிறகு அதன் தொடர்பு எப்போதும் உள்ளதா என்பதனையும்
  • (3) தாங்கள் இருக்கும் வீட்டுப்பகுதிகளில் சரியாக வேலை செய்கிறதா என்பதனையும் அறிந்து கொள்ளுங்கள்.
  • (4) நான் பயன்படுத்தும் அலைபேசியே சரியென்று தோன்றுகிறது. அதன் விவரம் --- Nokia xpressMusic model no. 5130C-2 Price = Rs. 5,000 (approximately) GPRS-Mobile Office --- Rs. 98 plan for 2 GB limit for the month --- Check and use in your computer before buying or Check with your friends who are using in your locality,
  • (5) அலைபேசி வாங்குவற்கு முன்பு தங்கள் கணினியில் தங்கள் வீட்டில் வேலை செய்கிறதா என்று சோதனை செய்த பிறகே வாங்கவும். நல்வாழ்த்துக்கள். வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:29, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்சனரியில் செய்ய வேண்டியவை

தொகு
    • தங்களது அலைப்பேசித் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. நீங்கள் த.இ.ப சொற்பதிவேற்றத்திட்டத்தில் இணைந்தது கண்டு மகிழ்கிறேன்.இப்பொழுது வரும் படிவமாற்றம், ஏற்கனவே இருக்கும் சுந்தர் தானியங்கி படிவத்திலிருந்து நிச்சயம் வேறுபடும். அத்தகைய வேறுபாடுகளை ஏற்கனவே இங்கிருக்கும் சொற்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. புதிய சொற்களுக்கு செய்ய வேண்டிய அனைத்துவேலைகளையும் இதற்கும் செய்யவேண்டும். எனவே, அதுபற்றி சிந்திக்கிறேன்.
படிவத்தினையே வார்ப்புருக்களுக்குள் கொண்டு வந்து விட்டால், எதிர்காலத்தில் நமக்கு பின்னே வருவோருக்கு அனைத்துப் பக்கங்களிலும் படிவ மாற்றத்தினை கொண்டு வருதல் எளிதல்லவா? இப்பொழுது செய்வது போல, ஒவ்வொரு பக்கமாக திறந்து மாற்றங்கள் செய்யவேண்டியதில்லை.10-12 வார்ப்புருக்களில் மட்டும் தேவைப்படும் மாற்றங்களைச் செய்தால் இலட்சக்கணக்கான சொற்களில், புதிய மாற்றங்களை 10-15 நிமிடங்களில் கொண்டு வந்து விடலாமே என்று எண்ணுகிறேன். இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
மேலும், மாகிருடன் இணைந்து நம்தளத்தின் விக்கிநிரல்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறேன். அவ்வசதிகள், பெருகவுள்ள நம் தளச்சொற்களை எளிமையாக நிர்வகிக்க உதவும். இப்பொழுது மேலுள்ள என் விருப்பத்தேர்வுகள் என்பதனைப் பார்க்கவும். அதிலுள்ள மாற்றங்கள் அறிமுக நிலையில் தான் இருக்கிறது. இன்னும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. எனினும், அத்தகைய மாற்றங்களுக்கு பின்னுரிமைத் தர உள்ளோம். இப்போதைக்கு த.இ.ப. சொற்பதிவேற்றத்திற்கு முன்னுரிமை தருவோம்.
உங்களது சிறப்பாக நான் கருதுவது, படமிடுதலை. ஒரு பக்கத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் போதும். குறைவான இணைய வேகத்திலும் நமது நோக்கம் சிறப்பாக அமைய இது மிக அவசியம் என்று இரவி கூறுவதல் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.பகுப்பு:ஆங்கிலம்-விலங்குகள் என்பதில் தேவையானப் படங்களை இட வேண்டுகிறேன்.{.{படம்|கோப்பின் பெயர்|விவரம்}}, {.{அடுத்தடுத்து2படங்கள்|கோப்புப் பெயர்1|கோப்புப் பெயர்2}} இரண்டாம் படவார்ப்புருக்கு விவரம் இடத்தேவையில்லை. இரண்டும் இயல்பிருப்பாக கட்டைவிரல் அளவு வரும். சில இடங்களில் படத்தின் அளவு குறைக்க வேண்டி வந்தால்,|100px போட்டுக் கொள்ளவும். (எ. கா.) dado.
பட வார்ப்புருக்கள் மூலம் ஒரு நிமிடத்திற்குள் பட அளவினை பல்லாயிரக்கணக்கான படங்களில் தேவைப்படும் அளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்பது எனது கருத்து. ஒவ்வொரு படமாத் திறந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது என்பதால், படவார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன? அறிய ஆவல்.
எக்செலில் முதலில் சொல்லின் பெயர், அதற்கடுத்த கட்டத்தில் படகோப்பின் பெயர் குறித்து வைக்கத்தவறாதீர்கள். அக்குறிப்புகள் பின்னால் தானியங்கி பதிவேற்றத்திற்கு உதவும். இது முக்கியம். முடிந்தால் எனது அலைப்பேசிக்கு( பகல்12 முதல் இரவு7மணி தவிர) தொடர்பு கொள்ளுங்கள். நான் உங்களுடன் எந்நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
திரு.பழ.கந்தசாமியுடன் இணைந்து தானியங்கி பதிவேற்றத்திற்குரிய பணிகளை ஆயுத்த நிலையில் வைத்துள்ளேன். இதுபற்றி பின்னர் பேசுவோம்.
மற்றவற்றை பிறகு பேசுவோம். அனைத்திலும் அனைவரும் செயல்படுவதை விட, நமக்குள் வேலை பிரித்து செயல் படுவோம். பிறகு, அவற்றினை தானியங்கி மூலம் ஒன்றிணைப்போம். எனினும், இங்கு நடைபெறும் கலந்துரையாடல்களை கவனிக்கவும். நன்றி. வணக்கம்--த*உழவன் 01:52, 2 செப்டெம்பர் 2010 (UTC)Reply

த.இ.ப. இறுதி வடிவ சொற்கள்

தொகு
  1. உடன் கருத்திட்டமைக்கு நன்றி. தொடர்ந்து அப்பகத்தினை கவனித்து, கலந்துரையாடக் கேட்டுக்கொள்கிறேன்.
    படிமம்:Salem airport.jpgபடத்தை வானூர்தி தளத்தில் இணைக்கலாமா? படமிடுதல் பற்றி நாம் விரிவாக #:உரையாட உள்ளோம். பல இடங்களில் விரவிக் கிடக்கும் படமிடுதல் குறித்த உரையாடல்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
  2. dado பட வர்ணனைப் பற்றி கூறியிருந்தீர்கள் மாற்றுகிறேன்.dado2வடிவமைப்பு பிடித்துள்ளது என்று கூறியிருந்தீர்கள். அக்கருத்துக்களை அதனதன் உரையாடல் பக்கத்தில் சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, அப்பக்கத்தில் உள்ள சுந்தர் தானியங்கி வடிவம் பற்றிய கருத்துக்கள் இருப்பின், அதனையும் அதன் பேச்சுப் பக்கத்தில் கூறுங்கள். முந்தைய அவ்வடிவம் ஏன் மாற்றப்பட வேண்டும்? என்று கேள்வி கருத்துக்கணிப்பில் வர வாய்ப்புள்ளது. dado2 பற்றிய எனது எண்ணங்கள்;-

  1. dove போன்ற பன்மொழி அடங்கிய சொற்களுக்கு, dado2 வடிவம் வந்தால், பல< .div> பட்டைகள் பக்கத்தில் வரும் அதனால் பக்க அழகு இப்பொழுது காண்பது போல இராது.
  2. ==குறியீடுகள் மூலம் தோன்றும் விக்கி நிரலமைப்பு,(பொருளடக்கம்-wikisyntax) தோன்றாது. <.div> பட்டைகள் அத்தகைய விக்கி அமைப்பை தராது.
  3. {.{பொருள்}} என்பதில் சுருக்கமாகவும், {.{விளக்கம்}} என்பதில் விரிவாகவும் எழுதலாம். {.{பயன்பாடு}} என்பதில் எழுதக் கூடியவற்றை விளக்கம் என்பதிலேயே எழுதலாம். அப்படி எழுதுவது ஒன்றும் பெரிய தவறாக கருத முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால், எதில் எதை இடுவது என்ற குழப்பம் வரும்.
  4. சான்றுகோள் என்பதில் dadoஆதாரங்களை எப்படி இடுவது? அவரிடமும் கேட்டேன். அவர் இன்னும் எழுதவில்லை.
  5. கொடியில் இப்படத்தினைப்(படிமம்:Flags ta.wiki.PNG)போன்று குறைவான இணையவேகத்தில் வருகிறது. நம் #:தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் இணைய வேகம் குறைவே. விரிவாக [6.4 எந்த மொழிக்கு என்ன மொழிப் பட்டி(கொடி பற்றி..) இங்கு காணவும். உங்களின் கருத்தினையும் அங்கிடவும். நன்றி.
  6. பல இணையத்தளங்களில் ஒரு நாட்டின் கொடியை அழுத்தினால் அப்பக்கமானது அக்கொடிக்குரிய மொழிபெயர்ப்பினைத் தருகிறது.இங்குள்ள படங்களை அழுத்தினால் ??
  7. இது பல இணைய அகரமுதலிகளை அடங்கிய ஒரே தளம். dado2வில் #:உள்ளது போல, இவ்வளவு கொடிகள் எங்குள்ளது? பிற விக்சனரிகளில் கூட இவ்வளவு கொடிகள் எங்குள்ளது? இதே கருத்தினை இரவியும் கேட்டிருந்தார்.எல்லாவற்றிற்கும் மேலாக கொடி என்பது அழகு என்பதனை மட்டும் குறிப்பதல்ல. அது ஒரு நாட்டின் இறையாண்மையைக்(sovereign) குறிப்பதாக நான் கருதுகிறேன். நிலாவில் காலடி வைத்த போது, கொடியை நட்டது யாருக்குப் பெருமை. ஐ.நா. கொடியை நட்டிருக்கலாமே? நாம் கார்கில் போரில் அத்துமீறியவர்களை விரட்டியவுடன், முதலில் கொடியைத்தான் அவ்விடத்தில் நம் இராணுவ வீரர்கள் நட்டனர். ஆக கொடி என்பது மற்றப்படங்களைப் போன்று, சாதரணமானப் பயன்பாட்டு மதிப்பு உடையது அல்ல. பல மொழிகள் இருக்கும் போது ஆங்கிலம் என்பதனை அடையாளப் படுத்த ஒரு கொடி இடலாம்.(எ. கா.) dove
  8. இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற சொல்லாக்கங்களில் இந்த அமைப்பு பிடித்துள்ளது.அதிலும் கூட சில இடங்களில் அதிகமானப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.தமிழ் சொற்களில் கூட மூவேந்தர் கொடிகளை இணைக்க வேண்டும். இன்று நம் தமிழை செம்மொழி என்று உலக மொழியியல் நிபுணர்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம், சங்கத்தமிழ் படைப்புகளும் ஆகும். மூவேந்தர்கள் இல்லாமல் சங்கத்தமிழா? பிறகு இது பற்றி தொடர்வோம். எப்ப வேண்டுமானாலும், அவ்வார்ப்புருவினை கருத்துக்கணிப்புக்கு பிறகு மாற்றி விட முடியும். இப்ப, த.இ.ப. சொற்களின் பதிவேற்றத்தில் கவனம் செலுத்துவோம்.

பதிவேற்றம்

தொகு

பதிவேற்றத்திற்கு பயனர்:TamilBOT என்பதில் கூறப்பட்டுள்ள csv loder பயன்படுத்த உள்ளேன். அதற்கானப் பயிற்சிகளை அதனை எழுதிய கணேஷ்(அமெரிக்காவில் வாழும் மென்பொருள் வடிவமைப்பாளார். தமிழில் ஓரளவே எழுதப்படிக்கத்தெரிந்தவர்), பல மணிநேரங்கள் தொலைப்பேசிமூலம் பயிற்சி அளித்தார். உங்களுக்கு csv loder பற்றி எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். ஏதேனும்,ஐயமிருப்பின் உடன் தெரிவிக்கவும். எனக்கு இங்கு மின்தடையும், இணையவேகத்தடையும் அடிக்கடி வருகிறது. பழ.கந்தசாமி பதிவேற்றத்திற்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளார். எனினும், நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். கருத்துக்களை விட, நடைமுறைச்சிக்கல்கள் நுட்பமானது அல்லவா? அதனால் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது அலைப்பேசி எண்ணுக்கு மதியம்1லிருந்து மாலை6மணி தவிர பிற நேரங்களில் அழைக்கலாம்.

மறவாமல் dado2வின் கருத்துகளையும், dadoவின் கருத்தினையும், அவற்றிற்கே உரிய உரையாடல் பக்கத்திற்கு இடம் மாற்றிட கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் சுந்தர் வடிவத்தினை ஏன் மாற்றவேண்டும் என்பதனையும் அதன் உரையாடற் பக்கத்தில் குறிப்பிடவும்.நூலகத்தளத்திலும் பங்களிக்கிறேன். அது குறித்து, அநேகமாக இரண்டொரு நாட்கள் வெளியூர் செல்வேன். மீண்டும் பார்ப்போம். வணக்கம்--த*உழவன் 01:22, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கூடிச் சேர்த்தால் கோடி சொற்கள்

தொகு
  • திருச்சி பெரியண்ணன் அவர்களே! உங்களைப் போன்றோரின் வேகப் பங்களிப்பால் சென்ற இரண்டு நாட்களில் 100-க்கும் மேற்பட்ட சொற்களைச் சேர்க்கமுடிந்தது. மனமார்ந்த நன்றி. பழ.கந்தசாமி 22:09, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • பழ.கந்தசாமி அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி. தற்போதய சொற்களின் எண்ணிக்கை 1,20,765 ஆகும். இதனை சீக்கிரமாக 1,21,000 -க்கு கொண்டு செல்வோம். அதற்காக தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-தமிழ் மொழி பெயர்ப்பை மட்டும் செய்கிறேன். சொல்லின் முழு வளர்ச்சியை பின்பு பார்ப்போம் என்ற எண்ணத்தில் முயற்சி செய்கிறேன். மற்றவை பின். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:39, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

படிவ வடிவ வேண்டுகோள்

தொகு

நன்றி.பெரியண்ணன். உங்கள் 2வது கருத்தால் பல விக்கிப் பக்கங்களையும் கவனிக்கிறேன்.நமது மொழிப்பட்டையின் அழகு மற்றதை விட, நன்கு உள்ளது. எனினும், சுந்தர், மாகிர் போன்றோரின் கருத்துக்களையும் அறிய ஆவல். தொடர்ந்து dadoவினைக் கண்டு, அதன் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டால் அதன் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். எனவே, தொடர்ந்து காண வேண்டுகிறேன். --த*உழவன் 23:59, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • சொல்ல மறந்து விட்டேன்.தங்களது கருத்துக்கு பின்பு,படங்களின் மூல உரையிலும் தமிழிலில் மொழிபெயர்ப்பினைச் சேரக்கத் துவங்கிவிட்டேன். --த*உழவன் 01:22, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மறுபதிவு

தொகு
  • மறந்துவிடக்கூடாது என்ற நோக்கில், இங்கு உங்களின் கருத்தினை ஒருங்கிணைத்துள்ளேன். தவறு எனின், இங்கேயேக் குறிப்பிடவும். தங்களது கருத்துக்களுக்கு நன்றி--த*உழவன் 12:53, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • தகவலுழவனுக்கு, தாங்கள் கருத்தை சரியான இடத்தில் தான் இணைத்துள்ளீர்கள். நான் தற்போது, CSV---பற்றி படித்து அதன் மூலம் எவ்வாறு சொல்லை உருவாக்குவது என்பது பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்றவை பின். வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:43, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply

புதிய சொற்களில்

தொகு

புதிய சொற்களை நீங்கள் பதிவது கண்டு மகிழ்ச்சி. எனினும், கீழ்கண்டவைகளையும் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.

  1. ஆங்கிலக் கூட்டுச்சொற்களில் சொற்பிறப்பியலுக்கான இணைப்பு பொருளற்று வருவதால் , அதனை வேண்டாமென்று எண்ணுகிறேன்.
  2. தமிழ் கூட்டுச் சொற்களில் ஆதாரங்களுக்குரிய வார்ப்புரு பொருளற்று வருவதால், பயன்படுத்தவேண்டாமென்று எண்ணுகிறேன்.
  3. பயன்படுத்தாத சொல்வளம், இலக்கிய, இலக்கணப் பயன்பாடுகளையும் பயன்படுத்தாமல் இருப்பின் அப்பக்கம் நிறைவாக இருப்பது போல் இருக்கும். வெற்றாக இருப்பதால், நம் விக்சனரியில் நிறைய குறைவற்றப் பக்கங்கள் இருப்பன போல் எனக்குத்தோன்றுகிறது. இதுபற்றியும் உங்களை எண்ணி செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்--த*உழவன் 18:50, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தானியங்கிச் சோதனை-1

தொகு

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவிக்கலாம். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:38, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

விக்கி மாரத்தான்

தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--ரவி 09:49, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

தினம்/நாள் ஒரு சொல்

தொகு

சுருக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வோம், முதல் பக்கத்தில் காட்சிக்கு வைப்பதால் பக்கத்தின் அமைப்பு மாறுபடும் அதனால் அதிகபட்சமாக தலைப்புடன் ஒன்றிரண்டு அதிகபட்சமாக நான்கு விளக்கவரிகள், ஒரு படம் என்று வைத்துக்கொள்ளலாம். ஏனைய மொழிகளின் பொருள்கள் என்று சேர்ப்பதற்கு இடம் போதாது. உங்களது கருத்து என்ன? - மாகிர் 14:37, 17 டிசம்பர் 2010 (UTC)

  • மாகிர் அவர்களுக்கு வணக்கம்.
  • இன்று, 18-12-2010, நான் முன்மொழிந்த பூண்டு பற்றிய சொல் முதல் பக்கத்தில், ஒரு நாள் ஒரு சொல் {தினம் ஒரு சொல்) பகுதியில் கண்டேன். மகிழ்ச்சி.
  • மேலும், தாங்கள் கூறியபடி, ஒரு படமும், 4 வரிகளுக்கு மேற்படாத விளக்கமும் இடுவதே சரியெனப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் மாற்றங்களைச் செய்வேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:56, 18 டிசம்பர் 2010 (UTC)
  • நீங்கள் தொடர்ந்து இப்பக்கத்தை மேம்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.இதில் வரும் (பெ) என்று அமைப்பதை {{பெ}}-->(பெ) என்று மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன். முதற்பக்கத்தில் பின்னணியில் கட்டத்தை இடப்பக்கம் மாற்றியதைக் கண்டு மகிழ்ந்தேன். நற்கீரனும், செல்வாவும் கனட தமிழ் குழாமின் மூலமாக சில ஆயிரம் சொற்களைப் பதிவேற்ற ஈடுபட்டுள்ளனர். இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. விரைவில் தமிழ்விக்சனரியின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் கூடும். வணக்கம்.--த*உழவன் 07:10, 7 சனவரி 2011 (UTC)Reply

தினம் ஒரு சொல் வார்ப்புரு

தொகு

முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் சொற்களில் பின்வரும் வார்ப்புருவை இணைத்து விடுங்கள் (தேதியை மாற்றி விட்டு). மீண்டும் ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க இது உதவும்.--Sodabottle 10:39, 11 பெப்ரவரி 2011 (UTC)

{{was wotd|2011|பெப்ரவரி|11}}

நலமா?

தொகு

கடந்த 2,3 நாட்களாக உங்களை நினைத்திருந்தேன். நல்லா இருப்பிங்கன்னு நம்புகிறேன். வணக்கம்-- உழவன் +உரை.. 07:17, 30 சூலை 2012 (UTC)Reply

ஊடக உரிம வேண்டுகோள்

தொகு

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:43, 3 சூலை 2014 (UTC)Reply

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க

தொகு

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:42, 11 சூலை 2015 (UTC) Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TRYPPN&oldid=1886805" இலிருந்து மீள்விக்கப்பட்டது