குறுக்கு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குறுக்கு(வி)
- குறையச்செய். குறை
- செலவைக் குறுக்கவேண்டும்
- பெரிதாக உள்ளதை, வசதிக்காகச் சிறியதாக மாற்று, சுருக்கு
- அந்தநூலைக் குறுக்கியெழுதுக
- நெருங்கச்செய்
- திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).
- சமீபமாகு
- திருநாவாய் எத்தனையிடம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றார்களாய் (ஈடு, 9, 8, 1).
(பெ)
- நெடுமைக்கு மாறான அகலம்
- இடையில் உள்ளது; திரியக்கு
- குறுக்களவு, விட்டம்
- நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிக. சிவ. அக.17).
- குறுமை
- நீண்டநெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பர. 13).
- சுருக்கம்
- மாறு, எதிர், தடை
- அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன்
- இடையீடு
- இடுப்பு, இடை
- குறுக்கு சிறுத்தவளே! என்னைக் குங்குமத்தில் கரைச்சவளே! - திரைப்பாடல்
- மண்வெட்டியால் மண்ணை வெட்டுபவனுக்கு குறுக்கு கடுக்கிறது என்று நிமிர முடியவில்லை. சுமப்பவனுக்கு கழுத்து வலிக்கிறது என்று நிற்க முடியவில்லை. ('உடைப்பு, நாஞ்சில்நாடன்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (வி)
- shorten, curtail, reduce, contract, lessen, retrench (இந்தி- छोटा करना)
- abbreviate, abridge, epitomise, abstract
- cause to draw near, bring within easy reach
- be near, close by
(பெ)
- transverseness, breadth
- that which is across, transverse, in a cross direction
- diameter
- shortness of distance
- contraction
- opposition, objection, hindrance
- intervention
- hips, loins
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- குறு, குறுகு, குறுமை, குறுக்கம், குறள், குறளன், குறுக்களவு, குறுக்குவெட்டு, குறுக்குச்சந்து, குறுக்குவழி, குறுக்கீடு, குறுக்கிடம்
- குறுக்கடி, குறுக்கிடு, குறுக்குக்கேள்வி, குறுக்குவினா, குறுக்குச்சட்டம்m குறுக்குச்சுவர், குறுக்குப்பாதை, குறுக்குப்பாட்டை, குறுக்குவெட்டி
- குறுக்கே, குறுக்கே பேசு, குறுக்கே வா, குறுக்கே போ, குறுக்கே விழு, குறுக்கே மடக்கு, குறுக்கே தடு, குறுக்கே முறி
- குறுக்கும்மறுக்கும், குறுக்கும்நெடுக்கும்
- குறுக்குக்கட்டு, குறுக்குச்சார், குறுக்குப்பாடு, குறுக்கடிநியாயம், குறுக்கடியாயடி
- குறுக்குப்புத்தி, குறுக்குச்சூத்திரம்
- சுருக்கம், குறுக்கம், அஃகுப்பெயர்
ஆதாரங்கள் ---குறுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சாலை