தெற்று
தெற்று(வி)
பொருள்
- இடறு. தெற்றுகாலின ரோடி னர் (உபதேசகா. சிவவிரத. 139)
- தடைப்படு. இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற் றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39)
- மாறுபடு
- பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3)
- முறுக்கிக்கொள் . தெற்று கொடி முல்லையொடு (தேவா. 622, 6)
- இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று (திருவாலவா. 30, 23)
- திக்கு, வாய் கொன்னு; (வார்த்தை, பேச்சு) தடுமாறு (பேசும்போது சொற்கள் தடைபட்டு, முழு ஒலிப்புப் பெறாதிருத்தல்)
- செறி. கற்றவர் தெற்றிவர (திவ். பெரியாழ். 1, 5, 8)
- மோது. தெற்று வெண்டிரைச் சரையு (உபதேசகா. சிவ நாம. 135)
- அலைத்தல். தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க (தேவா. 46, 8).
- தடு பிணப் பெருங் குன்றந் தெற்றி (கம்பரா. சம்புமாலி. 19)
- மாற்று இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ.அலங். 18, உரை)
- பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகள் (கம்பரா. கரன். 104)
- பின்னு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி.)
- தொடு. ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் (பெருங். வத்தவ. 7, 26)
- இறுக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stumble
- be obstructed, hindered
- be perverse, obstinate
- mistake, commit a fault, do wrong
- become intertwined
- quarrel
- stammer in speaking, stutter
- throng; be dense, crowded
- beat, strike
- disturb, shake
- obstruct, hinder
- change
- gnash, grind, as the teeth
- braid, plait, entwine, weave
- string up, tie together
- tighten
விளக்கம்
பயன்பாடு
- அவர் தெற்றிப் பேசியது தெளிவாகத் தெரிந்தது
தெற்று(பெ)
பொருள்
- பின்னுகை, சிக்கல்
- இடறுகை, தடுமாற்றம்
- வேலியடைப்பு
- செறிவு தெற்றார் சடைமுடியான் (திருவாச. 34, 5)
- மாறுபாடு
- தவறு
- தேற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- entwining
- tripping; stutter
- hedge of thorns protecting a passage
- denseness
- perversity
- mistake, wrong
- certainty, ascertainment, assurance, persuasion, confidence
விளக்கம்
பயன்பாடு
- சூடாகத் தலைக்கு நான்கு இடியாப்பம் பரிமாறினான். தொடுகறியாகத் தேங்காய்ச் சட்டினியும் புளிசேரியும் தூக்குவாளியில் சர்வர் கொண்டு வந்தபோது, ஒருவர் மற்றவரிடம் கேட்டார், ”எலே, இதை எப்பம் தெத்து எடுத்து எப்பம் தின்னியது?”. தெத்து எடுப்பது எனில் தெற்று எடுப்பது. தெற்று எனில் சிக்கல் மீன் பிடிக்கக் கடலுக்குள் போய், மடி கரை வந்ததும், மீன் இறக்கி, பின் குளித்து, உண்டு, உறங்கி, முன் மாலையில் பின் வெயிலில் கடற்புற மணலில் ஓய்வாக உட்கார்ந்து, உல்லாசாமாகப் பேசிக் கொண்டே பரவர் வலையில் தெற்று எடுப்பார்கள். வலையின் சிக்கலைச் சரிபார்ப்பது இடியாப்பச் சிக்கலை அவிழ்ப்பதற்கு உவமை (அக்கரை ஆசை, நாஞ்சில்நாடன்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +