தகை
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தகை(பெ)
- பொருத்தம்
- காண்டகைய செல்வக் கடம்பவனத்து (குமர. பிர. மதுரைக். 96.)
- ஒப்பு
- புலித்தகைப் பாய்த்துள் (தொல். பொ. 287, உரை)
- மேன்மை, சிறப்பு, மேம்பாடு
- தகைமாண் குடுமி (புறநா. 6,26)
- பெருமை
- அருள்
- அன்பு
- அழகு
- தாடோய் தடக்கைத்தகைமாண்வழுதி (புறநா. 59, 2)
- நன்மை
- தகைசான்ற சொற்காத்து (குறள்.56)
- குணம்
- இயல்பு
- பொருகளி றன்ன தகைசாம்பி (கலித்.60)
- நிகழ்ச்சி
- போனான் வனமென்னுந் தகையுமுணர்ந்தார் (கம்பரா. தைல. 84)
(பெ)
- கட்டு
- தகைமலர்த் தாரோன்(மணி. 24, 175)
- மாலை
- முகைவாயவிழ்ந்த தகைசூ ழாகத்து (திருமுரு. 139)
- தடை
- மணஞ்செய்வதற்கு நின்னாற் றகையிலை யென்னின் (பிரபோத. 8,11)
- கவசம்
- தளர்ச்சி
- தகைதீர் சிலம்பாறு(அழகர்கல. 47)
- தாகம்
- மூச்சிழைப்பு
(வி)
- தடு
- தருதல் தகையாதான் மற்று (கலித். 92, 9)
- ஆணையிட்டுத் தடு
- பிடி
- தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத. அருச்சுனன்றீர். 70)
- அடக்கு
- ஆழிதகைந்ததனுத்தொழிலான் (கம்பரா. அதிகாய. 62)
- உள்ளடக்கு
- தண்கேணித் தகைமுற்றத்து (பட்டினப். 51)
- பிணை
- ஒத்திரு
- தளர்
(வி)
- தடு
- நின்னைத்தகைத்தனென் (கலித். 108, 20)
- கட்டு
- நுண்கோற்றகைத்த தெண்கண்மாக்கிணை (புறநா. 70, 3)
- சுற்று
- தகைத் தார் (புறநா. 69)
- வாட்டு
- அரி
- மயிரிற் றகைத்து வறுத்தெரித்திடிப்பினும் (ஞானா. 31, 10)
- நெருங்கப்பெறு
- சனத்தினாற் றகைத்திடம்பெறாது (சீவக. 825)
- களைப்படை
(v)
- அழகு பெற்றிரு
- பிடவுமுகைதகைய (ஐங்குறு. 461)
- தகுதியுடையவன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
- fitness, suitability, propriety
- likeness, resemblance
- worthiness, excellence
- greatness, superiority, dignity
- mercy, grace
- love, affection, kindness
- beauty, loveliness
- goodness
- quality, character
- nature
- fact, event
(n)
- binding,fastening
- garland
- obstruction, check, hindrance
- armour, coat of mail
- weariness, faintness
- thirst (colloq)
- shortness of breath, difficulty of breathing
(v)
- stop, resist, check, deter
- obstruct or forbid by oath
- seize, take hold of
- overpower, subdue
- shut in, enclose, include
- bind, fasten, yoke
- resemble
- falter, faint, be weary
(v)
- check, resist, stop, deter
- bind, fasten
- wind round, coil
- tease, tire out
- mince
- be crowded
- be fatigued ,wearied
(v)
- be beautiful, lovely
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேண்டா மையின் மென்மெல வந்து
- வினவலுந் தகைத்தலுஞ் செல்லா ளாகி (நற்றிணை 308) - நான் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றாய் என்று கேட்காமலும் போகவேண்டாம் என்று தடுக்காமலும்
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகு- வோய் அமை வரை என்பன குறிக்கும் ஒரு சொல்
தருதலை
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +