சிரட்டை
சிரட்டை (பெ)
- கொட்டாங்கச்சி, தேங்காயோடு
- பிச்சைக் கலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- coconut shell
- begging bowl, the hard shell of the coconut
விளக்கம்
பயன்பாடு
- பதநீரைக் கூழாக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்பட்டி, கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில நாள்களில் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம் (வீணாகும் பனைமரங்கள்! குமரி அனந்தன், தினமணி, 21 டிச 2010)
- "பறிச்ச முழுத்தேங்காயைத் தேங்காய் வெட்டும் கருவியில் வெச்சு அழுத்தினா... தேங்காய் ரெண்டா பொளந்துடும். மட்டையை உரிக்காமலே... பருப்பை எடுத்துடலாம். மட்டை மற்றும் சிரட்டை ரெண்டும் பிரிக்காம இருக்கறதால, இந்த மட்டையிலருந்து நார் எடுக்க முடியாது. எரிபொருளுக்குத்தான் விற்பனை செய்ய முடியும்". (தேங்காய் வெட்டும் கருவி, பசுமை விகடன், 10-மார்ச் -2012)
- சிரட்டைக்கண் - the hole or eye of a coconut shell
- சிரட்டை கொண்டு திரி - go begging with a coconut shell
- நான் சிரட்டையும் கையுமானான். - He became a beggar
- சிரட்டை பற்றாத குரும்பை - young coconut on with an unformed shell
- சிரட்டை முற்று - maturing of a coconut shell
- சிரட்டை மோதிரம் - rings of talipot/palm shells
- அடிச்சிரட்டை - thick half, or bottom of a coconut shell, used as a vessel
- இரட்டைச்சிரட்டை - a shell with a scaly lining, literally, a double shell
- கண்சிரட்டை - the half or top of the cocoa-nut shell--often burnt to prevent the blight of the eye
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிரட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +