ஊண்
ஊண் (பெ)
- உண்கை; உண்ணுதல்
- உணவு
- ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- eating
- food
- experience of joys and sorrows by the soul, as the inevitable fruits of karma
விளக்கம்
பயன்பாடு
- ஊணன் - மிக உண்போன் - glutton
- "மறுபடியும் ஊண் உறக்கம் இல்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளப் போறீங்களா?" (தொடுவானம் தொட்டுவிடும் தூரம், தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்)
- ஊண் உறக்கம் மறந்தாள்.. தன் நலம் காக்க தவறினாள்.. தன் வயிற்றில் பூத்த உயிருக்காக தன் உயிரை விருப்பமாய் பணயம் வைத்தாள். ([அம்மாவென்ற ஒரு குரலுக்காய், மஞ்சுபாஷிணி])
- ஊண் பொங்கும் நேரத்தில் உலைப்பானை கவிழ்ந்தது போலாகி (ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி!, கலைஞர் கருணாநிதி)
- ஊண் அற்றபோது உடல் அற்றது (பழமொழி)
- ஊண் மிக விரும்பு (புதிய ஆத்திசூடி, பாரதியார்)
- இனி இந்த ஊண் உயிர் நினைவில்லை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +