காப்பரிசி
பொருள்
காப்பரிசி (பெ)
- பிறந்த குழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி
- திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி
- கிறித்து பிறந்த பதின்மூன்றாம் நாள் உற்சவத்தில் கோயிலில் வழங்கும் பாகு கலந்த அரிசி
ஆங்கிலம் (பெ)
- rice mixed with treacle generally distributed on the occasion when a new-born baby is provided with bangles, etc.
- rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil
- rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the Nativity
விளக்கம்
பயன்பாடு
- கோயிலில் பிரதோஷத்தின்போது, மூலவர் எதிரில் இருக்கும் நந்திக்கு மட்டும்தான் அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டுமா? கொடிமரம் அல்லது முகப்பு மண்டபத்தில் இருக்கும் நந்திதேவருக்கு நைவேத்தியம் (காப்பரிசி) சமர்ப்பித்து ஆராதித்தால் போதுமா? அல்லது, அவருக்கும் விரிவான வழிபாடுகள் நடத்த வேண்டுமா? (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், ஜூனியர் விகடன், 06-மார்ச் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காப்பரிசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +