கொம்பன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொம்பன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tusked or horned animal
- clever man, used ironically
- a kind of cholera or small-pox
- A kind of fish
- வல்லவன், திறமைசாலி
விளக்கம்
பயன்பாடு
- கொம்பன் சுறா
- எஜமான் அவரது செல்ல யானையாகிய கொம்பன் கொச்சய்யப்பனை காலையில் கொஞ்சநேரம் கொஞ்சுவதுண்டு. அதைக் காலையில் அவரது வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து கட்டி மாலையில்தான் கொண்டு செல்வார்கள். அன்றெல்லாம் வீட்டுமுகப்பில் ஒரு கொம்பன் யானை காதாட்டி நிற்பது ஐஸ்வரியம் என்று கருதப்பட்டது . (வணங்கான், ஜெயமோகன்)
- முல்லை நில வாழ்க்கையில் மாடு குறிப்பாக பசு அவனுக்கு பலவகையில் உதவியாக இருந்தது. மாட்டு மாமிசமும் பசுவின் பாலும் அவனுக்கு உணவாக பயன்பட்டன. மாடு அவனுடைய வண்டியை இழுத்துச் சென்றது. அவன் அதன் தோலில் தாளக் கருவி செய்து கொண்டான். ஆடை தயாரித்துக்கொண்டான். அதன் பற்களின் எலும்புகளில் ஆபரணம் செய்து கொண்டான். அதன் கொம்புகளில் குவளை செய்து கொண்டான். அடக்க முடியாத காட்டுக்காளையை அடக்கியவன் அல்லது கொன்றவன் அதன் தலையை படம் செய்து மகுடமாக அணிந்து கொண்டான். அத்தகைய வீரமுடையவனை அவன் இனம் தலைவனாக ஏற்றது. நீ என்ன பெரிய கொம்பனா என்ற சொலவடை இப்படித்தான் வந்தது.. (சோனகத்தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம் 20, இத்ரீஸ்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +