உபவாசம்
பொருள்
உபவாசம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fast with abstinence from food and drink, fasting
விளக்கம்
- பொதுவாக உடல்நலத்திற்காக ஏகாதசி, அமாவாசை போன்ற நாட்களில் ஒரு வேளையோ அல்லது முழு நாளுமோ அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு உணவு, நீர் உட்கொள்ளாது இருப்பதே உபவாசம் எனப்படும். ஆனால் நோயுற்றபின் அந்த நோயை குணப்படுத்தும் நோக்கோடு பட்டினி கிடப்பதற்கு 'லங்கணம்' என்று பெயர். எனவேதான் 'லங்கணம் பரம ஒளஷதம் என்பர்'. அதாவது பட்டினியே மிகச் சிறந்த மருந்து என்று பொருள். இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களே.
பயன்பாடு
- உபவாசதினம் - a day of fasting
- உபவாசம் பண்ணு - be on fast
- உபவாசவிரதம் - abstinence from food, fast
- உபவாசி - a person on a fast
- உபவசி - fast
- அம்பாசமுத்திரத்திலேயே பிறந்து, வளர்ந்தவர் சந்தானம்; ஏழ்மையான குடும்பம். சொத்து சுகம் ஒன்றும் கிடையாது. பள்ளியில் கிடைக்கிற சம்பளம், குடும்பம் நடத்தவே போதவில்லை. மத்தியானம் அவர் சாப்பிடாமல், பட்டினி கிடந்திருக்கிறார் என்பது சாரதாவுக்குத் தெரியும். ஜலபானம் கூட செய்யாமல் காலை, மாலை இரு வேளை எப்படித்தான் வகுப்பு நடத்துகிறாரோ என்று தானும் சாப்பிடாமல், விரதம் இருப்பது போல உபவாசம் இருப்பாள் சாரதா. (தன்மானம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- இதன் புனலாடி யுபவாச முஞற்றியக்கால் (சேதுபு. பலதீ. 19).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- விரதம் - நோன்பு - உண்ணாவிரதம் - உபவாசி - உபவசி
( மொழிகள் ) |
சான்றுகள் ---உபவாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற