திருகுதாளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருகுதாளம்(பெ)
- பேச்சு, செயல் முதலியவைகளில் புரட்டு; மாறாட்டம்; பித்தலாட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மரியதாஸ் யேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான். (பாதை எங்கே ?, சந்திரவதனா செல்வகுமாரன், திண்ணை)
- எப்படி தரக்குறைவான சரக்குகளை வாங்கி, வாயினிக்கப்பேசி, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதென்ற அனுபவம் – தில்லு முல்லு! திருகுதாளம்! ஏனென்றால் காசிம்பாயின் வியாபார தர்மமே அதுதான். ([1])
- படிப்பது தேவாரம்! இடிப்பது சிவன் கோயில்!!ஆனந்தசங்கரிக்கு ஏனிந்த திருகுதாளம்? ([2])
(இலக்கியப் பயன்பாடு)
:புரட்டு - வஞ்சகம் - இரண்டகம் - சூது - தில்லுமுல்லு - பித்தலாட்டம்
ஆதாரங்கள் ---திருகுதாளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +