விக்சனரி:தினம் ஒரு சொல்/மே 11

தினம் ஒரு சொல்   - மே 11
கொம்பன் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. கொம்புள்ள விலங்கு
  2. (இளக்காரத் தொனியில்) சமர்த்தன்
  3. வசூரி அல்லது பேதி வகை
  4. மீன் வகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. tusked or horned animal
  2. clever man, used ironically
  3. a kind of cholera or small-pox
  4. a kind of fish

1.3 பயன்பாடு

  • முல்லை நில வாழ்க்கையில் மாடு குறிப்பாக பசு அவனுக்கு பலவகையில் உதவியாக இருந்தது. மாட்டு மாமிசமும் பசுவின் பாலும் அவனுக்கு உணவாக பயன்பட்டன. மாடு அவனுடைய வண்டியை இழுத்துச் சென்றது. அவன் அதன் தோலில் தாளக் கருவி செய்து கொண்டான். ஆடை தயாரித்துக்கொண்டான். அதன் பற்களின் எலும்புகளில் ஆபரணம் செய்து கொண்டான். அதன் கொம்புகளில் குவளை செய்து கொண்டான். அடக்க முடியாத காட்டுக்காளையை அடக்கியவன் அல்லது கொன்றவன் அதன் தலையை படம் செய்து மகுடமாக அணிந்து கொண்டான். அத்தகைய வீரமுடையவனை அவன் இனம் தலைவனாக ஏற்றது. நீ என்ன பெரிய கொம்பனா என்ற சொலவடை இப்படித்தான் வந்தது. (சோனகத்தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம் 20, இத்ரீஸ்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக