பொருள்

விம்மல்(பெ)

  1. தேம்பி அழுகை
  2. துன்பம்
  3. ஏக்கம்
  4. வீங்குகை
  5. உள்ளப் பூரிப்பு
  6. ஒலிக்கை
  7. யாழ் நரம்போசை
  8. சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் உடைய இரு அலைகள் ஊடகமொன்றில் ஒரே திசையில் செல்லும்போது ஒன்றுடன் மற்றொன்று மேற்பொருந்தினால் விம்மல்கள் உருவாகின்றன. தொகுபயன்

ஒலியின் வீச்சு, ஒரு புள்ளியில் சீரான கால இடைவெளியில் அதிகரிக்கவும்,குறையவும் செய்யும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. sobbing
  2. distress
  3. despondency
  4. being puffed up or swollen
  5. elation of spirits
  6. sounding
  7. sound of lute strings
  8. (acoustics) beat, an interference between two sounds of slightly different frequencies, perceived as periodic variations in volume whose rate is the difference between the two frequencies
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88)
  • நெஞ்சிற் சிறியதோர் விம்மல்கொண்டான் (கம்பரா. பாசப். 17)
  • உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8)
  • வீடின ரரக்கரென்றுவக்கும் விம்மலால் (கம்பரா. திருவவ. 15)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :விம்மு - தேம்பல் - சிணுங்கல் - விக்கல் - புலம்பல் - அழுகை

"https://ta.wiktionary.org/w/index.php?title=விம்மல்&oldid=1396228" இலிருந்து மீள்விக்கப்பட்டது