போலித்தனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
போலித்தனம் (பெ)
- உண்மையல்லாத வெளித்தோற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா! (போதுமே போலித்தனம்!, தினமணி, 28 ஆகஸ்டு 2010)
- போலீஸ் துணையுடன் மட்டுமே கருப்பு மாணவர்கள் அந்தக் கல்விக்கூடங்கள் செல்ல முடிகிறது. அங்குத் தரப்படும் பாடமோ "அனைவரும் சமம்" என்பது. எத்தனை போலித்தனமான நடவடிக்கை! (வெள்ளை மாளிகையில் - 1, அண்ணாதுரை)
- மற்றவர்களை போன்ற போலித்தனம் அவரிடம் இல்லை. மனதில் பட்டதை பேசத் தெரிந்தவர். ([1])
- வெளியே அக்கம்பக்கங்களில் சீனியின் நடத்தை விமரிசனத்துக்குள்ளாகக் கூடாது என்று கௌரவம் கட்டிக்காப்பதில், இடைநிலை வருக்கத்துக்குரிய போலித்தனமான ஒரு கருவம் அவளுக்கு இருந்தது. சீனியுடன் உரத்துக் குரல் கொடுத்துச் சண்டை போடாமல் அவள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---போலித்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +