கள்ளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கள்ளி (பெ)
- திருடி
- கள்ளி என்ற செடி வகை
- திருகுகள்ளி
- இலைக்கள்ளி
- சதுரக் கள்ளி
- மண்டங்கள்ளி
- சப்பாத்திக் கள்ளி
- சாதிக்காய்மரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a female thief
- spurge, euphorbia
- milk-hedge
- five-tubercled spurge
- square spurge
- cement plant
- common prickly pear
- fir, deal-tree
விளக்கம்
பயன்பாடு
- கள்ளிக் காட்டு இதிகாசம் - An epic from spurge forest
- அவளைப் பார்த்தியா? கள்ளி.... எல்லாம் நடிப்பு, மாய்மாலம் ( வளவு)
- வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். ( காமக் குரங்கு, அண்ணாதுரை)
- தன்னைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்திடவே இந்தக் கள்ளி அமர்த்தப்பட்டிருக்கிறாள் என்பதை அவன் உணரவில்லை. கள்ளி என்றா எண்ணிக் கொண்டான், கற்கண்டு, பாகு, தேன் என்று அல்லவா எண்ணிக் கொண்டான் ( வெள்ளை மாளிகையில், அண்ணாதுரை)
- கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண்முன், நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோம் (இரும்பு முள்வேலி, அண்ணாதுரை)
- "அடி கள்ளி! நீ நல்ல நினைவோடுதான் இருந்தாயா?" என்றாள் குந்தவை. "கண்ணை மூடிக்கொண்டு மூர்ச்சையடைந்தது போல் ஏன் பாசாங்கு செய்தாள் என்று கேள், அக்கா!" என்றான் பொன்னியின் செல்வன். ( பொன்னியின் செல்வன், கல்கி)
- கள்ளி, முள்ளி முதலிய பாலை நிலத்து மரங்கள் இடையிடையே வளர்ந்திருந்தன ( வெற்றி முழக்கம் (உதயணன் கதை), தீபம் நா. பார்த்தசாரதி)
- வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம் (பழமொழி)
- என்னென்னமோ சொல்லி என் மனதை கிள்ளி
- இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி...ஹேய்...
- இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி.
- பருவம் வந்து துள்ளி உருகுறாளே வல்லி...
- மானைத் தேடி மச்சான் வரப் போறான் (பாடல்)
- சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி. திருகு கள்ளி பாலெடுக்க திரிஞ்செனடி சிலகாலம் ( ஈராறு கால்கொண்டெழும் புரவி – 4, ஜெயமோகன்)
- கள்ளிப்பெட்டியில் சீமைச் சாமான்கள் வரும்
(இலக்கியப் பயன்பாடு)
- கள்ளியங் கடத்திடை (ஐங்குறு. 323)
- கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல் (பழமொழி நானூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +