படமும் வேகமும் தொகு

புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாண்டில் நம் விக்சனரியும் நாமும் மென்மேலும் வளர்வோம். படமும் வேகமும் குறித்து TRYPPN என் கருத்துப் பற்றி உங்கள் கருத்தையும் அங்கு தருக. பழ.கந்தசாமி 01:17, 1 ஜனவரி 2010 (UTC) பழ.கந்தசாமி 01:17, 1 ஜனவரி 2010 (UTC)

விக்கி ஊடக நடுவப்படம் தொகு

  • உங்கள் சுறுசுறுப்புக்கு ஒரு பலே. நான் பதிவேற்றிய படம் வெட்சிப்பூவினுடையது தான்; இப்போது தான் காமிரா வாங்கினேன். ஆர்வக்கோளாறில் சில படிமங்களைச் சேர்த்து வருகிறேன். உங்கள் அளவிற்கு நேர்த்தியெல்லாம் எதிர்பார்க்காதீங்க. மற்றபடி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். -- பரிதிமதி 13:46, 01, சனவரி 2010 (இந்திய நேரம்)
    • அய்யய்யோ! பூவினொடு இருக்கும் நார் நான். நிழற்படக் கருவி வாங்க எனக்கும் ஆசையுண்டு. அதனால், அதுபற்றி பலரிடம் விசாரிக்கிறேன். விக்கிப்பீடியாக் கட்டுரை எழுதவே வந்தேன். விக்கிப்பீடியா அதிக நிர்வாக அமைப்பு உடையதால், இங்கு பதுங்கி இருக்கிறேன். அங்கு நிர்வாகி ஆக, எனக்குக் கொஞ்சம் ஆர்வமுண்டு. எனினும், இங்கேயே தடுமாறுகிறேன். படிமப் பதிவேற்றம் பற்றி விக்கி2010 ஆண்டறிக்கையில், விரிவாக எடுத்துரைத்துள்ளேன். நிர்வாகிகளுக்குத் தர வேண்டிய விக்கியிடை நிர்வாகப்பயிற்சியைப் பற்றியும் வழியுறுத்தி உள்ளேன். த*உழவன் 12:25, 1 ஜனவரி 2010 (UTC)

தொடர்பு கொள்ளவும் தொகு

உங்கள் தொலைப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து 99431 68304 என்ற என் எண்ணுக்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். நன்றி. அன்புடன், --ரவி 18:36, 11 ஜனவரி 2010 (UTC)

தமிழ்ப் பக்க வடிவம் தொகு

தமிழ்ப் பக்க வடிவம் தொகு

வெகுவேகமாக சொற்களைச் சேர்த்து (ஒரே நாளில் நூறா?) வருவதற்குப் பாராட்டு! TRYPPN அவர்களின் குறவன், குறத்திக்கான பக்கங்களைப் பார்த்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பு மிகக் கீழே உள்ளது. பொருள் தேடி வருவோர் மொழிபெயர்ப்பு எங்கே என்று பக்கத்தில் தேடவேண்டி இருந்தால், அவர்கள் விரைவில் அதைக் கண்டுபிடிப்பதில் பொறுமை இழக்க வாய்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்பு மேலே இருத்தல் நலம் என்பது என் கருத்து.

முரடன் பக்கத்தை நான் நேற்று த*உழவனின் ஒரு அண்மைய பக்கத்தைப் பார்த்துச் செய்தேன்.

த*உழவனே!, நாம் அனைவரும் ஒரே வடிவைத் தேர்ந்தெடுக்க தமிழ் சொற்களுக்கு எதை முன்மாதிரியாக வைப்பது? குறவன் சொல்லின் பேச்சுப் பகுதியில் உரையாடலாமா?

பழ.கந்தசாமி 04:09, 12 ஜனவரி 2010 (UTC)

எசுப்பானிய வடிவம் தொகு

எசுப்பானிய வடிவில் cangrejo பார்த்துக் கருத்தைச் சொல்லவும். பழ.கந்தசாமி 04:11, 12 ஜனவரி 2010 (UTC)

இத்தாலி அருகில்! தொகு

இத்தாலி இன்னும் 20 வார்த்தைகளில் தொகு

இத்தாலியப் பதங்களின் எண்ணிக்கை 102622! :) பழ.கந்தசாமி 07:03, 12 ஜனவரி 2010 (UTC)

  • வழிகாட்டியமைக்கு நன்றி. நானே உங்களின் தானியங்கி. எனக்குள் மகிழ்ந்து நீண்ட நாட்கள் ஆகிறது. உளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.த*உழவன் 07:07, 12 ஜனவரி 2010 (UTC)
  • எனக்கும் உங்கள் ஆர்வம்கண்டு மிக்க மகிழ்ச்சி. ஒரு பக்கத்தின் அக இணைப்புச் சுட்டும் பக்கம் இல்லையென்றால் கொஞ்சநாட்களில் மீண்டும் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது; பக்கத்தின் ஒரு அக இணைப்பாவது இருக்கவேண்டும்/இயங்கவேண்டும். அதனால் சிவப்பு இணைப்புகள் வரும் பக்கத்தில் சிறப்புக்கவனம் தேவை. நன்றி பழ.கந்தசாமி 07:13, 12 ஜனவரி 2010 (UTC)
  • நீங்கள் உணர்ந்த்தையே நானும் உணர்ந்து, அக இணைப்பு என்பதனை கைவிட்டு, பகுப்பு என்று மாறி உள்ளேன். ஆசான் எவ்வழியோ, அடியேனும் அவ்வழித*உழவன் 07:17, 12 ஜனவரி 2010 (UTC)

பொங்கல் திருவிழா - பதங்கள், படங்கள் தொகு

pongal பக்கத்தில் பொங்கல் சம்பந்தப்பட்ட சொற்களை, படங்களைச் சேர்க்க ஆரம்பித்துள்ளேன். அவற்றுக்குத் தக்க தமிழ்ப் படங்கள் கிடைத்தால் இணைக்கவும். இதை ஓரிரு நாட்களில் செய்ய முடிந்தால், மிக நலம். நன்றி. பழ.கந்தசாமி 16:39, 12 ஜனவரி 2010 (UTC)

மிடுக்கான காளைப் படம்! தொகு

த*உழவனே! விரைந்து படங்கள் இணைப்பதற்கு நன்றி. pongal பக்கத்தில் காளை படம் இன்னும் கொஞ்சம் மிடுக்குடன் கிடைக்குமா? நன்றி பழ.கந்தசாமி 17:14, 12 ஜனவரி 2010 (UTC)

சில வருடங்களாக ஒருகாளையைப் பார்த்து வருகிறேன். சமயத்தில் நிழற்பட கருவி இல்லையென்பதால் தடுமாறுகிறேன். போனவருடப் பொங்கலில் எடுத்ததுதான் வெண்சாமரச் சோளம். & சோளப்பொரிகள் முயற்சிக்கிறேன்.

தயவுசெய்து படங்களின் வர்ணனையைக் காணவும்.த*உழவன் 17:23, 12 ஜனவரி 2010 (UTC)

  • உள்ளே படிக்காமல் மேலோட்டமாகப் பார்த்துக் கேட்டுவிட்டேன். மன்னிக்கவும். அடுத்தே சல்லிக்கட்டு பதம் வருவதால் இன்னும் மிடுக்காகத் தோன்றும் காளை இருந்தால் நலம் என்று நினைத்தேன் அவ்வளவே! நன்றி! பழ.கந்தசாமி 17:29, 12 ஜனவரி 2010 (UTC)
  • நமக்குள் மன்னிப்பு என்ற வார்த்தையே வேண்டாம். பலவேலைகளுக்கு நடுவிலும் நீங்கள் தொடர்ந்து உடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. நான் சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறீர்கள். அதற்கே நான் கடமைப் படுகிறேன்.த*உழவன் 17:42, 12 ஜனவரி 2010 (UTC)
  • த*உழவனே! விக்சனரியில் உங்களுக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு! :) பழ.கந்தசாமி 18:11, 12 ஜனவரி 2010 (UTC)
  • நடிகர் விஜயகாந்த் வசனம். (.!.) (சிரிக்கிறேன்.) :) (.!.) நாளை பல பட முயற்சிகளுடன் வருகிறேன். நிறைய கொசுக்கள், என்னை படுக்கப் போகச்சொல்லி வற்புறுத்துகிறது.த*உழவன் 18:19, 12 ஜனவரி 2010 (UTC)

அறுவடைப் படம் தொகு

த*உழவனே! பொங்கல் பக்கத்திற்கு நம் ஊர் அறுவடைப் படம், வெள்ளை பூசுதல் முதலியன கிடைத்தால் போடவும். (இங்கு கிட்டத்தட்ட 500 குடும்பங்களுக்கு விக்சனரி, விக்கிப்பீடியா இணைப்பை அனுப்பியுள்ளேன் (எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியாது, இருந்தாலும், பார்ப்போர் பயன்பெறுவார் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளேன். Thanksgiving, halloween, christmas பக்கங்களையும் அவ்வாறே அனுப்பியிருந்தேன்). நன்றி. (பழ.கந்தசாமி)

  • நீங்கள் சொன்னவற்றைக் கவனத்தில் கொண்டே செயல்படுகிறேன். 500குடும்பங்கள் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. இணைய வேகம் சரியில்லை. எனினும், முடிக்கிறேன். விக்கி ஊடக நடுவத்தில், தமிழ் கலாச்சாரப் படங்கள் குறைவு. தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையிலும், இது பற்றி சொல்லியுள்ளேன். நிறைய தமிழ் கலாச்சாரப் பதிவுகளை படங்களாக பதிவேற்ற வேண்டும். ஆவணப்படுத்த ஆவனச் செய்கிறேன். நன்றி. த*உழவன் 06:32, 15 ஜனவரி 2010 (UTC)
  • நன்றி, முடிந்தபோது செய்யவும். இதுவரை செய்த இவ்வாறான பக்கங்களில் பொங்கல் தான் தமிழ்க் கலாச்சாரம் பற்றியது. அதனால், உள்ளே உள்ள ஓரிரண்டு வெளியூர்ப் படங்களை எடுத்துவிட்டால், சிறப்புக்கூடும். (சீண்டு என்ற பதம் உட்பட). பழ.கந்தசாமி 07:08, 15 ஜனவரி 2010 (UTC)

pongal பக்கம் குளறுபடி தொகு

த*உழவனே! ஏதோ காரணத்தால் pongal பக்கத்தின் முற்பகுதி அழிந்துவிட்டது. ஏதோ என் தவறு என நினைக்கிறேன். எப்படி மீளமைப்லது? பழ.கந்தசாமி 01:44, 16 ஜனவரி 2010 (UTC)

அரட்டைக்கு வர முடியுமா? தொகு

தானியங்கி பற்றிப் பேச பழ.கந்தசாமி 18:44, 16 ஜனவரி 2010 (UTC)

தானியங்கி வார்ப்புரு இட்ட வார்த்தைகள் தொகு

அனைத்தையும் சரிசெய்து விட்டேன் பழ.கந்தசாமி 02:52, 18 ஜனவரி 2010 (UTC)

AWB/உபுண்டு நிலைமை? தொகு

தற்போது முடிந்தால் அ.அ. வரவும்? வழக்கம் போல குழப்பத்துடன் கற்கத் துவங்குகிறேன். உபுண்டுவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. 9.04 நிறுவிவிட்டேன். இணைய இணைப்பில் சில இடர்கள். சில நாட்களில் நிலைமை இனிதாகும்.த*உழவன் 18:15, 23 ஜனவரி 2010 (UTC)

பக்க மெருகு கூடியுள்ளது! தொகு

நண்ப! விக்சனரி பக்கங்கள் தற்போது மிகவும் மெருகுடன் விளங்குகன்றன. மெருகு ஏற்ற நீங்கள், பழ. கந்தசாமி ( அரிய, புதிய சொற்களைச் சேர்ப்பதன் மூலம் ), பெரியண்ணன் ஆகியோர் கடுமையாக உழைப்பது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது!

  • ஒன்று கவனிக்க வேண்டும்! விக்சனரியின் வீச்சு எவ்வளவு உள்ளது? எவ்விதம் அதை பல பயனர்களுக்கு எடுத்துச்செல்வது? இப்போதும் கூகுள் தேடலில் (English to அல்லது Online) Tamil Dictionary என்று உள்ளிட்டோம் என்றால், முதல் சில பக்கங்களில் விக்சனரி காணப்படுவதில்லை. ( நான் விக்சனரிக்கு வந்ததே, ரவியின் - http://microblog.ravidreams.net/2009/02/free-online-english-tamil-dictionary-websites/ வலயப்பூவின் மூலமாகத்தான் - ரவிக்கு பலப்பல நன்றிகள்! ) இச்சூழலை எங்ஙனம் மாற்றுவது? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இப்படி பல கேள்விகள் என் மனதில்.
  • இப்போது இணையத்திலுள்ள அகராதிகளில், பழைய கலைச்சொற்கள் என்றால் அதற்கு Tamil Lexicon தான். அதைப்போல் புதிய கலைச்சொற்களுக்கு தமிழ் விக்சனரி தான் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அத்தோடு நில்லாமல் அச்சொற்கள் பிறர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்போது தான் நம் உழைப்புக்கு ஒரு பொருள் இருக்கும். இந்த உரையாடலை பழ. கந்தசாமி, பெரியண்ணன் பார்வைக்கும் எடுத்துச்செல்வீர்களா? --பரிதிமதி 16:08, 6 பெப்ரவரி 2010 (UTC)

 இதே போன்ற எண்ணங்கள் அவர்களுக்கும் உண்டு. இது போல அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய எண்ணங்களை விக்சனரியின் ஆலமரத்தடியில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இரவியும், தெரன்சும் கூகுள் போன்ற இணையதேடுபொறிகளுக்காக பல முயற்சிகள் எடுத்தனர். தமிழ் விக்சனரி நேரிடையாக இணையத்தில், கிடைப்பதில் பல தொழில்நுட்பப் பிரச்சனைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.

நம் விக்கிக் கட்டமைப்புக்குள்ளளும் அத்தகைய இடர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, தமிழில் ஒரு கட்டுரை எழுதினால், அதற்குரிய பிறமொழி இணைப்பை, ஆங்கிலக் கட்டுரைக்குச் சென்றே ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினால், அங்குள்ள தொழில் நுட்பம் மற்ற மொழி கட்டுரைகளுடன் தானாகவே, ஆங்கிலத்தில் எழுதப்பட்டக் கட்டுரையை பிற மொழிகளுடன் இணைத்துக் கொள்ள்ளும்.

கடைசியாக ஒரு விண்ணப்பம், ஆங்கில பெயர்ச்சொல்லுக்கான புதிய வார்ப்புருவின் உரையாடல் பக்கத்தில் தங்களது ஆதரவினைத் தெரிவிக்கவும்.நன்றி. வணக்கம்--த*உழவன் 17:46, 6 பெப்ரவரி 2010 (UTC)

  • இந்த வார்ப்புரு புதிய பக்கவடிவுக்கு மாற்றப்படவேண்டுமா?, மேலும், ஆதாரம், பயன்பாடு முதலியன வரவேண்டும் பழ.கந்தசாமி 22:13, 6 பெப்ரவரி 2010 (UTC)

ஆங்கிலச்சொல்லுக்கான மாற்றங்கள் தொகு

  • ஆதாரப் பட்டியலில் ஆங்கில விக்சனரிக்கு முதன்மை தரவும். பேரகரமுதலிக்கு ஒரு வார்ப்புரு தரவும். மேலும், வாக்கியப் பயன்பாட்டுக்கு ஒரு இடம் தந்தால் பக்கத்துக்கு சென்று தொகுக்காமல் சேமிக்கமுடியும். பின் பார்ப்போம் பழ.கந்தசாமி 01:30, 7 பெப்ரவரி 2010 (UTC)
  • பணிப்பளு காரணமாகக் கொஞ்சம் சுணக்கமாக உள்ளது, உரிச்சொற்கள் பக்கவடிவம் பெயர்ச்சொற்கள் பக்கவடிவம்போல வரவேண்டுமே. மாற்றமுடியுமா? பழ.கந்தசாமி 04:18, 9 பெப்ரவரி 2010 (UTC)
  • பலுக்கல் அருகில் நான் தமிழில் குறிப்பிட்டுவரும் தமிழ்ப் பலுக்கலையும் இட்டீர்களானால் நான் அதைத் தனியாக சேர்க்கவேண்டியதில்லை. / / என்று இடவும். நன்றி பழ.கந்தசாமி 01:11, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • ஆங்கிலச்சொல்லிலா?பலுக்கல் உதவி சேரக்க வேண்டும்.த*உழவன் 01:14, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • ஆம். ஆங்கிலச் சொல்லில். நன்றி. (எனது அண்மைய ஆங்கிலச் சொற்களைப் பார்க்கவும். TRYPPN? பழ.கந்தசாமி 01:29, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • (இப்பக்கத்திற்குரிய, சொல் விரிவுப் பகுதி) என்பதை நீக்கிவிடலாமா? மேலும். சொல்லிற்கான விளக்கம் எங்கே வரும்? பழ.கந்தசாமி 01:50, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • அதை நீக்கிக் கொண்டே இருந்தேன். தற்போதுள்ள வடிவமைப்பு சரியா? விளக்கம் தான் பயன்பாடுகள் என்ற வடிவில் இருக்கிறதே? dove-வைக் கொண்டே மாற்றியமைக்கிறேன்.த*உழவன் 01:57, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • சரி. சொல்மூலம் அல்லது பிறப்பியல் (எழுத நினைக்கும் சொற்களுக்கு) எதன் கீழ் வரும்? பழ.கந்தசாமி 02:01, 10 பெப்ரவரி 2010 (UTC)

எனது தனிப்பட்டக் கருத்து எச்சொல்லுக்கும், தமிழில் பொருள் இருந்தாலே போதும். சொற்பிறப்பியலில் முன்பு ஈடுபட்டிருந்தேன். அது ஆங்கில அகரமுதலிகளிடையே வேறுபடுகிறது. பிற ஆங்கில அகரமுதலிகள் என்பதில் (அதில் காண்க! வலப்பக்கம் கட்டத்தில்) சொற்பிறப்பியலிருக்கிறது. அதுவும் சில சொற்களுக்கு இருப்பதில்லை. இன்னும் 10 நிமிடங்களில் மின்தடை.

எசுப்பானிய பெயர்சொல் படிவவடிவம் பற்றிக் கூறவும்.படிவப்பக்கத்தில் அமைத்துள்ளேன்.

இப்படிவங்களைப் பூர்த்தி செய்து தானியங்கி பதிவேற்றம் செய்ய முடியுமா?த*உழவன் 02:16, 10 பெப்ரவரி 2010 (UTC)

  • சொற்பிறப்பியல் பல நேரங்களில் பொருளை ஞாபகம் வைக்க உதவும் என்பதால் எந்தச் சொற்களுக்கு எழுத முடியுமோ அங்கே மட்டும் நாம் சேர்க்கலாம். அதற்கான வார்ப்புரு அது வரவேண்டிய இடம் இரண்டும் மட்டும் முடிவு செய்து வைத்துக்கொள்வோம்.
  • நேரமின்மையின் காரணமாக எசு. தானியங்கி படிவம் மூலம் பதிவாக்கம் இன்னும் சில நாட்கள் கழித்து! பழ.கந்தசாமி 02:32, 10 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் உறவு சொற்களுக்கான பதிப்பு? தொகு

த*உழவனே! தமிழ் உறவுச் சொற்கள் (அக்கா முதலியன) பகுப்பு உண்டா? பழ.கந்தசாமி 21:00, 15 பெப்ரவரி 2010 (UTC)

தகவலுழவன் வணக்கம் மாயாவி போல் வருவதும் பிறகு வேறு பணிகளில் கவனம் செலுத்துவதும் என் இயல்பாகிவிட்டது. இன்னும் சிறு சிறு தொழில் நுட்ப சிக்கல் எனக்கு உள்ளது.காரணம் விக்கியில் முழுக்கவனமும் செலுத்தாததே ஆகும். என்றாலும் தமிழ் சார்ந்து குறிப்பாக இலக்கணம் சார்ந்த சொற்களைப் பதிவிடுவேன். சிறு குறைகள் இருப்பின் பிறகு தக்கவர்கள் களைந்துவிடலாம் அனைவரின் வரவேற்புக்கும் நன்றி. மு.இளங்கோவன்

முன்பே எனக்குத் தாங்கள் மடல் எழுதினீர்கள். தமிழ் விக்சனரி பற்றி ஒரு கட்டுரைக்குதான் பல மாதமாக முயன்று கட்டுரை உருவாக்கி வருகிறேன். இந்த அறிமுகக்கட்டுரை பலரை விக்கியின் பக்கம் இழுக்கும்.அடத்த வாரம் படிக்க உள்ளேன். தங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள். தங்களுக்குக் கட்டுரையை அனுப்பி சரி பார்ப்பேன்

Tamil bot குறித்து தொகு

தகவலுழவன்! அண்மைய பக்கம் எங்கே உள்ளது? --பரிதிமதி 01:46, 18 பெப்ரவரி 2010 (UTC)

  • இடது பக்கம் 'அண்மைய மாற்றங்கள்' பகுதி. அதில் 'தானியங்கியைக் காட்டு/மறை உள்ளது. பழ.கந்தசாமி 02:54, 18 பெப்ரவரி 2010 (UTC)
  • த*உ! Tamil Bot பயன்பாடு பற்றி ஒரு பக்கத்தில் குறிப்பிடவும். அதைப் பயன்படுத்த அனுமதி தேவைப்படுமாறு ஏற்பாடு செய்யவும் (விசமப் பதிவேற்றங்களைத் தவிர்க்க) பழ.கந்தசாமி 02:58, 18 பெப்ரவரி 2010 (UTC)

அடடா!ஆர்வக்கோளாறில் இதைப்பற்றி வினவாமல் விட்டுவிட்டேனே. சுந்தரிடம் அலைப்பேசியில் பேசும் வாய்ப்பை இரவி ஏற்படுத்திக் கொடுத்தார். திரும்பவும் அவரை பிடிப்பது சிறிது சிரமம் தான். எனினும், நீங்கள் சொன்னதை முடித்து விடுகிறேன். அதுவரை சுற்றி வளைத்துக் கட்டுபடுத்தும் வசதி, எனது நிருவாகச் சிறப்புப் பயன்பாட்டில் பார்த்தேன். அதை முயன்று கைகொள்கிறேன்.

மற்றொன்று புதிய சொற்களுக்கானப் பதிவேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஓரிரு மாதம் அதிகபட்சம் தேவைப்படும். புதியச்சொற்களுக்கானக் குறிப்புகளைச் சேகரித்து வைப்பதை, வழக்கம் போல மேற்கொள்ளுங்கள். ஏனெனில், மேலும் சிலரிடம் சொல்லமைப்பினைப் பற்றி உரையாட வேண்டும். நாம் doveல் உரையாடியது போல.

சுந்தரும், இரவியும் நம்மூவரைப்பற்றி (பெரியண்ணன், நான், நீங்கள்) மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளனர். உங்கள் இருவரைப்பற்றியும் ஆர்வத்துடன் விசாரித்தனர். சல்லிக்கட்டு பற்றி நாம் உரையாடியதைச் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். விக்சனரிக்கு இனி நம் மூவர் தான் வழிவகுக்க வேண்டும்.

நீங்கள் எனக்கு உபுண்டுவில் பைத்தான் பற்றி சொல்லித்தரும் நாளை எதிர்நோக்குகிறேன். முன்பு பட்டியலை நான் அனுப்பும் போது ஒற்றைச் சொல்லை, கூட்டுச்சொற்களில் நீக்கும் விதத்தை அறிய விரும்புகிறேன். அதிலுள்ள பகுப்பு மாற்றக் கட்டளைகளைக் கற்றுக் கொண்டு, புதியச் சொற்களுக்கான தானியங்கிப் பதிவேற்றத்தை கற்றுக் கொள்ளவேண்டும். அதற்குள் மற்றவரும், சொல்லின் வடிவத்தை உறுதி செய்து விடுவர். அப்புறம் என்ன பொங்கலன்று போல், பொங்கலோ பொங்கல் தான். த*உழவன் 14:39, 18 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் புதிய சொற்கள் பலுக்கல் தொகு

வார்ப்புருவில் சேர்க்கலாமா? (உதாரணமாக; தகவலுழவன் - thagavaluzhavan) நன்றி பழ.கந்தசாமி 04:38, 26 பெப்ரவரி 2010 (UTC)

  • தமிழ் வாக்கியங்களைக் கொடுத்தால், அவைகளைப் படித்துக்காட்டும் மென்பொருளைக் கண்டறிந்துள்ளனர். பெங்களூரைச் சார்ந்த ஒரு பேராசிரியர் கண்டறிந்துள்ளார். அதைப்பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். அது எதிர்காலத்தில், அதிகம் பயன்படுத்தப்படுமெனக் கருதுகிறேன். அதனால் (தகவலுழவன் - thagavaluzhavan) வேண்டாமென்பது, என் எண்ணம். பலுக்கலைக் கேட்டு பழகுவதையே, நான் விரும்புகிறேன். நமக்கும் வேலை குறைவாகும். நன்றி.த*உழவன் 04:47, 26 பெப்ரவரி 2010 (UTC)

TRYPPNbot

  • த.உழவனுக்கு வணக்கம். தாங்கள் TamilBOT --- ‎(தானியங்கி) [127,034 edits in the last 30 days]--- ஐ மிக நன்றாக பயன்படுத்தி வருகிறீர்கள். இலட்சத்தை தாண்டியமைக்கு எனது பாராட்டுக்கள்.
  • மேலும், தமிழ் விக்கிப்பீடியாவில் பகுப்புகளை சரிசெய்வதற்காக TRYPPNbot ---ஐ உருவாக்கினேன். அங்கு இதனை தானியங்கியாக பயன் படுத்துகிறேன். இங்கு தமிழ் விக்சனரியிலும் பயன் படுத்தத் துவங்கியுள்ளேன். இங்கு இதனை தானியங்கியாக பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:27, 13 ஏப்ரல் 2010 (UTC)

உங்கள் கேள்வி, உங்களுக்கொரு கேள்வி தொகு

சமசுக்கிருதம் பற்றி நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பயனர் பேச்சுப் பக்கத்தில் மறுமொழி தந்துள்ளேன். பார்க்கவும். உங்களுக்கு ஒரு கேள்வி. இலக்கணமை முதலான சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றீர்களே, இவை சரியான சொற்களா? இலக்கணம் விளக்கம், இலக்கண குறிப்பு கூறுவது பொருந்தும் என நினைக்கிறேன். இவை வார்ப்புருவின் பெயர்தான் எனினும், அதனைச் சரியான தமிழில் கூறுவது நல்லது அல்லவா? --செல்வா 03:32, 28 பெப்ரவரி 2010 (UTC)

  • வெளியூரில் இருப்பதால் உடன் பதில் எழுத இயலவில்லை. தமிழைப் புதிதாகக் கற்பவருக்கு, எழுத்துப்பிழைகள் வரும் சொற்களை இயன்ற வரைத் தவிர்க்கிறேன். வாக்கியம் என்ற சொல்லே எனக்குப்பிடித்துள்ளது. சொற்றொடர் சிறப்பானது தான். நிறைய நேரங்களில் அது தவறாக பயன்படுத்தப் படுகிறது.

சங்கதம் என்பதே சிறப்பானச் சொல்லாக நான் கருதுகிறேன்.

வார்ப்புருக்களில் நீங்கள் கூறியக் கருத்து ஏற்புடையதே. எனினும் மிகக்குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி, வார்ப்புருக்களை அமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். வரியமை, இலக்கணமை, இலக்கியமை என்பதைக, ஒரேநேரத்தில் நான் உருவாக்கியதால் விகுதிகளில் -மை வந்துள்ளது. அதிலுள்ள எழுத்துக்களையும், புதிய பக்கத்திற்கான வார்ப்புருக்களையும் குறைக்க வேண்டும். போதிய ஆழ்ந்த அறிவும், அனுபவமும் இல்லாமல், ஆர்வத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறேன். அதனால் சிறுசிறு குறைகள் வருகின்றன. த*உழவன் 18:29, 28 பெப்ரவரி 2010 (UTC)

கருத்துக்கு நன்றி. வரியமை என்பது தவறாக இல்லை, ஆனால் இலக்கணமை என்பதை இலக்கணம் என்றே கூறலாமே. இலக்கியமை என்பதை இலக்கியக்காட்டு என்றும் சொல்லலாம். சொற்றொடர் என்பது கடினமாக இருந்தால் சொல் தொடர் என்றும் கூறலாம். கூற்று என்றும் கூறலாம். கூற்று என்பது அறிவோடு அமைந்த முழுமையான பொருள் தரும் சொற்றொடர் என்று இயல்பாய்ப் பொருள் தருவது. கூறு என்றால் சொல் (வினை) என்பது போக கூறு என்றால் அறிவிக்கை (பெயர்ச்சொல்) என்றும் பொருள். கூறுதல் என்றால் அறிவோடு ஒன்றைத் தெளிவுபடச் சொல்லுதல். கூறிலான் என்றால் அறிவில்லாதவன், பேதை என்று பொருள். கூற்றியல் என்பது syntax என்றும் பொருள்தரும்.--செல்வா 21:11, 28 பெப்ரவரி 2010 (UTC)
டாக்டர் சொ. பரமசிவம் (தமிழ்த் துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி) எழுதிய நற்றமிழ் இலக்கணம் என்னும் நூலில் (திசம்பர் 2000) பக்கம் 289 இல் சொற்றொடர் (sentence) என்று தொடங்குகின்றார். சொற்றொடர் என்பது முறையான சொல்லாட்சி. சொல்தொடர் என்று பிரித்து வேண்டுமானால் எழுதிக்கொள்ளலாம். முறையாகக் கற்கும் பொழுது இப்படியான சொற்றொடர் போன்ற சொல்லாட்சிகளை ஏற்றல் நல்லது. சொல் தொடர், சொற்றொடர் என்று கூறிப்பழகினால் வந்துவிடும்.சில கலைச்சொற்கள். --செல்வா 21:27, 28 பெப்ரவரி 2010 (UTC)
  • சொற்றொடர்-phrase-முற்றுபெறாவாக்கியம்; வாக்கியம் -sentence என்றே பள்ளிகளில் கற்றது நினைவுக்கு வருகிறது.இன்றும் அப்படித்தான் தமிழகப் பள்ளிகளில் சொல்லித்தரப்படுகிறது. இப்படியிருக்க முனைவர்சொ. பரமசிவம் கருத்துகளிலிருந்து எப்படி வேறுபடுவது?த*உழவன் 04:50, 1 மார்ச் 2010 (UTC)

பனை இணைப்பு தொகு

த*உழவனே, தினமணியின் பனை இணைப்பை மின்னஞ்சல் செய்துள்ளேன். தமிழ்த் தானியங்கிக்கு 'தகவல் எந்திரன்' என்று பெயரிட சின்னச் சின்ன ஆசை :) பழ.கந்தசாமி 06:09, 1 மார்ச் 2010 (UTC)

  • பணியடர்வில் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன்.பனைக்கு நன்றி. தகவலெந்திரன் என்று பெயரிடலாமா?எனினும், தகவல் எந்திரனைக் கவனிக்கவும்.த*உழவன் 06:14, 1 மார்ச் 2010 (UTC)

தானியங்கி உருவாக்கியதற்காக விண்மீன் பதக்கம் தொகு

  • பாராட்டுப் பதக்கத்தை,எனது பயனர் பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்.
  • த*உழவனுக்கும், த*எந்திரனுக்கும் வாழ்த்துகள். பரிதிமதி, பரிசுமதி :) பழ.கந்தசாமி 16:03, 1 மார்ச் 2010 (UTC)
  • இதனை தந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இந்தத் தானியங்கி நற்செயல், என்னால் ஒருங்கிணைக்கப் பட்டது அவ்வளவே. இதனைப் பற்றிய அறிமுகத்தை சுந்தர் வழங்கினார். பல வேலைகளுக்கும் இடையில் எனது வேண்டுகோளுக்காக(என்னுடையத் தொந்தரவு!)இரவி தொழில் நுட்ப நடைமுறைகளைப் பின்பற்றி TamilBOTஅமைத்துக் கொடுத்தார். அதன்பின்பு பெரியண்ணன். இச்சிறு தானியங்கியை இயக்க, ஆரம்ப கால அனுபவமின்மையை நீக்கியவர். என்னுடைய AWB ஆசான். லினக்சுவில் தானியங்கியை இயக்கி, அது செயல்படும் விதத்தை புரிய வைத்து, பொங்கலன்று இத்தாலிய மொழியைக் கடக்க வைத்த கந்தசாமியவர்கள். நானும் தானியங்கியை இயக்க முடியும் என்று என்னுள் தன்னம்பிக்கை வித்தை விதைத்தவர் இவரே. கந்தசாமி, எனை ஈர்க்கும் காந்தசாமியாவார். இது குறித்த வரலாற்றுப்பதிவுகளை, மின்னஞ்சல் குறிப்புகளை TamilBOT பக்கத்திற்கு மாற்ற வேண்டும்.

TamilBOT அனைவருக்குமான, ஒருங்கிணைக்கப் பட்ட தகவல் எந்திரன். எதிர்காலத்தில் இவ்வெந்திரன் மகத்தான செயல்களைச் செய்வான். பலருக்கும் நேரம் தேவைப் படுகிறது. அவர்களுக்காக இவ்வெந்திரன் செயல் படுவான். எனது ஒருங்கிணைப்புக்கு தங்களின் மகிழ்ச்சி புத்துணர்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. வணக்கம்.த*உழவன் 16:30, 2 மார்ச் 2010 (UTC)

ஆலமரத்தடியைப் பார்க்கவும் தொகு

விக்சனரி:ஆலமரத்தடி#சொற்றொடர் எடுத்துக்காட்டுகள் + சொற்பிறப்பியல் + கலைச்சொற்கள்

--செல்வா 14:22, 2 மார்ச் 2010 (UTC)

புதிய சொற்களைச் சேர்க்கவும் வார்ப்புரு தொகு

தகவல்! இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, அனைத்து சொற்களுக்கும் ஆதாரங்களாக ஆங்கில விக்சனரி, பிற ஆங்கில இணைய அகரமுதலிகள், சென்னைப் பேரகரமுதலி ஆகியவைகள் வருகின்றன. உண்மையில் அவற்றை மேற்கோளுக்கு எடுத்தாளாமலிருந்தாலும். இது சரிசெய்யப்பட வேண்டும். {தூக்கம் சொருகுகின்றது. பிறகு பார்ப்போம்} --பரிதிமதி 01:06, 5 மார்ச் 2010 (இந்திய நேரம்)

  • நீங்கள் சொல்வது உண்மை. பொதுவாக இப்பகுதி மேற்கோள்களுக்காக முதன்மையாகப் பயன்படுத்துவது அன்று. மாறாக, விக்சனரியின் நம்பகத்தன்மை பற்றி பொதுவான ஒரு குறைபாடு உள்ளது. அத்தகையவர்கள் எவ்வகையான அகரமுதலிகள் சொன்னால் ஒப்புக்கொள்வார்கள் என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. பெரும்பான்மையான இணைய அகரமுதலிகளுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன. சந்தேகம் உள்ளவர், இவ்விணைப்புகள் மூலம் இங்குள்ளவைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளலாம்.

சிதை என்பதில் மேற்கோள்கள் எப்படி இருக்க வேண்டுமெனக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஆரம்பத்தில் காட்டிய வழி. இதற்கு நிறைய நேரம் செலவாவதால், ஆதாரங்கள் இணைப்புத் தேவையாகிறது. எல்லாவற்றிற்க்கும் மேலாக ஒரு சொல்லின் பைட்டுகள் எண்ணிக்கை அதிகமாகிறது.

ஆதாரங்களிலுள்ள {{சென்னைப்பேரகரமுதலி} கூட்டுச்சொற்களில் பிழையினைக் காட்டுமென்பதால், அதனை விரைந்து நீக்க, தனியாக அமைக்கப்பட்டுள்ளது. நன்றி. வணக்கம்.த*உழவன் 19:49, 4 மார்ச் 2010 (UTC)

புதிய வார்ப்பு(ரு)க்கள் தொகு

த*உழவனே! வணக்கம். பக்கங்களுக்கான புதிய வார்ப்புருக்கள் எங்கே உள்ளன? நன்றி! பழ.கந்தசாமி 03:37, 7 மார்ச் 2010 (UTC)

  • இபுபோது ஆங்-ஒலிக்கோப்புகளுக்கான வார்ப்புருக்களை ஆய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் அதுபற்றிய முடிவு எடுக்கப்பட்டு விடும். உறுதி செய்யப்பட்ட வார்ப்புருக்களை அதற்குரிய ஆங். புதிய சொற்களுக்கான படிவத்தில் இணைத்துவிடுகிறேன். உறுதி செய்யப்படாத வார்ப்புருக்களை, பேச்சு:doveபக்கத்தில் காணலாம். உங்கள் கருத்துக்களையும் அங்கேயேத் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி. வணக்கம்.த*உழவன் 05:12, 7 மார்ச் 2010 (UTC)

பாராட்டுப் பதக்கம் தொகு

  • பாராட்டுப் பதக்கத்தை,எனது பயனர் பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்.

உங்கள் நல்லாக்கங்களுக்கும் தொடர்ந்த உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.--செல்வா 17:44, 9 மார்ச் 2010 (UTC)

  • உங்களது பதக்கம், நான் எனது பதங்களின் பதிவுகளில், என் பாதங்களைக் கவனமாக இருக்கத் தூண்டுகின்றன. என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்ல கடமைப்பட்டவன் நானே. மிக்க நன்றி.

இந்த மகிழ்ச்சியானத் தருணத்தில், ஒரு கணினித் தொழில்நுட்பத்தைத் தேடுகிறேன். அது யாதெனில், நானும் வின்டோசில் நோட்பேடில் தான் குறிப்புகளை எடுக்கிறேன். அதில் find and replace இருக்கிறதல்லவா? அதன் மூலம், ஒரு சொல்லைத் தான் மாற்றுமுடிகிறது. ஒரு நேரத்தில் 3 அல்லது 4 சொற்களை find and replace செய்யவல்ல ஏதேனும் செயலி உள்ளதா? அதன் மூலம் புதியச் சொற்களுக்கான படிவத்தை விரைவில் பூர்த்தி செய்து விடலாமே? நிறைய நேரம் அதன் மூலம் மீதமாகும். த*உழவன் 18:35, 9 மார்ச் 2010 (UTC)

ஏதும் இருக்கின்றதா என அறியேன். நிரலர்கள் செய்ய இயலும். நான் இந்த வகையான நிரலன் அல்லன். அதே நேரத்தில் 5 சொற்களைத் தனித்தனியாக மாற்ற வேண்டும் எனினும் 5 நொடி கூட ஆகாதே. 100 சொற்கள் மாற்ற வேண்டும் எனினும் 2 மணித்துளி (நிமிடம்) தானே ஆகும். சொற்களை உள்ளிடும் நேரம் ஒரே அளவாகத்தானே இருக்கும்.

பைத்தான்/பெர்ள் நிரலியில் செய்ய வசதி உள்ளது. அதற்கான நிரல்வரிகளும் உள்ளன. இதனையும் பாருங்கள், இங்கும் சில பயனுடைய கருத்துகள் உள்ளன. --செல்வா 19:04, 9 மார்ச் 2010 (UTC)

  • மேற்கண்டத் தொடுப்புகளை கவனித்தேன். நேர அளவீடுகளைப் புரிந்து கொண்டேன். எனினும், தமிழ் விக்சனரிக்காக சிறிய சிறிய உதவிக்கருவிகளை ஏற்படுத்த எனக்குள் ஒரு ஆசை. நமது தொகுத்தலுக்கான ஆழிகளில்/ பொத்தான்களில் கூட, இன்னும் சில இருந்தால் நன்றாக இருக்கும். <gallery>, <small>, () போன்ற சில. நான் கணினிக்குள் வந்தே 2,3 வருடங்கள்தான் ஆகிறது. நன்றி.

நன்றி த.உழவன் தொகு

உங்கள் மாற்றங்களை கண்டேன். மிக அருமை. நான் விக்கிபிடியாவில் அவ்வப்போது பங்களிக்கும்போது விக்சனரி பக்ககத்துக்கு வருவது உண்டு. என்னால் முயன்ற அளவில் படங்கள் சேர்க்க முயல்கிறேன்.

இன்னோர் ஆயிரம் தொகு

த*உழவனே! இன்னோர் ஆயிரத்தை எட்டிவிட்டீர்கள். எந்திரன் வேகம் உத்வேகம் அளிக்கிறது. (பணிப்பளுவில் மூழ்கியுள்ளேன், அதனால், எனது பங்களிப்புகளில் கொஞ்சம் மந்தம் த*உழவன் 00:47, 20 மார்ச் 2010 (UTC)

  • எந்திரன் ஓடினான், ஓடினான், விக்சனரியின் ஓரத்திற்கே ஓடினான் :). ஆயிரம் ஆயிரம் ஆக உந்தன் ஞாபகம் பூமழை தூவும். பாராட்டுகள் பழ.கந்தசாமி 02:18, 20 மார்ச் 2010 (UTC)

தமிழ்க் கல்வெட்டு, செப்பேடு படங்கள் தொகு

த*உழவனே! தமிழ்க் கல்வெட்டு, செப்பேடு படங்களைச் சேர்த்தால் சிறப்பாக இருக்கும், கிடைக்குமா? நன்றி பழ.கந்தசாமி 03:10, 24 மார்ச் 2010 (UTC)

  • குறித்து வைத்துக் கொண்டேன். மறவாமல் அடுத்த மாதம் முதல் செய்கிறேன். நினைவூட்டியமைக்கு நன்றித*உழவன் 05:22, 24 மார்ச் 2010 (UTC)

subramachandran தொகு

தகவலுழவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு உம்மிடம் எப்படி அணுகுவது என்பதை அறியாமல் இத்தனை நாளும் விழித்துக்கொண்டு இருந்தேன்! எனக்கு மலையாள மொழி தெரியும் என்றாலும், இப்பொழுது அதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை, அதனால் அதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன், இருந்தாலும், சிறிய வகையில் பிழைகள் அல்லது திருத்தம் செய்வது போன்ற பணிகள் (அதிக நேரம் என்னால் இதற்காக செலவிட முடியாது) போகப் போக, என்னால் முடிந்ததை மேற்கொள்ளப் பார்க்கிறேன். எனது மொழிபெயர்ப்புகள் மற்றும் புதிய சொற்கள் போன்ற கருத்துக்களில் ஏதாவது பிழைகள் இருந்தால், மாற்றங்களை செய்வதில் தயங்க வேண்டாம், மேலும் தயவு செய்து என்னை மன்னித்து எனக்கு வழி காட்டி சிறப்பிக்கவும். எனக்கு இன்னமும் விக்கியின் சரியான முறைகளை புரிந்து செயல்பட தவணைகள் தேவைப்படலாம், ஆனால் முயற்சி செய்து வருவேன். மீண்டும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து விடை பெறுகிறேன். subramachandran.

  • சுப்புராமசந்திரன்! உங்களை இங்கு சந்தித்ததிலே மிக்க மகிழ்ச்சி. வெளியூர் சென்றிருந்தேன். அதனால், உடன் பதிலெழுத இயலவில்லை.

//மேலும் தயவு செய்து என்னை மன்னித்து எனக்கு வழி காட்டி சிறப்பிக்கவும்.// என்ற வரிகள் என்னை மிகவும் நெளிய வைத்துவிட்டது. மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. இங்கு ஆரம்ப காலங்களில், பல தவறுகளை செய்திருக்கிறேன். புதிய முயற்சிகளில் இப்பொழுதும் தவறுகள் செய்வதுண்டு. எனவே, தயவுசெய்து, மன்னிப்பு போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். எந்த ஐயமென்றாலும், தயங்காமல் இப்பக்கத்திலேயே கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். தெரியாததைக் கேட்டுச்சொல்கிறேன். தயங்கமாக இருந்தால், எனக்கு மின்னஞ்சலிடுகள்.~~~~இக்குறியினை இட்டால் உங்கள் பெயர் தேதி, நாள், நேரம் அனைத்தும், தானாக பதிவாகி விடும்.

நன்றி என்ற சொல்லிற்கான, மலையாளச் சொல் என்ன என்பதனை அறிய ஆவல். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.த*உழவன் 23:09, 30 மார்ச் 2010 (UTC)

வருக! தொகு

த*உழவனே! வெளியூர்ப்பயணம் நன்கு அமைந்திருக்கும் என நம்புகிறேன். முடிந்தால், சனி,ஞாயிறு அ.அ. சந்திப்போம். பழ.கந்தசாமி 23:53, 30 மார்ச் 2010 (UTC)

  • தவறாமல் காத்திருப்பேன். நண்பனின் வீட்டில் திருமண ஏற்பாடுகள், அதற்காக அவருடன் மேற்கண்டப் பயணம். த*உழவன் 23:59, 30 மார்ச் 2010 (UTC)

ஏப்ரல் 15- ஐ நோக்கி தொகு

த*உழவனே, முன்னே சொன்னபடி ஏப்ரல் 15-க்குப் பிறகு பணிப்பளு சற்று லகுவாகும். நெடுநாட்களாகத் தள்ளிப்போட்டுள்ள தானியங்கிப் பணியை அப்போது துவக்கிவிடலாம். பழ.கந்தசாமி 00:50, 7 ஏப்ரல் 2010 (UTC)

சொல் ஆய்வு குறித்து தொகு

திரு தகவல் உழவன், உங்கள் தமிழ் பங்களிப்புகள் கண்டு வியந்து வணங்குகிறேன், மேலும் சொல் ஆய்வு என்னும் பகுதியை நீங்கள் மரபு கருதி உரையாடல் பக்கத்திற்கு நகர்த்தியதில் எனக்கு சிறிது சந்தேகம்,

"ஒரு சொல் பற்றிய ஆய்வு அந்த சொல்லின் பக்கத்திலேயே இருந்தால் பார்வையாளர் அச்சொல்லின் மூலம் அல்லது தமிழர் வேறு மொழி சொல் என மயங்கும் தூய தமிழ் சொல் (உதாரணம்: மாங்காய் , கட்டுமரம் ) பற்றி தெரியாமற் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன (இவர் உரையாடல் பக்கத்தை திறக்காமல் இருக்கும் வரை)" என் கேள்வி எல்லாம் ஏன் சொல் ஆய்வு செய்தியை (என்னுடைய சொந்த கருத்து அல்ல , நான் சொல் ஆய்வு நூல்களில் கற்றுணர்ந்தது) முதல் பக்கத்தில் வைக்க கூடாது?

இதற்கு அருள் கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

மகிழ்.

நன்றி திரு தகவலுழவன் தொகு

நன்றி திரு தகவலுழவன், உங்கள் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது மிக்க நன்றி!

மகிழ்.


அன்புள்ள தகவலுழவன், குறள் மேற்கோள் காட்டி என்னை கூச்சத்தில் நெளிய வைக்கிறீர்கள், உண்மையில் அந்த குறள் உங்களுக்கு தான் உரித்தானது. உங்கள் பாராட்டுகளுக்கு, நன்றி நன்றி!

மகிழ்.

அரட்டைக்கு வர முடியுமா? தொகு

த*உழவனே! தற்போது நேரமிருந்தால்! பழ.கந்தசாமி 00:31, 17 ஏப்ரல் 2010 (UTC)

ஆம். நன்றி என்ற சொல் மலையாளத்தில் நன்னி அதாவது നന്നി என்று வழங்கப்படுகிறது. Thanks and regards subramachandran.

கண்ணோய் குணமடைய நல்வாழ்த்துகள் தொகு

த*உழவன், விரைவில் கண்ணோய் (சென்னைக் கண்ணோய்) நீங்கி நலமடைய நல்வாழ்த்துகள். கண்ணுக்கும் உள்ளத்துக்கும் சிறிதுகாலம் ஓய்வு தாருங்கள்.--செல்வா 11:53, 4 மே 2010 (UTC)Reply

  • நன்றி. நலமடைந்தேன். உள்ளத்தின் எண்ணங்கள் உறங்கா, சித்தினை இன்னும் பெறமுடியவில்லை.த*உழவன் 05:12, 7 மே 2010 (UTC)Reply

71.231.31.80 விசம மாற்றங்கள்? தொகு

த*உழவனே! இம் முகவரியிலிருந்து வந்த மாற்றங்கள் பிழையான அல்லது விசமமானவை போலத் தோன்றுகின்றனவே? எத்தனை மாற்றங்கள் செய்துள்ளது? பழ.கந்தசாமி 00:32, 22 மே 2010 (UTC)Reply

அ.அ. வரவும். நன்றி தொகு

த*உழவனே, உடனடியாக அ.அ. வர இயலுமா? பழ.கந்தசாமி 00:36, 22 மே 2010 (UTC)Reply

  • அ.அ?

evangelist பக்கத்தில் நீங்கள் இட்டிருந்த குறிப்புக்கு நன்றி தொகு

பழ.கந்தசாமி, த*உழவன்,உங்கள் பாராட்டுக்கு நன்றி :) நீங்கள் உங்களுக்குள் இருக்கும் தமிழறிவைக் கிளருங்கள். இதைவிடக் கூடுதலாக ஆக்க இயலும். தமிழின் சொல் வளத்தில், வெறும் நுனிப்புல் மேய்ப்வன் நான். தோண்டத் தோண்டத் தங்கச்சுரங்கமாய், வைரச்சுரங்கமாய் இருக்கும் தமிழ். சுரங்கம் கூட அளவெல்லை உடையது. தமிழில் உள்ளதோ உயிர்த்துப் பெருகுவன, அளப்பரியன. --கற்றனைத்தூறும் என்பார்களே, அப்படி, தமிழில் அறிவுறவாட உறவாடப் பெருகும் கூர்ப்பு பெறும். அறிவுறவாட்டம் தமிழில் நடந்தால் பன்னூறாயிரம் மடங்காகப் பெருகும். --செல்வா 15:46, 28 மே 2010 (UTC)Reply
  • கற்றலின் கேட்டல் நன்றல்லவா? கற்கிறேன்.கற்க கேட்கிறேன். கூர்ப்பு என்று இங்கு பயன்படுத்திய சொல் எனக்கு விக்கிப்பீடியா உரையாடல்களை (கலைமற்றும் உங்களோடு) நினைவுக்கு வருகிறது. ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.த*உழவன் 18:20, 28 மே 2010 (UTC)Reply

வரவேற்பிற்கு நன்றி! தொகு

   மதிப்பிற்குரிய நண்பரே அன்பு வணக்கம்!
   இரண்டே இரண்டு சொற்களைப் பங்களித்தவுடனே என்னை இப்பகுதிக்கு வரவேற்று வரவேற்பு மடல் இட்ட உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்!
   உங்கள் வழிகாட்டுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:21, 11 ஜூன் 2010 (UTC)

வரவேற்பிற்கு நன்றி! தொகு

மதிப்பிற்குரிய நண்பரே

அன்பு வணக்கம்!

இரண்டே இரண்டு சொற்களைப் பங்களித்தவுடனே என்னை இப்பகுதிக்கு வரவேற்று வரவேற்பு மடல் இட்ட உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்!

உங்கள் வழிகாட்டுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:21, 11 ஜூன் 2010 (UTC)

அடையாள அட்டைக்கான தகவல்கள் தொகு

தகவலுழவன்,

  • நீங்கள் செம்மொழி, இணைய மாநாட்டிற்கு வருகின்றீர்கள் அல்லவா? உங்களுக்கான அடையாள அட்டையில் பதிவேற்ற முகவரி, குருதி வகை, புகைப்படம் (.jpg) ஆகியவை வேண்டும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள URL -ஐ ஒற்றி புது URL -இல் ஒட்டுங்கள். பிறகு Enter செய்திடுங்கள். திறக்கும் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து Update -ஐ அமுக்குங்கள்.
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். கவலைப்பட வேண்டாம்.
  • இது உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்று. இன்று மதியத்திற்குள் அல்லது மாலை ஐந்து மணிக்குள் செய்து விடுங்கள். பழ. கந்தசாமிக்கும் அனுப்பியுள்ளேன். அவரையும் இன்று மதியத்திற்குள் பதிவு செய்துவிடச் சொல்லுங்கள்.
  • நான் பிறகு பேசுகிறேன்.

URL - [1] -- பரிதிமதி, 19 சூன் 2010, 09:30 (இந்திய நேரம்)

 மிக்க நன்றி.பரிதிமதி! எனக்காக நீங்களே செய்திட்டங்கன்னு நினைக்கிறேன். ஏனெனில், அவ்விணையத் தொடுப்பு, இற்றைப்படுத்தப் பட்டதாகக் கூறுகிறது. தங்களை சந்திக்கும் தினத்தை எதிர்நோக்குகிறேன். நன்றி.வணக்கம்(த*உழவன் 05:16, 19 ஜூன் 2010 (UTC))

மிகத் தாமதான மறுமொழி தொகு

நீண்ட நாட்களுக்குப்பின் விக்சனரிக்கு வந்த போது தான் உங்கள் செய்தியைக் கண்டு அக மகிழ்ந்தேன். இரண்டு சொற்கள் மட்டுமே பங்களித்திருப்பவனையும் கூட மதித்து வரவேற்றமைக்கு நன்றி. நான் முனைவர் பட்டம் இன்னும் பெறவில்லை. தற்போதைக்கு பயிற்சி மருத்துவனாகப் (house surgeon) பணி செய்கிறேன். தற்சமயம் விக்கிபீடியாவில் மருத்துவம் தொடர்பான சில கட்டுரைகளை எழுதி வருகிறேன். இனி விக்சனரியிலும் மருத்துவக் கலைச் சொற்களைப் பதிவேற்ற முயல்வேன். தங்கள் வழிகாட்டுதல்கள் தொடருட்டும். நன்றி --Karthi.dr 13:36, 11 ஜூலை 2010 (UTC)

நோயில்பூசுதல் தொகு

த*உழவன் அவர்களே, anointing of the sick நோயில்பூசுதல் என்று தமிழில் வழங்கப்படும். எனவே, முந்திய நோயின் பூசுதல் என்னும் இடுகையை நீக்குதல் நலம். நன்றி!--George46 01:18, 16 மே 2010 (UTC)Reply

  • நீங்கள் வழிகாட்டியபடி நீக்கவிட்டேன். என்னை த*உழவனே! என்றழைப்பதையே விரும்புகிறேன். நன்றி.த*உழவன் 23:18, 16 மே 2010 (UTC)Reply
  • த*உழவனே, நன்றி! விவிலிய இணையத்தைச் சரிசெய்துவருகிறேன். இடுகையிட்ட சொற்களை மீளமை செய்கிறேன். --George46 15:44, 17 மே 2010 (UTC)Reply

அம்மீளமை செயலுக்கு, மகிழ்கிறேன்.மிக்க நன்றி. த*உழவன் 16:58, 17 மே 2010 (UTC)Reply

பிரம்மன்; பிரம்மா; பிரம்மம் தொகு

த*உழவனே, முழுமுதற் பரம்பொருளைக் குறிக்க பிரம்மன் (Brahman) என்னும் சொல்லும், மும்மூர்த்திகளில் ஒருவரைக் குறிக்க பிரம்மா (Brahma) என்னும் சொல்லும் வழக்கத்தில் உள்ளதாக அறிவேன். வட மொழிச் சொற்கள் தமிழாகும்போது சில சிக்கல்கள் எழுவதும் உண்டு. எனவே, Brahman மற்றும் Brahma ஆகிய இரு ஆங்கில விக்கி இணைப்புகளையும் கவனிக்கவும். நானும் தொடர்ந்து ஆய்கிறேன்.--George46 04:00, 21 மே 2010 (UTC)Reply

  • மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டியதைச் சுட்டியமைக்கு மகிழ்கிறேன். இனி கவனமாக செயல்பட துண்டியமைக்கு நன்றி. இறையியலில் தங்களைப் போன்று உயர்ந்தவனல்ல நான். எனது தவறினை மன்னிக்கவும். நான் ஆசாமிக்குள்ளே, சாமியை இரசிப்பவன். த*உழவன் 05:42, 21 மே 2010 (UTC)Reply

synagogue தொகு

அண்மைய மாற்றங்கள்: எழுத்துப்பிழை தொகு

  • த*உழவனே, அண்மைய மாற்றங்கள் பகுதியில் 'கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மற்றங்களைக் காட்டு' என்பதில் மற்றங்கள் என்று பிழையாக உள்ளதே? என்னால் அந்தப் பக்கத்தை தொகுக்கமுடியாது போல் உள்ளது. சரி செய்யவும். நன்றி பழ.கந்தசாமி 01:14, 22 மே 2010 (UTC)Reply
  • த*உழவனே, நீங்கள் மாற்ற முடியுமா? பழ.கந்தசாமி 18:42, 24 மே 2010 (UTC)Reply

எனக்கு மாற்றக்கூடிய அணுக்கமில்லை. இரவிக்கு இது குறித்து மின்மடலிட்டுள்ளேன். த*உழவன் 01:49, 25 மே 2010 (UTC)Reply

மொழியைக் குறிப்பிடும் தலைப்பு தொகு

கிசுவாகிலி, ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரும்பொழுது, மொழியை மேலே குறிப்பிடுவது வழக்கம். அதற்கு நான் தேர்வு முயற்சியாக சில இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். ஆங்கிலத்துக்கு thou, கிசுவாகிலிக்கு mti,பிரான்சியத்துக்கு légume ஆகியவற்றைப் பார்க்கவும். --செல்வா 05:12, 29 மே 2010 (UTC)Reply

  • அசைபடத்துடன் இடும் மொழித்தலைப்புப் பட்டியை நீங்கள் இடுவதை நிறுத்தி விட்டு ஆலமரத்தில் கலந்துரையாடலாமே? பின்னர் இவற்றை நீக்க வேண்டியிருந்தால் இரட்டிப்புவேலை அல்லவா? தானியங்கி இடுகின்றதா, அல்லது நீங்கள் இடுகின்றீர்களா என விளங்கவில்லை.--செல்வா 16:31, 3 ஜூன் 2010 (UTC)
  • ஆலமரத்தடியில் நீங்கள் இட்ட, எசுப்பானிய அசைப்படம் கண்டேன். ஆவலில் ஆங்கில கொடிகளின் அசைப்படத்தை உருவாக்கி, அதனைபகுப்பு:ஆங்கிலம்-பழங்கள்-ல் மட்டும் பயன்படுத்தியுள்ளேன். ஆலமரத்தடியில் பலரின் கருத்தினை அறிவோம். பலரின் கருத்தினை அறிந்த பிறகே, அதனை படிவத்தில் இணைப்பேன். நன்றி.த*உழவன் 23:48, 3 ஜூன் 2010 (UTC)
  • ஆனால் நீங்கள் பூக்கள், பழங்கள் என்று எத்தனையோ பக்கங்களில் இணைத்து வருகின்றீர்களே!! ஒரு 2-3 நாட்களில் இது பற்றி கலந்து பேசிய பிறகு செய்யலாமே. வரும் சில நாட்களில் கடுமையான வேலைகள் உள்ளன. வரும் 3-5 நாட்களுக்குள் ஒரு முடிவு எடுக்கலாமா? ஆலமரத்தில் இது பற்றி கருத்து கேட்போம்.--செல்வா 14:29, 4 ஜூன் 2010 (UTC)

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு தொகு

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

  • வெளியூர் பயணம் அதனால் உடன் இணைய இயலவில்லை. இணைய வேகம் மிக்க் குறைவாக உள்ள இடத்தில் இருந்து இதனை எழுதுகிறேன். நன்றி வணக்கம்.(த*உழவன் 02:12, 8 ஜூன் 2010 (UTC))

தொன்னை படம் நன்றி தொகு

த*உழவனே! அருமையான தொன்னை படத்திற்கு நன்றி. பழ.கந்தசாமி 15:22, 8 ஜூன் 2010 (UTC)

  • தயவுசெய்து நன்றி கூற வேண்டாம். எனது கடமையாக நான் நினைக்கிறேன். நான் கற்கின்றவன். கற்கும் போது என்மனதில் தோன்றும் தேடல்களையே, இங்கு சோதனை மூலம் செய்து பார்க்கிறேன். பிழைகளை திருத்திக் கொள்கிறேன். உங்களது சுட்டு விரலால்தான் இத்தாலிய மொழியினை கடக்க முடிந்தது.

பன்மைச்சொற்கள் மூலம் எண்ணிக்கையை கூட்ட முடியும் என்ற உங்களது கருத்தால், ஆங்கில பன்மைச்சொற்களைப் பற்றி கற்கிறேன். s மட்டும் இணைந்து உருவாகும் ஆங்கிலச்சொற்களுக்கான வார்ப்புரு உருவாக்கியது போல, பிற முறைகளுக்கும் உருவாக்க வேண்டும்.

தமிழ் மாநாட்டிற்குள் ஒரு10,000 எண்ணிக்கையாவது கூட்டவேண்டும். உங்களை போல ஆழமாக உழ ஆசைதான். போதுமான கல்வியறிவு இல்லாமையால் அகல உழுகிறேன்.

சுட்டுங்கள். என்றும் எதிர்பார்ப்புடன். அசைப்படம் குறித்த கருத்தினை உள்வாங்கிக் கொண்டேன். விக்சனரிக்கான இலச்சினை நாம் ஓட்டளித்த படி மாறியுள்ளதை கவனித்தீர்களா? இன்னும் எனது கணினியில் அமரவில்லை. நாளை இரவு அல்லது மறுநாள் தான் முடியும். வருகிறேன். வணக்கம். (த*உழவன் 15:38, 8 ஜூன் 2010 (UTC))


வரவேற்பிற்கு நன்றி! தொகு

மதிப்பிற்குரிய நண்பரே அன்பு வணக்கம்!

இரண்டே இரண்டு சொற்களைப் பங்களித்தவுடனே என்னை இப்பகுதிக்கு வரவேற்று வரவேற்பு மடல்கள் இட்ட உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்!

விக்சனரிக்குள் இப்பொழுதுக்கு ஒரு சோதனை முயற்சியாகத்தான் நான் நுழைந்திருக்கிறேன். கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபாடுடைய நான் ஏற்கனவே என் குறிப்பேடுகளில் இயற்றியும் தொகுத்தும் வைத்துள்ள கலைச்சொற்களோடு விரைவில் விக்சனரிக்கு வருவேன். அப்பொழுது என்னைப் பற்றிய தகவல்களையும், -உங்களோடும் விக்சனரிக் கிளைஞர்களோடும்- பகிர்ந்து கொள்கிறேன்.

கேட்காமலே உதவ முன்வரும் உங்கள் பெருந்தன்மைக்குப் பணிவார்ந்த நன்றிகள்! விக்சனரிக்குப் பங்களிப்பதற்கென முறையாக வரும்பொழுது எனக்குத் தேவைப்படும் உதவிகளைக் கண்டிப்பாக உங்களிடம் கேட்கிறேன்! உங்கள் வழிகாட்டுரையையும் கண்டிப்பாகப் பின்பற்றுவேன்! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:21, 11 ஜூன் 2010 (UTC)

  • வரவேற்பது என்/எங்கள் கடமை. ஒன்று சேர்வோம். உங்களைப் போன்றோருக்கு உதவ நெடு நாட்களாக காத்திருக்கிறேன்/காத்திருக்கிறோம். தமிழை, பிறமொழிகளோடு ஒப்பிட்டு வளர்க்கும் வசதி இங்கு மட்டுமே உள்ளது. அதற்கெனவே எல்லாத்திட்டங்களுக்கும், கோடிக்கணக்கில் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டு, அவற்றை ஏற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. அறிஞர் தம் அறிவை காலத்தினையும் கடந்து, கொண்டு செல்ல, இதைத் தவிர செலவில்லா வழிமுறை எங்கும் இல்லை. இணைக்க இணைக! ஓங்குக தமிழ் வளம்.நன்றி மீண்டும் பார்ப்போம்.வணக்கம்.(த*உழவன் 14:18, 11 ஜூன் 2010 (UTC))

வட மொழி சொல் / உரையாடல் தொகு

ஐயா,

"உற்சாகம்" என்னும் வட மொழி சொல்லுக்கு சரியான தமிழ் பதம் "மகிழ்ச்சி" என்பது என்னுடைய சொந்த கருத்தல்ல?, அது சான்றோர் உரைத்த உண்மை. நிறைய அன்பர்கள் 'உற்சாகம்' பக்கத்திற்கு வந்து உரையாடல் பக்கத்திற்கு வராமல் போகும் வாய்ப்பு மிகுதி. எனவே இது வந்தேறி சொல் என தெளிவாக புரியும் படி சொல்லின் முதல் பக்கத்திலேயே வழங்குவது பல பேருக்கு சென்றடையும் என்பது என்னுடைய கருத்து. இது குறித்து விளக்கமாய் பேச (விவாதிக்க) ஆயுத்தமாய் உள்ளேன்.

ஆதாரம் குறைவாய் உள்ள சொல் ஆராய்ச்சி கருத்துக்கள் வேண்டுமானால் உரையாடல் பக்கத்திற்கு அனுப்பலாம் என்பது என் கருத்து.

எடுத்து காட்டு: "pyramid" பிரமிடு -- பெரும் - இடு காடு - போன்ற ஆதாரம் குறைவாய் உள்ள சொற்களை வேண்டுமானால் உரையாடல் பக்கத்திற்கு அனுப்பலாம்.

இது குறித்து தங்கள் பதிலை வேண்டுகிறேன்.(மகிழ்)

  • தங்களின் கருத்துகளை உணர்ந்தேன்.ஐயா என்றெல்லாம் என்னை அழைக்காதிங்க. த*உழவனே!என்றே அழையுங்கள். முன்பு நாம் பேசியதன் விளைவாக, வந்தேறிச்சொல் என்பது பகுப்பு:புறமொழிச் சொற்கள் என்று கலந்துரையாடலுக்கு பிறகு மாற்றி விட்டோம்.(த*உழவன் 05:22, 5 ஜூலை 2010 (UTC))
  • என்னுடைய கருத்துகளுக்கு மதிப்பளிததர்க்கு மிக்க நன்றி, வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் மொழியில் களை போல் அமைந்த புறமொழி சொற்க்களை களைவோம். வாழ்க தமிழ். --- மகிழ் மகிழ் 05:30, 6 ஜூலை 2010 (UTC)


மருத்துவர் முனைவராகலாம் தானே! தொகு

நான் இன்னும் முனைவர் பட்டம் பெறவில்லை என்று சொன்னது Ph.D இன்னும் படிக்கவில்லை எனும் பொருளிலேயே. ஏனெனில் எனக்கு சிறு வயதிலிருந்தே ஆராய்ச்சி புரிந்து முனைவர் பட்டம் பெற வேண்டுமென்ற எண்ணமுண்டு. மருத்துவர்களும் தமிழ்நாடு ம.கோ.இரா. பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறலாம் தானே !

பண்டுவர் எனும் சொல்லை நினைவுபடுத்தியமைக்கு நன்றி! வழிப்புலந் தப்பிய தமிழருக்கு மொழிப்புலம் காட்டிய பாவணர் காட்டுப்பாடி விரிவு குடியிருப்பிலிருந்த போது அவர் மனைவியார் நோயுற்றக்காலெல்லாம் அருகிருந்த பண்டுவர் ஒருவர் தான் அவ்வம்மையாரை கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளித்தார் என்று படித்ததாய் என் மூளை இணைப்புகள் (synapses) சொல்கின்றன. --Karthi.dr 02:26, 13 ஜூலை 2010 (UTC)

  • நீங்கள் முனைவராக ஆகவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.--த*உழவன் 05:28, 13 ஜூலை 2010 (UTC)

பூச்சியல்ல புழு தானே ? தொகு

அட்டை, பூச்சியன்றிப் புழு தானே ? --Karthi.dr 12:44, 13 ஜூலை 2010 (UTC)

  • அட்டைப்பூச்சிஎன்றே சொல்கிறோம். ஆனால் விலங்கியல் வகைப்பாட்டின் படி, அது புழு இனம் தானே?--த*உழவன் 12:48, 13 ஜூலை 2010 (UTC)

த,இ.ப. உள்ளிணைப்புகளுடன் சொற்கள் பட்டியல் தொகு

மின்னஞ்சல் பார்க்கவும் பழ.கந்தசாமி 00:25, 16 ஜூலை 2010 (UTC)

  • நன்றி.பெற்றுக்கொண்டேன்.அக இணைப்புகள் இல்லாத தனிச்சொற்பட்டியல் வேண்டும். ஆங்.பொறியியல் பகுப்பு செய்ய. குழாயில் 15 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வருகிறது. அம்மாவுக்கு உதவி செய்ய போகிறேன். திரும்பி வர, அரைமணி நேரமாகும்.--த*உழவன் 00:33, 16 ஜூலை 2010 (UTC)
  • அனுப்பிவிட்டேன். 15 நாட்களாகத் தண்ணீர் வரவில்லையா? தண்ணீர் தண்ணீர்! பழ.கந்தசாமி 01:08, 16 ஜூலை 2010 (UTC)
  • இதை விட சுலபமான வழியொன்றை நண்பன் சொல்லியிருக்கிறான். அம்முறையை எக்சலில் செய்வதை மறந்து விட்டானாம்.இரண்டொரு நாளில், பதிவேற்றம் செய்ய வேண்டியவற்றை பிரித்தெடுத்துச் சொல்கிறேன். மேலும், பதிவேற்றம் குறித்து விரைவில் விக்சனரி குழுமத்தில் உரையாட உள்ளோம். அப்பொழுது பக்கவடிவம் குறித்தும் கருத்துக் கணிப்பு நடைபெற உள்ளது.

கடைசியாக அனுப்பிய தனிப்பட்டியல், கூகுளில் பார்த்தால் தனித்தனி சொற்களாகத் தெரிகிறது. நேரிடையாக பதிவிறக்கம் செய்து பார்த்தால், ஒரே ஆங்கில எழுத்தாகத் தெரிகிறது.ஏன்?--த*உழவன் 01:25, 16 ஜூலை 2010 (UTC)

  • விண்டோஸ், லினக்சு வேறுபாட்டினால் இருக்கலாம். வரிக்கு வரி காற்புள்ளி இட்டு அனுப்பவா? அப்போது இவ்வாறு ஆகாது என நினைக்கிறேன், பழ.கந்தசாமி 02:39, 16 ஜூலை 2010 (UTC)

தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.இனி தேவையில்லை.கூகுளில் இருந்தே நகலெடுத்து பயன்படுத்துகிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மன்னிக்கவும். இன்று அதிசயமாக மின்சாரம் இருக்கிறது.--த*உழவன் 02:52, 16 ஜூலை 2010 (UTC)

பொறியியல் தனிச்சொற்களுக்கு பகுப்பு நடைபெறுகிறது.உடன் த.இ.பவும் (விடுபட்டு இருந்தால்), தகவல் எந்திரன் பகுத்து விடும்.--த*உழவன் 03:35, 16 ஜூலை 2010 (UTC)

இப்போது அ.அ. நேரம் இருந்தால் வரவும் தொகு

இன்னும் ஒரு மணி நேரம் முடியும் பழ.கந்தசாமி 01:22, 17 ஜூலை 2010 (UTC)

  • உங்களுக்காகவே காத்திருக்கிறேன். அதனால் தான் இன்று TamilBOT இயக்கவில்லை.--த*உழவன் 01:26, 17 ஜூலை 2010 (UTC)

மொழிப்பட்டி தொகு

தானியங்கியாகவோ, தனியாகவோ உருவாக்கும்பொழுது, அருள்கூர்ந்து மொழிப் பட்டியை இணைக்க வேண்டுகிறேன். beluga என்னும் சொல்லில் அண்மையில் இணைத்துள்ளவாறு தானியங்கியை மாற்றுவது நல்லது.--செல்வா 16:26, 18 ஜூலை 2010 (UTC)

  • இதுவரை விக்சனரியில் உருவாக்கப் பட்ட சொற்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பக்க வடிவத்தில் இருப்பதை நான் விரும்புகிறேன். அதைப்போலவே, நான் உருவாக்கியதும், இதற்கு முன் பலவகையில் உருவாக்கினேன். அதிலுள்ள நிறைகுறைகளை, தானியங்கி பற்றி கற்கும் போது உணருகிறேன். ஏற்கனவே நான் உங்களிடம் குறிப்பிட்ட படி, எனது பல்வகை பக்க வடிவத்தினை, ஒரே வடிவமாக கொண்டு வருவதில் மட்டுமே எனது கவனம் இருக்கும்.

ஆங்கிலச் சொற்கள் மட்டுமே வரும் சொற்களிலும், விக்கிப்படங்கள் வராத சொற்களிலும் மொழிப்பட்டையைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே. மற்றதில் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை என்பதனை விட, எனக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. அனுபவமே சிறந்த ஆசான் என்று நினைக்கிறேன். அனுபவமின்மையால் எனது நேரத்தினையும், பிறரது நேரத்தினையும் கடத்த விரும்பவில்லை.

மொழிப்பட்டியை இதுவரை நான் பகுப்பு:ஆங்கிலம்-பன்மைச்சொற்கள் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளேன் என்பதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.நன்றி. வணக்கம்--த*உழவன் 01:32, 19 ஜூலை 2010 (UTC)

மொழிப்பட்டை இருந்தால் ஓரே சீராக நன்றாக இருக்குமே. மேலும் இதுபற்றி கருத்துக்கணிப்பு செய்து முடிவு செய்தோமே. ஏன் தயங்குகின்றீர்கள்? படம் இருந்தால் என்ன இடர்ப்பாடு. beluga போன்ற சொற்களைப் பாருங்கள் அழகாகத்தானேஎ உள்ளது? மேலும் ஒரே பக்கத்தில் வெவ்வேறு மொழிச்சொற்கள் இருந்தாலும், அவ்வவ் சொர்களுக்குக் கீழே அவ்வவ் மொழிக்கான பட்டைகளை இடலாமே. நீங்கள் இடும் சொற்களுக்கு ஒவ்வ்வொன்றாக மொழிப்பட்டை இடுவேண்டியிருப்பதால்தான் இவ் வேண்டுகோள்.--செல்வா 02:06, 19 ஜூலை 2010 (UTC)

 (தினமும் வரும் இரண்டுமணி நேர மின்தடை-மேலுள்ள அறிவிப்பை மறவாதிங்க) மொழிப்பட்டியில் எனக்கென்று கருத்துக்கள் இருப்பது தவறா? அதன் பயன்பாட்டில் தயக்கமே இல்லை.ஆங்கில மொழிப்பட்டை, ஆங்கிலம் என்பதனை தெளிவாக உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. ஒரே மாதிரியான எழுத்துக்களை உடைய, வெவ்வேறு மொழிச்சொற்கள் (doveபோல) மிக சொற்பமே. 100கூட இருக்காது. மற்ற அனைத்தும் ஆங்கிலச் சொற்களே. எனினும், மொழிப்பட்டி பற்றி எனது முன்னோடிகளான இரவி, சுந்தர், மயூரநாதன், நற்கீரன்..போன்றோரின் கருத்தறியவும் காத்திருக்கிறேன்.

மொழிப்பட்டி மிகக் குறுகிய காலத்தில் பலருக்கும்(விக்சனரி குழுமம்) தெரிவிக்கப்படாமல், அவசரமாக நடைபெற்றதில் எனக்கு வருத்தமே. நான் சோதனை முயற்சியாகச் செய்த மொழிப்பட்டிகளை வைத்து, அது போன்ற கருத்துக்கணிப்பு நடைபெற்றது அவசர அவசரமாக 3 நாட்களில் ஏன் நடத்தப்பட வேண்டும்? நான் உருவாக்கிய மொழிப்பட்டிகள் முழுமையானவை, கருத்துக்கணிப்புக்கு ஏற்றவை என்று நானே ஒப்பம் அளிக்க மாட்டேன்.

இந்தி மொழி பதிவேற்றத்தில், கருத்துக்கணிப்பின் அவசியத்தை இரவி சொன்ன போது, எனக்கு அவ்வளவாக புரியவில்லை. உங்களின் கருத்துக் கணிப்பு மூலம், கருத்துக்கணிப்பின் அவசியத்தை முழுமையாக உணருகிறேன்.

புதிய சொற்களைத் தானியங்கி முறையில் பதிவேற்றும் பயிற்சியை கணேசு' அளித்த போது, சொற்படிவம் பற்றி பல கருத்துக்கள் கூறினார். எனது தவறுகளும், நிலையும் அப்பொழுதே முழுமையாக உணர்ந்தேன். இருப்பினும், இந்த மொழிப்பட்டி முறையில் பதிவேற்றச் சோதனை செய்தார். எனக்கும் பயிற்றுவித்தார். பலரது கருத்துக்களையும் கேட்ட பிறகு பதிவேற்றுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

த.இ.ப. சொற்கள் வந்தடைந்த விதத்தை, மிக நீண்ட மின்னஞ்சல் அனுப்பி இருந்தீர்கள். ஏறத்தாழ நீங்கள் அனைவரும் 6மாத காலம் சிரமப் பட்டு, நல்விளைவு கிடைத்திருக்கிறது. அதனை உருவாக்கியவர்கள் நிச்சயம் 6மாதம் உழைத்திருப்பர்.ஆக ஒரு வருடம் பலரது உழைப்பில் கிடைத்த த.இ.ப. சொற்களைப் பதிவேற்றுவதில், இன்னும் காலதாமதமா? இத்தாமதத்தை என்னால் சரி என்று, உணர / ஏற்க முடியவில்லை. எனது முயற்சியால் இது கிடைத்திருந்தால், இந்நேரம் பதிவேற்றம் முடிந்திருக்கும். உங்களின் முயற்சியால் கிடைத்ததால், காத்திருக்கிறேன். எனக்கு தமிழ் விக்சனரி பற்றிய சிந்தனேயே எப்பொழுதும் இருக்கும். பிற நிருவாக பொறுப்புகள் கிடையாது.

ஏற்கனவே முடிவெடுத்து பதிவேற்றிய த.இ.ப. சொற்களின் வடிவத்தில், இச்சொற்களையும் பதிவேற்றுவதில் என்ன தடை?. ஒத்திபோடுவதால் என்ன நன்மை ஏற்படப் போகிறது என்பதை என்னால் அறியவோ/உணரவோ முடியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், நாம் அனைவரும் சேர்ந்து இங்கு வந்தோரைத் தொடர்ந்து பங்களிக்கச் செய்யவேண்டும். அவர்களின் ஆதரவினைப் பெற வேண்டும். புதிய பங்களிப்பாளர்களை கொண்டு வரும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

நீங்கள் மின்னஞ்சலில் குறிப்பிட்டது போல, உங்கள் நண்பரின் பதவிக்காலத்திற்குள்ளே மீதி சொற்களையும், பிற விசயங்களையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஆட்சி பொறுப்பாளர் மாறி விட்டால், இதே போன்ற தமிழ் நாடு அரசு ஆதரவு கிடைக்குமா என்பதில் எனக்கு ஐயமே.

குறைந்த நேரத்தில் பல வேலைகளைச் செய்யவேண்டிய நிலையிலிருக்கிறேன். படங்களை இடுவதில் தான், எனக்கு ஆர்வம் அதிகம்.அதனைத் தானியங்கி முறையில் இட ஒரு வழி(prepend) மட்டுமே தெரியும். அதனை ஆய்து கொண்டு உள்ளேன். ஒரு படம், பல சொற்களின் சுருக்கம். மேலும், எனது தட்டச்சு, விக்கி மூலத்திற்காகவே அதிகம் இருக்கவேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். எல்லாவற்றையும் விட, நான் வேகமாக செயல்படுபவன் அல்ல. உங்களைப் போல விரைந்து செயல்பட முயலுகிறேன்.

நம் விக்சனரியில் மென்பொருள் அளவில் நிறைய மாறுதல்களை, உங்களைப் போன்ற கணினியியல் துறையினர் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். எழுத்தர் பணியை, நான் எடுத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எதிர் நோக்கும்..--த*உழவன் 05:40, 19 ஜூலை 2010 (UTC)


த*உழவன், நீங்கள் பல செய்திகளை இங்கு கூறுவது குழப்பமாக உள்ளது.
  1. மொழிப்பட்டியில் எனக்கென்று கருத்துக்கள் என்கிறீர்கள். ஒரே சீராக இருந்தால்தானே அழகாக இருக்கும்? ஓர் அச்சு அகராதியையோ, தரமாக உருவாக்கப்பட்ட மின் வடிவத்தில் உள்ள அகராதியையோ (ஆக்ஃசுபோர்டு, கேம்பிரிட்சு', வெப்சிட்டர்..) பாருங்கள். ஒவ்வொருவருக்கும் விருப்பமான முறையில் வெவ்வேறு பக்கங்கள் இருந்தால் அழகாக இராது, த*உழவன்!!
  2. நான் அவசரமாக நடத்தவிரும்பவில்லை. பொதுவாக 7 நாட்கள் 10 நாட்கள் தருவது இயல்புதான். இங்கு பணியாற்றுவோர் குறைவாக இருந்ததாலே அக்கால வரையைத் தந்தேன். தாராளமாக இரவி, சுந்தர், மயூரநாதன், நற்கீரன் ஆகியோருடைய கருத்தறியலாம், ஆனால் ஒரு முறை என்று கொண்டால் அதனை ஏற்பது கூட்டொழுக்கப் பண்பு. அவ்வப்பொழுது மாற்றினால் அது பல்வேறு வகையான கேள்விக்கு உள்ளாக்கப்படும். இணக்க முடிவு என்பது விக்கி முறைகளில் ஒன்று. உங்களுக்கு வருத்தம் உண்டாகியது என்று அறிந்து வருந்துகிறேன். மீண்டும் இந்த கருத்துக்கணிப்பை நடத்தலாம் (7 நாட்களோ, 10 நாட்களோ கணிப்புக்காலமாக மொழியலாம்). ஆனால் இப்படி முடிவெடுத்த பின்னர் ஒவ்வொரும் செய்ய முற்பட்டால் முறைகேடு ஏற்படும் என்பதனை நீங்கள் அருள்கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்காக செய்தால், பிறகு மற்றொருவருக்காகவும் செய்ய வேண்டும். எத்தனை முறை செய்ய வேண்டும் என்றும் அறுதியிட முடியாது போகும். 4 நாட்கள் (நீங்கள் கூறுவது போல 3 நாட்கள் அல்ல) தந்ததற்குக் காரணம் குறைவான பயனர்களே பங்களித்து வந்தனர். நான் பலருக்கும் அவர்கள் பேச்சுப்பக்கத்தில் சென்று தனி அழைப்பும் விடுத்திருந்தேன் (பலருக்கும்(விக்சனரி குழுமம்) தெரிவிக்கப்படாமல் என்பதும் சரியல்ல). உங்கள் குற்றச்சாட்டு வியப்பளிக்கின்றது!
  3. நீங்கள் த.இ.ப சொற்களைப் பற்றி மேலே கூறியவை சரிவர புரிந்து கொள்ளாமல் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன். அச்சொற்களை உருவாக்கி 6 தொகுதிகளாக அவர்கள் அச்சில் வெளியிட பல ஆண்டுகள் ஆகின. அதனைக் கொடையாக தமிழ் விக்சனரிக்கு அளிக்க (தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி தொடர்பாக நிகழ்ந்த உரையாடல் பயனாக) த.இ.ப முன்வந்தது (முறையான ஒப்புதல் பெற்று). அதன் மென் படிவத்தை செம்மொழி மாநாட்டில் என்னிடம் கையளிக்க அழைத்து நம் விக்கி சார்பாக மயூரன், மாகிர் பெற்றுக்கொண்டனர். நீங்கள் கூறும் இன்னும் காலதாமதமா? இத்தாமதத்தை என்னால் சரி என்று, உணர / ஏற்க முடியவில்லை. எனது முயற்சியால் இது கிடைத்திருந்தால், இந்நேரம் பதிவேற்றம் முடிந்திருக்கும். என்று நீங்கள் கூறுவது இன்னும் வியப்பு! இது நம் கைக்கு வந்து சற்றேறக்குறைய 2 வாரங்கள் ஆகியுள்ளன. நீங்கள் தேவை இல்லாமல் தனியாக பகிர்ந்து கொண்ட செய்திகளை குழப்பக்கூடிய வகையில் எழுதியுள்ளீர்கள்.
  4. நீங்கள் கூறும் மேலும், எனது தட்டச்சு, விக்கி மூலத்திற்காகவே அதிகம் இருக்கவேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். என்பதும் எனக்கு விளங்கவில்லை.
  5. நீங்கள் கூறும் பிற செய்திகளும் எனக்குத் தெளிவாகப் புரியவில்லை.
  6. ஆங்கிலச்சொல்லுக்கு {{=அங்=}} என்னும் ஒரு வரியைச் சேர்க்கவோ பிற வார்ப்புருக்களைச் சேர்க்கவோ என்ன இடர் என்று தெரியவில்லை (உங்களுக்கு இந்த மொழிப் பட்டை

பிடிக்கவில்லை என்பதால் இந்தக் குழப்பம் எழுகின்றது என்று நினைக்கின்றேன்).

பழ. கந்தசாமியோ, இரவியோ வேறு யாரேனுமோ வந்துதான் நீங்கள் எழுப்பும் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும் என நினைக்கின்றேன்

--செல்வா 05:07, 20 ஜூலை 2010 (UTC)


  • த*உழவன், செல்வா! சிறந்த பங்களிப்பாளர்களாகிய நீங்கள் ’பங்காளி’ப்பாளர்களைப் போல உணர்ச்சிபூர்வமாக விவாதிப்பது உங்கள் இருவரின் மேலான உற்சாகத்தைக் காட்டினாலும், ‘அவசரம்’, ‘குற்றச்சாட்டு’, ‘எனது முயற்சியால்’, ‘உங்கள் முயற்சியால்’ போன்ற சொற்கள் வேண்டாமே!
  • மொழிப்பட்டை பக்கத்துக்கு ஓரழகைச் சேர்க்கிறது. அதில் பிரச்னைகள் இருந்தால் தீர்க்க முயலலாம்.
  • தற்போது த. இ. ப. சொற்கள் உள்ள பக்கம் பெரும்பாலும் வெறுமையாக உள்ளது. பயன்பாடு, சொல்வளம் போன்ற பகுதிகள் இருத்தல் நலம். கூடவே மொழிப்பட்டியும் இருந்தால் அழகு என்பது எனது உளமார்ந்த கருத்து.
  • விரைவில் (சில நாட்களில்) இதை முடிவுசெய்து பதிவேற்றம் ஆரம்பிப்போம்.

பழ.கந்தசாமி 06:44, 20 ஜூலை 2010 (UTC)

த*உழவன், முதல் சிக்கல் பட்டியை இணைப்பதா வேண்டாமா, எங்கு இணைப்பது போன்றது. அதனுடன் நீங்கள் பல தொடர்பில்லாத விசயங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டியதில்லை. அதிலும் தனி மடலில் பகிர்ந்தவற்றை இங்கு இட்டிருக்க வேண்டாமே? விக்சனரிக்கு நீங்கள் அரும்பணி ஆற்றுவதை செல்வா உட்பட அனைவரும் அறிவோம், பல களங்களிலும் பேசி வருகிறோம். இவ்விசயத்தைச் சற்றுப் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம்.
உங்கள் விருப்பப்படியே இன்னொரு முறை கருத்துக் கணிப்பை நடத்த செல்வாவும் இணங்கியுள்ளார். அதனால் அடிப்படைச் சிக்கல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்.
வலைவழித் தொடர்பாடல்களில் புரிந்துணர்வுச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. அதனால் செல்வா, த*உழவன், நீங்கள் இருவரும் கூடுதல் நன்னம்பிக்கை கொண்டு இதனை அணுக வேண்டுகிறேன். விக்சனரிக்கு இது ஒரு அருமையான கட்டம். இந்நேரத்தில் நம் கவனம் சிதறினால் பல அரிய வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடும்.
இன்னொன்றையும் சொல்ல விழைகிறேன். இரவி, மயூரநாதன், சுந்தர் என நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாலும் எவருக்கும் தனியான முன்னுரிமை எதுவும் கிடையாது. விக்கியில் அனைவரது பங்களிப்பையும் கொண்டாடுவோம், மிகுதி குறைவு என்றெல்லாம் பிரித்துப் பார்க்க இயலாது. முன்னோடிகளுக்கு நன்றி சொல்லுவோம். அதே வேளையில் வழக்கமான உரையாடல்களில் அதைப் பொருட்படுத்த வேண்டாம். -- Sundar 11:48, 20 ஜூலை 2010 (UTC)
Sorry for writing in English. I have not the fully read the discussion. But, I feel that there is no need to put the English flags, or give priority to English. Putting the English flags is intimidating, and of colonial mentality. One of the largest English speaking countries is India. It should be alphabetical. Particularly, considering that Tamil Wikitionary is being designed to be a multilingual dictionary. Specially, when sizable Tamil populations have other languages as second language (ex, Sinhala, Malay etc). --Natkeeran 12:57, 20 ஜூலை 2010 (UTC)

தனிப்பட்ட நேர நெருக்கடி காரணமாக 2,3 நாட்களுக்கு இதைப் பற்றி முழுதும் புரிந்து கருத்து தெரிவிக்க இயலாமல் இருக்கிறேன். தற்போது இடக்கூடிய ஆயிரக்கணக்கான சொற்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கும் விக்சனரியில் நிலைக்கப் போபவை. எனவே, இவற்றை இடுவதற்கான முறையைத் தெளிவாக ஆராய்ந்து, பலரின் கருத்தையும் உள்வாங்கி ஒரு மனதாகச் செயற்படுத்த தேவையான காலத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தயவு செய்து பொறுமையாகச் செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்--ரவி 15:09, 20 ஜூலை 2010 (UTC)

  • இங்கு கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூற விரும்புகிறேன். பக்க வடிவ முடிவுக்கு காத்திருப்பேன். காப்பேன். வணக்கம்--த*உழவன் 23:21, 20 ஜூலை 2010 (UTC)

தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள் தொகு

உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி திரு தகவலுழவன்,

மேலும் ஜாமீன் , வாய்தா, தண்டோரா, பட்டா, வாபஸ், ரசீது, துப்பாக்கி, பாரா, சிப்பாய், பந்தோபஸ்தூ, ரோந்து என அணைத்து நீதி மன்ற, ராணுவ சொற்களில் பாரசீகம் மிகுந்து கலந்துள்ளது, இந்த கலப்பு சமஸ்கிருதத்திற்கு நிகராக உள்ளது.

மேலும் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? ஏற்கனவே இங்கு பதிய பட்டுள்ள புறமொழி அடையாளமிட்டுள்ள சொற்களுக்கு மேலும் ஒரு அடையாளம் உதாரணம் : சுத்தம் என்னும் புறமொழி சொல்லிற்கு "தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்" என விரைவாக அணைத்து பக்கங்களிலும் பதிவேற்ற "Update" செய்ய எப்படி என்று சொல்வீர்களா?

மகிழ் 17:18, 23 ஜூலை 2010 (UTC)

  • அத்தகைய பகுப்பு மாற்றங்களை எளிதாகச்செய்யலாம். நீங்கள் சொற்பட்டியலை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நான் அதனைச் செய்கிறேன். பிறரது உழைப்பைப் பதிவேற்ற TamilBOTஎன்ற பயனர்கணக்கின் மூலம் அதனைச் செய்வது நமது விக்சனரியின் வழமைகளுள் ஒன்று.--த*உழவன் 00:31, 24 ஜூலை 2010 (UTC)
    • தமிழில் காணப்படும் வடமொழிச் சொற்களை அடையாளம் காண்பது இடர்மிகுந்த பணி. தமிழ் மொழியே வட மொழியிலிருந்து பிறந்தது என்னும் கருத்துடையோர் இன்று இல்லை என்பது குறித்து நாம் மகிழலாம். ஆனால், முகமும் மூக்கும் தமிழுக்கு இல்லை என்போர் இன்றும் உள்ளனர். நல்லூர் ஞானப்பிரகாசர், பாவாணர், பெருந்தாமனார் போன்றோர் தமிழிலிருந்து பிராகிருதம் வழி சமசுகிருதம் சென்ற சொற்கள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளனர். ஆதியும் பகவனும், முத்தும் பசுவும் வடமொழியா? பல தமிழறிஞர் இல்லை என்றே பதிலிறுப்பர். ஆங்கிலம், போர்த்துகீசியம், பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து தமிழ் வழக்கில் புகுந்த சொற்களை அடையாளம் காண்பது எளிதே. ஆனால் தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் இடையிலான உறவு இதுகாறும் ஒருவழிப் போக்கிலேயே ஆயப்பட்டுவந்துள்ளது (தமிழ் பெற்ற சொற்கள் யாவை என்னும் ஆய்வு) என்பதே உண்மை. தமிழ் கொடுத்த சொற்களையும் கருத்தில் கொள்வது நன்று. இதனால், "மகிழ்" முன்மொழிவதை நான் மறுக்கவில்லை, ஆனால் தமிழறிஞரின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு வடமொழிச் சொற்களை அடையாளம் காண்பது சிறப்பு எனக் கூறிக்கொள்கிறேன். வணக்கம். நன்றி!--பவுல்-Paul 01:42, 24 ஜூலை 2010 (UTC)
  • நீங்கள் உணர்த்தியவைகளை அவருக்கும் உணர்த்துகிறேன். அந்நேரத்தினை பிற ஆக்கப்பணிகளுக்கு செலவிட தூண்டுகிறேன். சீரான பாதையமைத்தமைக்கு என் உளமாற நன்றி கூறுகிறேன்.--த*உழவன் 01:51, 24 ஜூலை 2010 (UTC)

நன்றி தொகு

த*உழவனே! தங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் நிர்வாகப் பொறுப்பு பரிந்துரை ஆதரவு வாக்குக்கும் நன்றி பழ.கந்தசாமி 05:58, 26 ஜூலை 2010 (UTC)

  • இதற்கு முன் விக்சனரி நிருவாகத்தினை நடத்தியமையை, நான் மட்டுமே அறிவேன். இப்பொழுது, அனைவரும் அறிய பொறுப்பேற்றமைக்கு மகிழ்கிறேன்.த*உழவன்
த*உழவன், தங்கள் கருத்துகளை முடிந்த வரையில் செயல்படுத்துகின்றேன். எனக்கென்று ஒரு இலக்கு என் பயனர் பக்கத்தில் இடுகின்றேன். குறைந்தபட்சம் அதைச் செயல்படுத்துவதில் உறுதியளிக்கின்றேன். (இறுதியாக, ஆனால் உறுதியாக) வாக்களித்தமைக்கு நன்றி. -- பரிதிமதி 04:11, 27 ஜூலை 2010 (UTC)

சிறிது விளக்கம் தேவை தொகு

த.உழவன் அவர்களுக்கு, தாங்கள் அனுப்பிய செய்திக்கு நன்றி.

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் --- பகுதியில் பதிவு செய்துள்ளேன். முதலில் தங்களின் ஆதரவு எனக்கு தேவை. மற்ற நண்பர்களிடம் ஆதரவு தேடவேண்டுமா அல்லது அவர்களே முடிவு செய்வார்களா ? சிறிது விளக்கமும் ஆதரவும் தேவை.

நன்றி. வணக்கம். பெரியண்ணன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:04, 26 ஜூலை 2010 (UTC)

வாக்குகள் தொகு

த. உழவன், நடப்பது வழமையான மக்களாட்சி போல் போட்டித் தேர்தல் அல்ல. எனவே, மூவரில் ஒருவருக்கு மட்டும் வாக்கு செலுத்த வேண்டிய தேவை இல்லை. மூவரும் நிருவாகி ஆவதில் உங்களுக்கு ஒப்புதல் என்றால் மூவருக்கும் தனித்தனியாக ஆதரவைத் தெரிவிக்கலாம். எவரேனும் நிருவாகி ஆவதில் உங்களுக்குத் தயக்கம் என்றால், ஏதேனும் கேள்விகள் கேட்டுத் தெளிய வேண்டும் என்றால் அதைக் குறித்து "கருத்து" பகுதியில் உரையாடலாம். --ரவி 08:31, 26 ஜூலை 2010 (UTC)

  • சரி. மூவருக்கும் எனது ஆதரவுகளை அளிக்கிறேன். பெரியண்ணன் இருந்தால் அவருக்கும் எனது ஆதரவினை அளிக்கிறேன்.--த*உழவன் 01:42, 27 ஜூலை 2010 (UTC)

தற்காலிகமாக நிறுத்துகிறேன் தொகு

நன்றி. நான் அதனை தற்காலிகமாக நிறுத்துகிறேன். தமிழ் நாடு அரசு சொற்கள் கொடுத்துள்ளதா ? நன்று. ஒவ்வொரு வருடமும் இது போன்று அவர்கள் தந்தளித்தால் நன்று. சரி இதில் நான் எவ்வாறு பங்கு கொள்வது. --Inbamkumar86 06:27, 30 ஜூலை 2010 (UTC)

  • இன்பமே குமார்! மிக்க நன்றி.--த*உழவன் 06:33, 30 ஜூலை 2010 (UTC)
நன்றி. அருமையாக உள்ளது. நான் நிச்சயம் நீண்ட நேரம் விக்சனரிக்கு பணியாற்றுவேன். நீங்கள் முதலில் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும். அங்கு மின்தடை உள்ளது என்பதை கவனித்தேன். நீங்கள் அவ்வ பொது வரும் பொழுது எனக்கு உதவி செய்யுங்கள். சரி. இப்பொழுது எனது கணினியில் நீங்கள் சொன்னவாறு செய்தல் வேண்டுமா? அல்லது வேறெங்காவது செய்ய வேண்டுமா?

நான் கணினி மற்றும் இயற்பியல் , தொலைத்தொடர்பு , இயந்திரவியல் , இலத்திரனியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டுள்ளேன் . --Inbamkumar86 07:02, 30 ஜூலை 2010 (UTC)

உங்கள் பயனர் பக்கத்தில் உள்ளது போல் செய்ய வேண்டுமா? --Inbamkumar86 07:05, 30 ஜூலை 2010 (UTC)

பொருளைக் குறிக்கும்பொழுது சமன்பாட்டுக் குறி இடுதல் தொகு

அருள்கூர்ந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தரும் இடங்களில் = என்னும் சமன்பாட்டுக்குறியை இட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். இரண்டு சொற்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று ஈடானது அல்ல.ஒரு சொல்லின் பொருளை ஒருவாறு புரிந்து கொள்ளப் பயன்படும் இன்னொரு சொல் அவ்வளவே. சமன்பாட்டுக்குறி இடுவது சரியல்ல. பொருள் என்னும் தலைப்பின் கீழ் அச்சொற்களை (ஒரே சொல்லாக இருந்தாலும்) இடுங்கள். நன்றி.--செல்வா 17:17, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

தானியங்கிப் பணிகள் தொகு

வணக்கம் த. உழவன். (பிற மொழி விக்கியர் இயக்கும் வழமையான தானியங்கிகள் தவிர்த்து) இது வரை தமிழ் விக்சனரியில் தானியக்கமாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை ஆவணப்படுத்தித் தர இயலுமா? நன்றி--ரவி 11:08, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

1.பகுப்புப் பணிகள்

  • ஏற்கனவே இருந்த சொற்கள் ஆங்கிலச் சொற்கள் எனின், முன்னால் ஆங்கிலம்- என்ற முன்னொட்டு மட்டும் சேர்த்தது. எந்த பகுப்பு மாற்றமும் செய்யவில்லை.

(எ. கா.) கணிதம் என்ற பகுப்பில் abacus மணிச்சட்டம் இரண்டும் ஒன்றாக இருந்தன. இது போல பலசொற்கள். இவற்றில் abacus என்பது ஆங்கிலம்-கணிதம் என்று பகுக்கப்பட்டது.

  • தற்போது தமிழக அரசு தந்த சொற்பட்டியலில் பல பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றிலிருக்கும் பகுப்புகளை, எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளது உள்ள படியே இங்கு ஏற்கனவே உள்ள சொற்களுக்கு சேர்த்தது.

2.ஏற்கனவே பதிவேற்றப்பட்ட சுந்தர் தானியங்கி மூலம் பதிவேறிய சொற்கள், த.இ.ப.இணையத்துடன் இணையாமல் இருந்தது. அச்சொற்களுக்கு எல்லாம் த.இ.ப.இணையத்துடன் வெளியிணைப்புகளை ஏற்படுத்தியது.

3.புதியதாக உருவாக்கப்படும் சொற்களுக்கு முதலில் படிவத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் ஏற்படும் புற இணைப்புகள் மூலம், உள்ளே தகவல்களை நிரப்பிக் கொண்டுள்ளது.(எ. கா.) பகுப்பு:ஆங்கிலம்-விலங்குகள் இப்பொழுது ஒரே கட்டத்தில் முழுமையான சொல்லை உருவாக்கும் தன்மையுடையதாக உள்ளது.

4.விக்கி ஊடக நடுவத்தில் இருக்கும் அனைத்து ஐக்கிய இராச்சிய பலுக்கல்கள் அனைத்தினையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தது.

5.விக்கிப்படங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தியது.

Thanks Friend தொகு

Hi Thakavaluzhavan,Got your message,yes I wish to create a comprehensive Marathi Word list on Tamil Wikipedia,Right now I am creating approx.1000 Tamil word dictionary on Marathi Wiki with help from Selvakumar,together we are trying to create two dictionaries,both on Mr & Ta wiki,hope to receive help from you,I will definitely use the categories you mentioned to create Marathi wordlist,OK,Thanks again -Nanri,regards,Prasannakumar 08:08, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

  • Glad Mr.mr ! i hope both of you do well. If you attach sound files for the words, that will be extraordinary project. Thank you.--த*உழவன் 06:11, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

தலைப்பில் மெல்லிய எழுத்து தொகு

தாமத பதிலுக்கு மன்னிக்கவும். செல்வா அவர்கள் இப்படி எழுதக் கண்டேன். <big>'''dado'''</big> (ஆங்கிலம்) -- Mahir78 08:49, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

அட்டி5 திருத்தம் தொகு

தகவலுக்கு நன்றி, மூன்று/இரண்டு = குறிகளுக்கிடையில் சிறிய எழுத்தாக எப்படி கொண்டு வருவதென்று தெரியவில்லை. வார்ப்புரு:அட்டி5 திருத்தம் செய்திருக்கிறேன் பாருங்கள். எப்பொழுதும் நீங்கள் என்னிடம் சந்தேகங்களை கேட்கலாம். -- Mahir78 12:31, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிபெயர்ப்பு கருவி தொகு

பயனர்:MahirTest/monobook.js பக்கத்தில் இருப்பது போன்று உங்கள் என்விருப்பத்தேர்வில், மூன்று வரிகளையும் ஒட்டியபின், கண் பக்கத்தில் சோதித்து பாருங்கள். சில வழுக்கள் இருப்பதாக தெரிகிறது.{{subst:ab}} என்றிருந்தால் அந்த மொழிக்கான வார்ப்புரு உருவாக்கவேண்டும். சோதித்து சொல்லுங்கள். இது உங்களுக்கு மட்டும் தான் கிடைக்கப்பெறும். பல்வேறு சோதனைகளுக்கும், திருத்தங்களுக்குப் பிறகு எல்லோருக்கும் கிடைக்க செய்யலாம். Mahir78 17:57, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

தளத்தின் எழுத்து அளவு தொகு

விக்சனரி தளத்தின் எழுத்தளவைக் குறைத்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. மிகச் சிறிதாகப் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. கவனியுங்கள்.--Kanags 11:53, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டதல்லவா?எனக்கு வழமை போலத் தெரிகிறது.--த*உழவன் 00:55, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆலமரத்தடியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் தொகு

ஆம், நான் இரசியாவில் மருத்துவம் பயின்றேன், பெலருசியாவில் இதய நோய் மருத்துவம் பயின்றேன். --சி. செந்தி 17:41, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஊகித்தேன். இதயநோய் மருத்துவம் என்று அறிந்ததும் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு இதயத்துடிப்பு மற்றவரை விடக் குறைவு என்றும் ஒரு தடுக்கிதழ் சிறு வேறுபாட்டுடன் இயங்குவதாக 10வருடங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் கூறினார். சிறுவயதில் அதிகமாக ஓட்டப்பயிற்சி எடுத்ததுண்டு. அதனால் கூட துடிப்பு குறைவாக வாய்ப்புண்டு என்று மருத்துவர் கூறினார். பதட்டப் படாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஆபத்து ஒன்றுமில்லை கூறியிருந்தார். இதுவரை நலமாகத்தான் இருக்கிறேன். சில சமயங்களில் இலேசான வலி வரும். வாய்ப்பு கிடைத்தால், உங்களைச் சந்தித்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். --த*உழவன் 01:05, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

முன்னுரிமை கொடுத்து எந்த பணியினைச் செய்து கொண்டுள்ளீர்கள் தொகு

தகவலுழவனுக்கு வணக்கம். தாங்கள் தற்போது முன்னுரிமை கொடுத்து எந்த பணியினைச் செய்து கொண்டுள்ளீர்கள் என்பதனை தெரிவித்தால் நானும் தங்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியும். Wiktionary பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்-இதில் எனது பெயரையும் பார்த்ததும் மகிழ்ந்தேன். தமிழ் இணையப் பல்கலைக் கழக அகரமுதலியின் சொற்கள்---இவை பற்றியும், அதில் தாங்கள் செய்யவிருக்கும் பணிகளை பற்றி எனக்குத் தெளிவாக கூறினால், நான் என்னால் ஆன செயல்களை தங்கள் அனைவருடன் இணைந்து செயல் படுவேன் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவை பின். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:21, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றிகள் தொகு

நான் பயிற்சிப் பக்கத்தில் இட்டிருந்தவை அழிந்திருக்கும் என எண்ணியிருந்தேன். அவற்றைத் தொகுத்துப் பாதுகாத்தமைக்கு முதற்கண் எனது நன்றிகள். சில ஆண்டுகளுக்கு முன் நான் செய்த அச்சோதனைகள் தமிழ் அகரமுதலி ஒன்றில் என்னென்ன இருக்க வேண்டும் என்பது குறித்து வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டிருந்த தகவல்களை விக்சனரியில் இலகுவாக உள்ளிடுவதற்கான வழிவகைகளைக் காண்பதற்கான ஒரு முயற்சி. நேரக் குறைவினால் அம்முயற்சியைத் தொடர முடியவில்லை. -- Mayooranathan 06:16, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • தமிழாலும் முடியும் என்று பேசுபவர்கள் அதிகம். அதனை நம் விக்கியில் மெய்பித்தவரில் நீங்கள் தலையானவர். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் காலமும், காலனும் அழிக்க முடியாது. உங்கள் காலடிகளைப் பின்பற்றிய, நான் விக்கியுள் நுழைந்தேன். வாரம் அரைமணி நேரம் தமிழ் விக்சனரிக்கு வர வேண்டுகிறேன். நன்றி.வணக்கம்--த*உழவன் 06:25, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
நன்றிகள் தகவல் உழவன். நான் விக்சனரியில் அண்மைக்காலங்களில் பங்களிப்பு எதுவும் செய்வது இல்லையானாலும் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் நான் விக்சனரியைப் பயன்படுத்தியே வருகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகளை எழுதும்போது கலைச் சொற்களுக்காக விக்சனரியையே முதலில் தேடுவது எனது வழக்கம். எனவே விக்சனரியிலிருந்து நான் விலகி இருப்பதாக நினைக்கவிலை. விக்சனரிக்குப் பங்களிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு அதிக விருப்பம் உண்டு முக்கியமாகத் தமிழ்-பிறமொழிப் பகுதியைச் சிறப்பாக உருவாக்குவதில் பங்களிக்க எனக்கு ஆர்வம் அதிகம். ஒவ்வொரு தமிழ்ச் சொல் தொடர்பிலும் அவற்றின் பொருள் மட்டுமன்றி; காலம், இடம், பால் குறிக்கும்போதும்; பல்வேறு ஒட்டுக்கள் சேரும்போதும் ஏற்படும் மாற்றங்கள்; பல்வேறு காலகட்டங்களில் அவற்றுக்கான பொருள் மாற்றங்கள், சொற்பிறப்பு போன்ற பல தகவல்களை உட்படுத்தி விக்சனரி வளர வேண்டும் என்பது எனது விருப்பம்.
அத்தோடு பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் சொற்களை நூல் அடிப்படையில் பட்டியல் இடுவதும் எனது ஆர்வங்களில் ஒன்று. திருக்குறளில் உள்ள சொற்களைப் பட்டியலிடும் வேலையை ஏற்கெனவே தொடங்கியிருந்தேன். அதை இங்கே காணலாம். இவ்வாறு பட்டியல் இடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சொல் எந்த நூலில் முதலில் காணப்படுகிறது. அது எவ்வாறு மாற்றம் பெற்றது அல்லது எப்போது வழக்கொழிந்தது போன்ற விபரங்கள் குறித்த ஆய்வுகளுக்கு உதவக்கூடும். சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கும் இப் பட்டியல்கள் உதவக்கூடும். தனியங்கிகள் மூலம் இத்தகைய பட்டியல்களை உருவாக்கலாமா என்றும் சிந்தித்து வருகிறேன். எனவே இப்போதைக்கு அடிக்கடி விக்சனரியில் பங்களிப்புச் செய்ய முடியாதிருந்தாலும், வேளை வரும்போது குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் விக்சனரிக்குப் பங்களிப்புச் செய்யும் எண்ணம் உள்ளது. அதுவரை இடைக்கிடை பங்களிப்புச் செய்ய முயல்கிறேன். --Mayooranathan 12:22, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
அச்சொற்களை உங்களிடம் ஆலோசித்த பின்பு, தொடர்ந்து நான் வளர்க்கிறேன். விக்கி நண்பர்களுக்காகவே சிறு நூலகமொன்று இருப்பின், அதனை (காப்புரிமை பெற்ற நூல்களாக இருப்பினும்,) தனிச் சுற்றறிக்கையுடன் பயன்படுத்தினால், உங்களது வழிகாட்டலை சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில், நம்மில் அரிய நூல்கள் பயன்படுத்தாமல் இருக்க வாய்ப்புண்டு. ஒரு நூல் மற்றவருக்கு உதவக் கூடும். அனைத்து நூல்களையும் வாங்குவதென்பது எனக்குச் சற்று சிரமமானது. நூல்கள் இல்லாமல் ஒரு திட்டம் திடமாக இருக்காது என்பது என் எண்ணம். நிறைய விமர்சனங்கள் எழுவது தவிர்க்கப்படலாம். எதிர்பார்ப்புடன்..--த*உழவன் 14:30, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மயூரநாதன், திருக்குறள் சொற்களை அகரவரிசைப்படியும், ஒவ்வொரு சொல்லும் எத்தனை முறை எந்தெந்த குறட்பாக்களில் வருகின்றன என்பனவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்த்திருக்கிறேன், ஆனால் துல்லியச் சுட்டுகள் இப்பொழுது என்னிடம் இல்லை, ஆனால் கட்டாயம் இவை ஏற்கனவே உள்ளன. இதே போல தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் செய்திருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன் (இது உறுதியான செய்தி இல்லை). இதற்கான செய்திகள் கிடைத்தால் இடுகின்றேன். ஆக்ஃசுபோர்டு அகராதியில் காலவரிசைப்படி ஒரு சொல்லின் பயன்பாடு குறித்து வந்துள்ளார்கள். அது ஒரு பெரும் பணி பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் சேர்ந்து செய்தது. தமிழ்நாடு அரசு, செந்தமிழ் நிறுவனம் போன்றவை செய்யலாம். நம்மால் முடிந்த அளவு நாமு சிறிதளவு செய்யலாம் :) நம்மிடம் கருத்துகள் உள்ளன, செயலாற்ற ஆளம்பு இல்லை :) இப்பதிவை மயூரநாதன் உரையாடல் பக்கத்திலும் இடுகின்றேன்.--செல்வா 15:17, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • நம்மால் இயன்றதை செய்வோம். நீங்கள் கூறிய தொகுப்புகளுக்கான தொடுப்புகளையும் இங்கிட்டால் நன்றாக இருக்கும். உங்கள் கருத்துக்களை இட்டமைக்கு நன்றி.வணக்கம்.--த*உழவன் 16:17, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
    • உங்கள் கருத்துக்களுக்கு நன்றி செல்வா. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ் இலக்கியங்களின் சொற்பட்டியல்கள் ஏற்கெனவே இருக்கும் என்றுதான் நானும் கருதுகிறேன். அத்தோடு, நூல்களிலிருந்து சொற்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பட்டியலாக்குவதற்கென மென்பொருட்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இவையெல்லாம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளனவா என்று தெரியவில்லை. பெரிய நூலகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ கிடைக்கலாம். இணையத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. விக்சனரியில் இவ்வாறான தகவல்கள் இருப்பது வசதியாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்டதுபோல் முழுமையான பட்டியல்களை உருவாக்குவது என்பது நிச்சயம் மிகவும் பெரிய வேலைதான். எங்களால் முடிந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய முடியும். உரைகளுடன் கூடிய நூல்கள் இருந்தால் சொற்களைப் பட்டியலிடுவது பெரிய விடயமாக இருக்காது என்றே தோன்றுகிறது ஆனால், நேரம் அதிகம் தேவைப்படும் என்பது உண்மைதான். -- Mayooranathan 17:41, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பக்க வடிவமைப்பு தொகு

தகவலுழவன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் "இதற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ள சுந்தர் தானியங்கி படிவ வடிவம் ஏன் வேண்டாமென்று சில வரிகள் எழுதக் கேட்டுக்கொள்கிறேன்" இதனை நான் எங்கு பதிய வேண்டும்? பேச்சு:dado என்னும் பக்கத்தில் உள்ள முதல் வடிவத்தைப் பார்த்தால் (என் கருத்துப்படி), (1) அது எடுப்பாக இல்லை, (2) முதலில் கொட்டை எழுத்தில் "ஆங்கிலம்",பிறகு அடுத்து அடுத்து பலுக்கல், கடைசியாக சிறிதாக பொருள்; பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்று விளக்கம் இல்லை. நீங்கள் மாற்றி அமைத்ததில், பெயர்ச்சொல் என்னும் குறிப்பைச் சேர்த்து உள்ளீர்கள், அதனை நான் வரவேற்கிறேன், ஆனால் சொல்-ஆங்கிலம்-பெயர்ச்சொல் என்னும் தொடர் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு நேர்த்தியாய் இல்லை என்பது என் கருத்து. மேலும் பொருள், விளக்கம் என்னும் பட்டைகள் எடுப்பாக இல்லை (எழுத்துகள் மிகவும் மங்கலாக இருப்பது ஆவலைத் தூண்டுவதாக இல்லை என்பது என் கருத்து). இவற்றை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்க வேண்டுகிறேன். எனக்கு dado2 என்னும் வடிவம் பிடித்துள்ளது. நீல நிற எழுத்தில் இருப்பது தவறாக எனக்குப் படவில்லை. அது கறுப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்பினால் அப்படியே இருக்கட்டும். ஆனால் நீலம் பிடிக்கின்றதா, கறுப்பு பிடிக்கின்றதா என்று கேட்டுப்பார்க்கலாம். இதற்காக இனிமேலும் நேரம் செலவிடுவது நல்லதல்ல என்பது என் கருத்து. --செல்வா 17:25, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பக்கவடிவம் தொகு

  • பக்க வடிவம் + வடிவத்துள் இடப்படும் தகவல்கள் என்று இரண்டினைக் கையாள உள்ளோம். இதில் பக்க வடிவம் என்பதனை வார்ப்புருக்களில் அடக்கி விட்டால், மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு தமிழ் விக்சனரியின் பக்கவடிவம் மாற்றுதல் மிக மிக எளிது. இதற்கு முன் செய்யாததை நாம் செய்ய உள்ளோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை விக்கி syntax இல் அமைக்க முயற்சிக்கிறேன். உங்களைப் போன்று விவரம் தெரிந்தவர் இதுபற்றி எண்ண வேண்டும்.நன்றி.தூக்கம் வருகிறது.நீங்கள் கருத்திடுவீர்கள் என்ற எண்ணத்தில் இதுவரை இருந்தேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, எண்ண வேண்டுகிறேன். கருத்திட்டமைக்கு நன்றி.வணக்கம்--த*உழவன் 17:35, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply
வார்ப்புருக்கள் தனிசையாக (மாடுலராக) பிரித்து சேர்க்கும் விதமாக இருப்பது நல்லது. ஒன்றுக்குள் ஒன்றாக சொருகிணைப்பாக (nested) செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் பட என்பதைக்கூட ஒருவார்ப்புருவாகச் செய்து இருந்தீர்கள். அதில் படவணுக்களின் எண்னிக்கையை மாற்றுவதூ கடினம், அப்படியே ஒன்றில் மாற்றினால் அது பலவற்றிலும் மாறி கெடுக்ககூடிய வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமல், எளிமையாக, யாரும் புரிந்து கொண்டு, தனிசையாக (மாடுலராக) மாற்றிப் பொருத்தி அமைக்குமாறு இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆம் எளிய விக்கி நிரல் மொழியில் அமைப்பதே நல்லது.பணியர்வு கூடினாலும், ஒவ்வொருநாளும், அல்லது ரண்டுநாட்களுக்கு ஒருமுறை 1 மணிநேரம் செலவிடமுடியும். கிழமையிறுதி நாட்களில் இன்னும் கூடுதலாக 2-3 மணிநேரம் செலவிட முடியும். எதுவும் உறுதியில்லை (பணியலையைப் பொருத்தது). தமிழ் விக்சனரி மிகச்சிறப்பாக (பொருளடக்கத்திலும், அதன் துல்லியத்திலும், பயன்பாட்டுச் செழுமையிலும், வடிவமைப்பிலும், தொடர்ந்த

வளர்ச்சியிலும்) இருக்கவேண்டும் என்பதே அவா. கூடி உழைத்தால் எட்டுவது கூடும் என்பது என் நினைப்பு.--செல்வா 17:50, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இணையச்சேவை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. அரசு அலுவல்களிலும் கணினியும், இணையமும் இப்பொழுது அறிமுக நிலையில் தான் உள்ளது. இன்னும் 5-6 வருடங்கள் போனால்தான் இணையவேகம் சீராக கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.
அதனால் குறைவாக இப்பொழுதுள்ள வேகத்திலும் படங்கள் தெரிய வேறு விதமான பட வார்ப்புரு என்க்குப் புலப்படவில்லை. தற்பொழுது கட்டைவிரல் அளவு படம் வரும். அதனை பின்னர் அனைத்திலும், பெரிதாக்குவது எளிது.

பின்னர் மாற்றுவதற்கு வசதியாக, வேறு இருப்பின் பிற படிவ வார்ப்புருக்களை காட்டுங்கள். என்னால் இயன்றது இப்பொழுது dadoவில் காட்டியுள்ளேன். நன்றி.--த*உழவன் 00:47, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கருத்துக் கணிப்பு தொகு

தகவலுழவன், பேச்சு:dado2 என்னும் பக்கத்தில் நீங்கள் இட்டுள்ள கருத்துகள் பற்றி சில கேள்விகள் எழுதுள்ளன. இது பற்றி ஆலமரத்தடியிலும் எழுதியுள்ளேன். பார்க்கவும்.--செல்வா 03:33, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

எழுத்துப்பிழை தொகு

அண்மைய மாற்றங்கள் பக்கத்திலுள்ள நீங்கள் குறிப்பிட்ட எழுத்துப்பிழையைத் திருத்தியுள்ளேன் பார்க்கவும். இவ்வாறான எழுத்துப் பிழைகளை "சிறப்புப் பக்கங்கள்" பகுதியில் "அனைத்து முறைமைகள் அட்டவணை" பக்கத்துக்குச் சென்று திருத்தலாம். --Mayooranathan 18:47, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • வழிகாட்டியமைக்கு நன்றி. நம் விக்சனரியில் எப்பக்கங்கள் அதிகமாகப் பார்க்கப் படுகின்றன என்பதனை அறிய ஆவல். அது பக்கவடிவ மாற்றத்திற்கு உதவலாம் என்ற எண்ணத்தில் கேட்கிறேன். மேலும்,முதற்பக்கத்தில் விக்கிபீடியா என்று உள்ளது. விக்கிப்பீடியா அதனையும் அங்கு மாற்ற முடியுமா? விக்கிபொது என்று உள்ளது. அதனையும் கூட விக்கி ஊடக நடுவம் அல்லது விக்கி கோப்பகம் என்று மாற்றினால் சிறப்பாக இருக்கும்.dadoவின் பக்கத்தினைப் பார்த்து அதன் பேச்சுப்பக்கத்தில் உங்களை கருத்திடக் கேட்டுக்கொள்கிறேன். பலரின் கருத்தினைக் கேட்டு அப்பக்கத்தினை மாற்றிவருகிறேன். நன்றி. --த*உழவன் 23:52, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தகவலுழவன், முதற்பக்கத்தைத் தொகுக்க முற்பட்டால், அதில் கீழே கடைசியில் பிறமொழி விக்கிகளுக்கான இணைப்புக்கு முன் {{Mainpagefooter}} என்று ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே வார்ப்புரு:Mainpagefooter என்பதைத் தொகுக்க முற்படுங்கள். அங்கே {{wiktionarysister}} என்று ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே வார்ப்புரு:wiktionarysister என்னும் பக்கத்தைத் தொகுக்க முற்பட்டால், நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம். இது உங்களுக்கு உதவும் என நினைக்கின்றேன்.--செல்வா 00:18, 9 செப்டெம்பர் 2010 (UTC) இப்போதைக்கு விக்கிப்பீடியா என நீங்கள் விரும்பியவாறு மாற்றியுள்ளேன். பிழையைக் கண்டுபிடித்ததற்கு நன்றி.--செல்வா 00:20, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • உடனே சீர்செய்து வழிகாட்டியமைக்கு நன்றி.இது போன்ற பிழைகள் பிற திட்டங்களிலும் கண்டேன். என்னால் முடியுமாயின் மாற்றுகிறேன். கற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றி.--த*உழவன் 00:38, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் பக்கம் தொகு

த*உழவனே! ’பதிவேற்றம் எப்பொழுது’ பகுதியைக் காண்க. பழ.கந்தசாமி 05:06, 2 அக்டோபர் 2010 (UTC)Reply

புதிய பயனர்கள் தொகு

முன்பு பங்களித்து நாம் அறியாத பயனர்கள் வாக்களிக்கலாம். ஆனால் மற்ற எல்லா முடிவுகளைப்போலவும், வெறும் எண்ணிக்கையால் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. பொதுவான ஒப்புதல் உள்ளதா, எதிர்ப்புகள் எத்தகையன, அவற்றின் வலு என்ன என்பதைப் பொருத்துக் கூட்டாக ஒரு இணக்கம் முடிவுக்கு வருவதாகும். பயனர்களில் புதியவர்கள் பழையவர்கள் என்பது பொருட்டல்ல, சொல்லப்படு கருத்தும் அதன் வலுவும், பயனும் முதன்மையானவை. --செல்வா 18:08, 14 அக்டோபர் 2010 (UTC)Reply

எந்திரன் இயக்குநருக்கு நன்றி தொகு

தகவல் உழவனே! எந்திரன் நன்றாக ஓடுகிறது. எந்திரனை இயக்கிப் பதிவேற்றத்தை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி பழ.கந்தசாமி 02:20, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

சொற்கள் பதிவேற்றம் சீராக நடப்பது கண்டு மகிழ்ச்சி. இதனைப் பொறுப்பேற்றுப் பதிவேற்றுவதற்கு நன்றி--ரவி 08:04, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

எந்திரம் படுவேகமாக ஒடுகிறதே. பலே!--Sodabottle 11:19, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

வாழ்த்துக்கள்! ஏற்கெனவே இருக்கும் சொற்களை எப்படி கையாளுகிறீர்கள்?, ஒலி கோப்புகளில் முதல் எழுத்தை capital letter ஆக மாற்றினால் கோப்பு இருக்கிறது என்று வந்தால் சொல்லுங்கள் வார்ப்புருவை சிறிது மாற்றி பொதுவாக வேலைசெய்ய வைக்கலாம். பழ. கந்தசாமி சொன்னதாக நினைவு. -- மாகிர் 13:56, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

தானியங்கியை 24 மணி நேரமும் ஓட விட்டால் நல்லது. உங்களுக்கு இணைய இணைப்புப் பிரச்சினைகள் இருக்குமானால், மற்ற பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பேசி வைத்து ஓட்டலாம். ஒரே நேரத்தில் பலர் ஓட்டினால் பிரச்சினை வருமா என்னவென்று தெரியவில்லை. என்னால், 24 மணி நேரமும் ஓட்ட இயலும் :) --ரவி 21:14, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

அனைவருக்கும் எனது நன்றிகள். இரவி!அனைத்தினையும் பலமுறை சரிபார்த்து ஓட்டுவதால்,10 நாட்களுக்குள் ஓட்டி முடிக்கவேண்டுமென எண்ணுகிறேன். இவ்வாறு செய்வதால் பிழைகளை, பிறகு சரிபார்க்கவேண்டிய தேவையிராது என்றே எண்ணுகிறேன். இருப்பினும் 24 மணி நேரமும் என்னால் ஓட்ட இயலாது? ஒரு நாளைக்கு 4-5மணி நேரமே இயலும்.--த*உழவன் 01:13, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

  • தகவலுழவனுக்கு வணக்கம். தாங்கள் 3,000-க்கும் அதிகமான புதிய சொற்களை உருவாக்கியதற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இம்முயற்சியில் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • உங்கள் சோதனைகளையும், விக்சனரி நிலைப் பற்றிய குறிப்புகளையும் கண்டேன். மகிழ்ச்சி. விரைவில் நீங்களும் பதிவேற்றத்தில் கலந்துகொள்ள, என்னால் முடிந்தவற்றை செய்கிறேன். இரண்டொரு நாட்கள் பொறுக்கவும். எக்சலில் ஒரு ஐயம் உள்ளது. அது பற்றி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். பார்க்கவும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 16:58, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

சரிங்க, த.உழவன். பிழை திருத்தம், உறுதி பார்த்தல் போன்ற வேலைகள் இருந்தால் முதலில் இருந்தே இதில் ஈடுபட்டுள்ள நீங்கள் / மற்ற விக்சனரி நண்பர்கள் பங்கு கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.

திருச்சி பெரியண்ணன்: அடடா, இதில் என்னுடைய அனுமதி எங்கங்க வந்தது :) எல்லா விக்கிப்பணிகளைப் போல இதுவும் எல்லாரும் தானாகப் பொறுப்பெடுத்துச் செய்வது தான். நீங்களோ யாருமோ த. உழவனுடம் பேசி ஒரு குழுவாக புரிதலுடன் இணைந்து இயங்கலாம். --ரவி 23:26, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

எந்திரனை இயக்கும் த.உழவனுக்கு நன்றிகள், அத்துடன் மருத்துவ அசைப்படங்களின் தொகுப்பைக் காண உதவியமைக்கும் நன்றிகள் --சி. செந்தி 19:20, 22 அக்டோபர் 2010 (UTC)Reply
மிக்க நன்றி.வணக்கம்.--த*உழவன் 23:05, 22 அக்டோபர் 2010 (UTC)Reply

உருசிய - தமிழ் அகரமுதலி தொகு

adjuntant lesser தொகு

இது அமெரிக்காவில் வாழும் பறவை -- Sandhill Crane என்று பெயர். மேலும், lesser adjutant என்ற பெயர் கொண்ட கொக்குதான் இந்தியாவில் உண்டு. adjuntant lesser என்று கூறுவதில்லை. அதன் தமிழ்ப்பெயர் தெரியவில்லை; தேடுகிறேன். இப்போதைக்கு பொதுவான உள்ளடக்கம் இடுகின்றேன். --பரிதிமதி 03:28, 31 அக்டோபர் 2010 (UTC)Reply

நன்றி தொகு

தன்னியங்கி விக்கி உலாவி நுட்பத்தைப் (AWB) பயிற்றுவித்தமைக்கு நன்றிகள்! --சி. செந்தி 19:09, 1 நவம்பர் 2010 (UTC)Reply

Norsk Bokmal தொகு

விக்கி மராத்தான் தொடர்பாக, நாளை கலை நார்வேயின் பேர்கன் நகரில் ஒரு மினி மராத்தான் நிகழ்ச்சியை நடத்த உள்ளார். அதன் பகுதியாக norsk (bokmal) -தமிழ் சொற்களை உருவாக்க சொல்லித்தாருங்கள் என்று கேட்டுள்ளேன். அதற்கு உதவ நமது புதிய சொற்கள் பக்கத்தில் உள்ளது போல (உருசியத்துக்கு செந்திக்கு செய்து தந்தது போல) norsk bokmal க்கு ஒரு வார்ப்புரு செய்து தாருங்களேன். --Sodabottle 08:51, 12 நவம்பர் 2010 (UTC)Reply

நானும் கலையும் சேர்ந்து ஒரு மாதிரியாக நோர்வே மொழி பூக்மோலுக்கு வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளோம். நேரம் கிடைத்தால் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று பாருங்கள்.--Sodabottle 03:37, 13 நவம்பர் 2010 (UTC)Reply
norsk (bokmal) உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சொற்களை, பின்வரும் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.
  1. பயன்பாடு போன்ற பயன்படுத்தாத வார்ப்புருக்களை, இப்பதிவேற்றத்தில் பதிவேற்ற வேண்டாம்--இரவி
  2. ஆங்கில மொழிபெயர்ப்பு தேவையில்லை.தமிழ்விக்சனரியில் தமிழ் மொழிபெயர்ப்புமட்டுமே போதும்--செல்வா
    தகவல் உழவனின் கருத்து
  3. தற்போது ஏற்பட்டுள்ள அனுபவங்களினால், இந்த வடிவத்தினை கையாள எண்ணுகிறேன்.சிந்திக்கவும்.
  4. ஒலிக்கோப்புகளையும் பதிவேற்றுங்கள். மற்ற விக்சனரிகளில் இல்லையென்பதால், இதுமுன்னோடி திட்டமாக மாறும்.
  5. தானியங்கி முறையில் பதிவேற்றும்முறைகளை அறிந்து கொள்ள விருப்பமா? கற்றுணர ஒருமணிநேரம் ஆகும்.--த*உழவன் 00:59, 14 நவம்பர் 2010 (UTC)}Reply
தற்போது ஆதாரமாகப் பயன்படுத்தும் லெக்சின் அகராதியில் ஆங்கில மொழிபெயர்ப்பு /பயன்பாடு இரண்டுமே உள்ளது. நான் inclusionist என்பதால், இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும் என்பது என் கருத்து. லெக்சின் சொற்களை விக்சனரிக்கு கொடையாக வழங்கிட நார்வே கல்வித்துறையை அணுக முயற்சிகளை நானும் கலையும் மேற்கொண்டுள்ளோம். வெற்றி கிட்டுமெனில் வடிவங்களை கிடைக்கும் உள்ளடக்கங்களைப் பொருத்து உங்கள் முந்தைய அனுபவங்களைக் கொண்டு புதிய வார்ப்புரு வடிவத்தை அப்போது உருவாக்கலாம். அவர்கள் ஒப்பவில்லையெனில் நீங்கள் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு ஓரிரு வாரங்களில் இவற்றை மாற்றி விடுகிறேன்.--Sodabottle 03:54, 15 நவம்பர் 2010 (UTC)Reply

காலத்தினையும் கடந்து நிற்கப் போகும் உங்கள் இருவரின் பதிவுகள் ஓங்கி வளர வாழ்த்துகள். என்னால் இயன்றவரை தங்கள் இருவருக்கும் துணை நிற்பேன். படங்களை இடுவதிலும், தானியக்கமுறையை உங்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்துவதிலும் துணை நிற்பேன்.ஓங்குக தமிழ் வளம்.

அடிப்படை சீனச் சொற்களை மொழியாக்கம் செய்யும் போது ,உடன் ஆங்கிலச்சொற்களை இணைக்கும் போது, குழப்பங்கள் தவிர்க்கப்படுவதை உணருகிறேன். ஏற்கனவே, பழ.கந்தசாமியும் எசுப்பானிய-தமிழ் அகரமுதலி உருவாக்கியபோது ஆங்கிலச் சொல்லைக் கையாண்டார். எனவே, நீங்கள் கூறுவது போல பலரின் கருத்தறிந்து வடிவமைப்போம். தங்களது விரிவான பதிலுக்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இயற்கையன்னையை வேண்டுகிறேன். --த*உழவன் 04:49, 15 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றி தவலுழவன். பயன்படுத்தப்படாத வார்த்தைகள் நீக்குதல்பற்றி சோடாபாட்டில் சொல்லியிருக்கிறார். எனக்கு இந்த தொழிநுட்ப விடயங்கள் சரியாகப் புரியாததால் அதைப்பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் அங்கு கூறியுள்ளதன்படி, லெக்சின் சொற்களைப்பெற்று பதிவேற்ற முடியுமெனில் நல்லதுதான். ஆங்கில மொழிபெயர்ப்பைச் சேர்ப்பது மேலதிக விளக்கத்தைக் கொடுக்கும் என்பது எனது கருத்து. விக்கிப்பீடியாவில் எழுதும்போதும் அப்படி கொடுப்பது எனது வழக்கம். தானியங்கி முறை பற்றி கற்றுக் கொள்ள விருப்பமுண்டு. எவ்வாறு எனக் கூறுங்கள். கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து கற்றுக் கொள்கின்றேன்.--கலை 15:27, 15 நவம்பர் 2010 (UTC)Reply

நோர்வே மொழி பகுப்புக்கள் தொகு

நோர்வே மொழியில் எழுதப்படும் சொற்களுக்குரிய பகுப்புக்களை மீள ஒழுங்கமைக்கலாம் என எண்ணுகின்றேன். அதற்காக ஏற்கனவே போடப்பட்டிருந்த சில பகுப்புக்களை நீக்கும்படி வார்ப்புரு போட்டிருக்கிறேன். அவற்றைப் பார்த்து நீக்கி விடுவீர்களா?--கலை 16:06, 15 நவம்பர் 2010 (UTC)Reply

பகுப்பாக்கம் தொகு

  • த*உழவனே! வெள்ளியன்று நான் அரட்டைக்கு வரமுடியாமல் போய்விட்டது. அடுத்தவெள்ளி நிச்சயம் சந்திப்போம்.
  • பச்சாதாபம் போன்ற பல சொற்களை மனவியல் என்று பகுத்து வருகிறீர்கள். ஆனால், இம்மாதிரி பொதுப்பயன்பாட்டுச் சொற்களை அப்படிப் பகுத்தால் உண்மையான மனவியல் துறை சார்ந்த கலைச்சொற்கள் எவை என அறிதல் கடினம். அதனால் அப்படிப பகுக்காமல் இருப்பதே நலம். நன்றி பழ.கந்தசாமி 01:17, 6 டிசம்பர் 2010 (UTC)
  • இதுவரை பொதுப் பயன்பாட்டுச்சொற்களையும் பல பகுப்புகளில் இணைத்தேன். ஏனெனில், த.இ.க.க. சொற்களில் அம்முறையிருந்த தால் நானும் பின்பற்றினேன். நீங்கள் கூறுவது போல செய்தால், கற்பதற்கு எளிமையாகும் என்பதனை உணருகிறேன். இனி அது போல கடைப்பிடிக்கிறேன். நீங்கள் கூறுவது போல வரும் நாட்களில் சந்திப்போம். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த*உழவன் 01:24, 6 டிசம்பர் 2010 (UTC)}

2010 தமிழ் விக்சனரி அறிக்கை தொகு

தமிழ் விக்கிப்பீடியா போன்று தமிழ் விக்சனரியிலும் ஒரு ஆண்டு இறுதி அறிக்கை தயாரித்தால் நன்றாக இருக்கும். எமது வளர்ச்சியப் பதிவு செய்து, என்ன செய்ய வேண்டும் என்று பரந்து சிந்திக்க உதவும். ஒரு சில பத்திகளாகவே இருந்தாலே போதுமானது. --Natkeeran 05:13, 29 டிசம்பர் 2010 (UTC)

  • நான் அறிந்ததை எழுதித்தருகிறேன். என்றுக்குள் எழுதித்தரவேண்டும்--த*உழவன் 05:43, 29 டிசம்பர் 2010 (UTC)
திகதி என்று ஒன்றும் இல்லை. சனவரி 15 முன்பு என்றால் நல்லது. நன்றி. --Natkeeran 04:10, 30 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/2010&oldid=1284349" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Info-farmer/2010".