சுயம்பு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சுயம்பு, பெயர்ச்சொல்.
- தான்தோன்றி; தானாக உருவானது; தானாக உண்டானது
- கடவுள்
- பிரமன்
- அருகன்
- இயற்கை
- சுவச்சம். சுயம்பான நீலம்
- மடையன். பையன் சுயம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- self-made; self-existent being, anything considered to be uncreated
- God
- Brahma
- Arhat
- peculiarity, nature
- genuineness, reality
- idiot
விளக்கம்
பயன்பாடு
- தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான "காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக்கொண்டார். (தமிழ் முழக்கம்' செய்த கவி.காமு.ஷெரீப், தமிழ்மணி, 31 ஜூலை 2011)
- ராமானுஜன் போன்றவர்கள் வேறு தளம் வேறு நிலை என்பது உண்மையே.ஆனால் அவரும் சுயம்பு அல்ல. அவருக்கும் கணிதத்தில் சுவை ஊட்டிய ஒரு ஆசான் உண்டு. (புதுமைப்பித்தனின் வாள், ஜெயமோகன்)
- சேரியே கலகலத்தது. சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். (மாடன் மோட்சம், ஜெயமோகன்)
- ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 5 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுயம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +