வள்ளிசு
பொருள்
வள்ளிசு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வண்மை என்பதன் வேரிலிருந்து வருவது வள்ளிசு,
பயன்பாடு
- வீட்டில் வள்ளிசாக அரிசி இல்லை!
- வேலையை வள்ளிசாக முடிக்கவேண்டும் - the job must be neatly done.
- விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். "நறுக்நறுக்"கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான். (இடலாக்குடி ராசா, நாஞ்சில் நாடன்)
- அவன் எழுத எழுத, இனிமேல் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறதற்கு பாக்கி ஒன்றுமே இல்லை. மிச்சம் மிஞ்சாடி இல்லாமல் வள்ளிசாக எழுதியாயிற்று. (சுகாவுக்குப் பூசினது, வண்ணதாசன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வள்ளிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +