மடையன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மடையன் (பெ)
- அறிவிலி; அறிவீனன்
- சமையற்காரன்
- நீர்மடை திறப்போன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
சொல்வளம்
தொகு- மடமை
- மடச் சாம்பிராணி - A complete idiot
விளக்கம்
பயன்பாடு
- விவரம் கெட்ட முழு மடையனைப் பார்ப்பது போல ஏளனம் பொழியும் முகத்துடன் என்னைப் பார்த்தார் ([1])
- இந்த நாட்டில் தேர்வுகளில் வெற்றி பெற எவனுக்கும் அறிவே தேவையில்லை. முந்தைய பத்தாண்டுகளின் கேள்வித்தாள்களே போதும் அதற்கான பதில் தயாரித்துக் கொண்டால் எந்த மடையனும் இந்த நாட்டில் பட்டம் வாங்க முடியும். முதல் வகுப்பு முட்டாளாக முடி சூடிக் கொள்ள முடியும். (வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்)
- அவர்கள் கணிப்பது போன்று, மக்கள் மடையர்களும் அல்லர்; ஏமாளிகளும் அல்லர்.(புதிய அரசியல் பித்தலாட்டம், கறுப்பி)
(இலக்கியப் பயன்பாடு)
- மடையர் பொருள் பெறமருவிகள் (திருப்பு. 828).
- மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56)
(இலக்கணப் பயன்பாடு)
- மடையன் X அறிவாளி
- மடையன் X புத்திசாலி
ஆதாரங்கள் ---மடையன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +