பயத்தங்கஞ்சி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பயத்தங்கஞ்சி, பெயர்ச்சொல்.
- (பயத்தம்+கஞ்சி)
விளக்கம்
தொகு- பயத்தங்கஞ்சி தமிழ்நாட்டின் ஒரு சம்பிரதாயமான உணவு...இரவு வேளைகளில்,அரிசிச்சோற்று உணவைத் தவிர்க்க விரும்புவோருக்கும், நோன்பு நாட்களில் ஒரு பொழுது இருப்போருக்கும், பிணியுற்றவர்களுக்கும்,முதியவர்களுக்கும் சிறந்த உணவு...இலகுவாகச் செறிக்கக்கூடியதும், மிகுந்த உட்டச்சத்துக்கொண்டதும், சுவைமிகுந்ததுமான இந்த உணவைத் தயாரிப்பதும் மிக எளிது...பாசிப்பருப்பு எனப்படும் பயத்தம்பருப்பை நன்றாகக் கழுவி, நீர்விட்டு வேகவைப்பர்...பருப்பு நன்றாக வெந்துக் குழைந்ததும் போதிய அளவு வெல்லப்பொடியை அதில் சேர்த்து கிளறிக் கலந்து, நீர்ப்பதமாக இருக்கும்போதே அடுப்பிலிருந்து இறக்கிவிடுவர்...வாசனைக்கு சிறிது ஏலக்காய்ப் பொடியைப் போட்டு, விரும்பினால் கொஞ்சம் நெய் சேர்ப்பர்...ஒரு மாறுதலுக்காகபண்டிகை நாட்களிலும் இந்தக் கஞ்சி செய்யப்படுகிறது...குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் விருப்பப்படும் இதை பயத்தம்பருப்பு பாயசம் என்றும் கூறுவார்கள்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A porridge or gruel made of greengram dal, jaggery, cardamom powder and ghee.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +