ஆளி
ஆளி (பெ)
- ஆள்பவன்
- சொல்லின் இறுதி. எ.கா: வில்லாளி, உழைப்பாளி
- செடி வகை
- கிளிஞ்சல் வகை
- துதிக்கையும் சிங்க உடலும் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யாளி என்ற மிருகம்
- சிங்கம்
- துர்க்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who rules or controls
- part. Sing. ending of rational nouns, denoting master of, possessor of
- linseed plant, s. sh., Linum usitatissimum
- oyster, ostrea edulis
- a fabulous animal with the trunk of an elephant and the body of a lion
- lion
- switch
விளக்கம்
பயன்பாடு
- நத்தை மற்றும் கிளிஞ்சல்களை, ஐரோப்பிய நாட்டவர் வேக வைத்தும், பச்சையாகவும் சாப்பிடுவர். ஆளி மற்றும் சிப்பிகளின் சாற்றில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் பொருள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மூட்டு வீக்க நோய்க்கு, ஆளிகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. (கடல்வாழ் உயிரினங்களின் மருத்துவப்பயன்கள், தினமலர், 25 அக். 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- நாராய ணன் என்னையாளி (திவ். இயற். நான்மு. 14).
- ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந. 139)
- ஆளிக் கொடி யேந்திய தங்கை (தணிகைப்பு. நாட்டுப். 60)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +