ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருக்கு வினைச்சொல்

  1. கருகச் செய்
  2. காய்ச்சு
  3. எரி
  4. திட்டு. (எ. கா.) ஆளைக் கருக்கிப் போட்டார்கள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. burn, scorch, tan, darken by heat
  2. toast, fry, parch, boil
  3. burn up, consume
  4. harass; abuse
விளக்கம்
பயன்பாடு
  • ...

(இலக்கியப் பயன்பாடு)

  • கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84)
  • இவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33).
  • பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய (குறுந்தொகை)

(இலக்கணப் பயன்பாடு)

  • ...

கருக்கு பெயர்ச்சொல்

பனங்கருக்குப் பகுதி
  1. ஆயுதப் பற்கூர்
  2. பனைக்கருக்கு
  3. இலையின் கருக்கு
  4. கூர்மை
  5. புத்திக்கூர்மை
  6. நேர்மை
  7. பனங்காய்த்தோற் கருக்கு
  8. கருக்குக் கசாயம் - பல மருந்துச் சரக்கை கருக்கி காய்ச்சிய கசாயம்
  9. போதைப் பொருள். கஞ்சாக் கருக்குவகை (அழகர்கல. 41)
  10. பொறித்த சித்திரம்
  11. புதுமை. பாத்திரம் கருக்கழியவில்லை
  12. சுத்தம். அவன் காரியமெல்லாம் கருக்காயிருக்கும்
  13. அழகு. கருக்குச் சரி கைக்கச்சை (கவிகுஞ். 4)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. teeth of a saw, of a sickle; sharp edge of a newly ground cutting instrument
  2. jagged edge of the palmyra leaf stalk
  3. jagged indentation of leaves
  4. sharpness
  5. keenness of intellect
  6. strictness, accuracy, correctness
  7. external rind of palmyra fruit which dries and peels off in flakes
  8. decoction in water of several charred drugs
  9. narcotic drug, as hemp
  10. engraving, carving, embossed work
  11. newness, freshness
  12. neatness, tidiness
  13. beauty
விளக்கம்
  • கருக்கு என்றால் பனமட்டையையும், கருக்கு அருவாளையும் தான் பலருக்கு தெரியும். கருக்கு என்றசொல்லுக்கு இளநீர் என்ற பொருளும் உண்டு. அவன் தென்னை மரத்தில் ஏறி கருக்கு பறித்துப் போட்டான் என எழுதும்போது கருக்கு என்பது இளநீர் என்பதை வாசகன் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன் (சொற்கள், நாஞ்சில் நாடன்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கருக்கின் . . . போந்தை (குறுந்தொகை. 281)
  • கருக்கு வாளருள் செய்தான் (தேவாரம். 135, 8)
  • வட்டில் ஒன்று கருக்கிரண்டும் சிங்கபாத மிரண்டும் உட்பட ((S. I. I.) ii, 5)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கருக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற


கருகு - எரி - காய்ச்சு - கூர்மை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருக்கு&oldid=1270384" இலிருந்து மீள்விக்கப்பட்டது