துரும்பு
பொருள்
துரும்பு(பெ)
- கூளம், திரணம்
- வையுந் துரும்பு நீக்கி(பெரும்பாண். 239)
- சக்கை
- துரும்பெழுந்து வேங்கால் (நாலடி, 35)
- சிராய்
- கண்ணுக்கு மை இடுங் கருவி
- கண்ணுக்கிய ஒரு துரும்பில்லாதபடி அழிந்து (ஈடு, 5, 6, 1)
- ஒரு சாதி
- துருப்பு - சேனை, படை, சீட்டுத்துருப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bits of straw, sliver, anything tiny/small/insignificant
- refuse stalks, as of sugarcane
- splinter
- brush for painting eye
- a caste
- troop, army, trumpcard
விளக்கம்
பயன்பாடு
- சிறு துரும்பும் பல் குத்த உதவும் - பழமொழி
- அவன் துரும்பாக இளைத்துவிட்டான் - he has become very thin
- மகனே, நீ என் சொற்படி நடக்காவிட்டால் என் சொத்தில் ஒரு துரும்பைக் கூடக் கொடுக்கமாட்டேன்.
- அவன் கஞ்சன். அவனிடமிருந்து ஒரு துரும்பைக் கூட வாங்கமுடியாது.
- அவன் துரும்பைத் தூணாக்குகிறான். - he exaggerates the little fault. (literally, he makes a pillar of the straw)
- இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துரும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +