பேச்சுத்தமிழ்

தொகு
  • ஒன்றும் என்பதில் உள்ளது போல பேச்சுத் தமிழை சேர்ப்போமா? எனக்கு ஒலிக்கோப்பாக அமைப்பது தான் மிகச் சரியாகப் படுகிறது. எனினும், இப்படி எழுதி அமைப்பது உடனுக்குடன் அவ்வேலை முடிந்து விடும் என்பதும் புரிகிறது.

தமிழல்லாத பிற சொற்களின் வடிவமைப்பு

தொகு

dove ல் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். பெயர், வினைச்சொல் வேறுபாடுகளுடன் பாரக்கவும். பிற மொழிகளையும் சேர்க்கலாம். இவ்வடிமைப்பிற்கு பிறமொழிகளில் தமிழ் + ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும் போதும் என்று நீங்கள் உணர்த்தியது மிகவும் உதவியாக இருந்தது.7-8மணிநேரத்திற்கு பிறகு வருவேன்.த*உழவன் 07:39, 29 டிசம்பர் 2009 (UTC)

dove வடிவமைப்பு

தொகு
  • dove என்பதில் சிலகருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். அச்சொல்லின் உரையாடல் பக்கத்தில், தேவைப்படும் இடத்தில் மூன்று ***வைத்து, உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்.த*உழவன் 07:57, 30 டிசம்பர் 2009 (UTC)
  • தவறுதலாக சற்றுமுன் செய்த பதிவை அழித்து விட்டேன். மன்னிக்கவும்.விளக்க வார்ப்புருவை சிறிது படுத்தி விட்டேன். விளக்கம் பகுதியில் சொற்பிறப்பியலைத் தந்தால் நன்றாக இருக்கும். ஒரு சொல்லைப் பார்ப்பவருக்கு, மொழிப்பெயர்ப்புக்கே முன்னுரிமை. இது போன்ற விடயங்களை, விளக்கம் பகுதியில் சேர்த்தால் நன்றாக இருக்கும். பிற விக்சனரியில் இருப்பது போன்று, மொழிபெயர்ப்பை கடைசியாக தருவதில் எனக்கு உடன்பாடில்லை.த*உழவன் 06:44, 31 டிசம்பர் 2009 (UTC)
  • 2 சொற்பிறப்பியல் என்ற உப ப்பிரிவில், உங்களுக்கு எனது முடிவுகள். த*உழவன் 01:02, 2 ஜனவரி 2010 (UTC)
  • dove பக்கத்தை நம் முடிவுகளின் படி மாற்றியுள்ளேன் - பெ, வி முதலியவற்றை உபதலைப்பாக்கி. மேலும் ஒரு சொல்லுக்கு ஒரே பொருள் இருந்தால், எண்குறிக்கு (#) பதில் (:*) உபயோகித்துள்ளேன். பார்த்துச் சொல்லவும் பழ.கந்தசாமி 19:13, 3 ஜனவரி 2010 (UTC)

 //பெ, வி முதலியவற்றை உபதலைப்பாக்கி. // பற்றி சொல்லியருந்திங்க.மன்னிக்கவும்.உடனுடக்குடன் அம்மாற்றத்தை செய்யாமல், பேசுவதோடு நின்று விட்டேன்.வடிவமைப்பு முடிந்தது தானே?

  • எனக்கு வேறு மாற்றங்கள் இல்லை. முடிந்ததாக வைத்துக்கொள்வோம். பழ.கந்தசாமி 00:11, 4 ஜனவரி 2010 (UTC)


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

நான் இவ்வாரம், இந்தியப் பாலூட்டிகளுக்காப் பயிற்சி பெறுகிறேன். அதற்காக தமிழ்விக்கிப்பீடியாவில் ஆர்மடில்லோ கட்டுரை எழுதுகிறேன்.

த*உழவன்

 நீங்கள் விக்கிமேற்கோளில் பழமொழிகள் பற்றி எழுதினதைப் படித்தேன்.உங்கள் பயனர் பக்கத்தினையும், என் விருப்பத்தேர்வுகள் என்பதையும் மாற்றி அமைக்கக் கேட்டுக்கொள்கிறேன். வாரம் ஒரு முறை, அங்கு செல்வேன்.த*உழவன் 23:18, 3 ஜனவரி 2010 (UTC)

பகுப்புத் தானியங்கி

தொகு

பகுப்புத் தானியங்கி வேண்டும். உங்களது உதவி தேவை.

எனது தேவை வருமாறு;-

  • பகுப்பு:விலங்கியல் என்பதில் 5000க்கும் மேற்பட்ட சொற்களுள்ளன. அதிலுள்ள சொற்களில், பகுப்பு:விலங்கியல் என்பதனை நீக்கிவிட்டு பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல் என்று சேர்க்கப்பட வேண்டும். இங்ஙனம் பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல் முதலில் மாற்ற வேண்டும். பிறகு அங்கிருந்து, உரிய பகுப்புகளுக்கு மாற்ற வேண்டும்.
  • இதனால் சுந்தர் தானியங்கிப் பிழைகள், பாதி குறைந்து விடும். இது போல, பல பகுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புடன் --த*உழவன் 08:12, 7 ஜனவரி 2010 (UTC)

இத்தாலியை கடக்க

தொகு

நண்பரே! குறத்தியின் உரையாடற் பகுதியைப் பாருங்கள். முடிந்தால் முன்பு உரையாடிய மாதிரி, குறும்பக்கங்களில் அக இணைப்புகள்(internal links) கொடுங்கள். கொடுத்தால் எண்ணிக்கை அதிகமாகிறது. பொங்கலுக்குள், இத்தாலியைக் கடக்க ஒரு முயற்சியே இது.த*உழவன் 05:54, 12 ஜனவரி 2010 (UTC)

  • உங்கள் மின்னஞ்சலைப் பாரக்கவும். ஐந்தே நிமிடம். த*உழவன் 07:26, 12 ஜனவரி 2010 (UTC)

cangrejo வடிவமைப்பு

தொகு

நான் தின்ற pongal

தொகு
  • பொங்கலை (பொங்கல் பக்கத்தை) நான் தின்றதனால் தானே பிரச்னை. மீட்டுவிட்டேன்.
  • பிரச்சனையே இல்லை. அச்சொல்லைத் தவிர்ப்போமே. வீட்டில் பண்டங்கள் செய்யும் போது, சிறுவர் கண்ணில் படாமல் மறைத்து வைப்பர். அது போல, மறைத்து வைத்து விட்டீர். இப்போது எடுத்து வைத்து, அனைவரையும் சாப்பிட கூப்பிட்டு இருக்கிறிங்க. காணும் பொங்கலுக்கு (களி(=மட்டற்ற மகிழ்ச்சி)நாள்) வாழ்த்துக்கள்.த*உழவன் 02:11, 16 ஜனவரி 2010 (UTC)

மஞ்சுவிரட்டு

தொகு

இந்த நிகழ்படத்திலிருந்து, நிழற்படங்கள் எடுக்கமுடியுமா? மேலும் பல நிகழ்படங்கள். விக்சனிரிக்கு இணைப்பு தரலாமா?த*உழவன் 02:33, 16 ஜனவரி 2010 (UTC)

  • http://uk.answers.yahoo.com/question/index?qid=20081103024151AADpHxr பார்க்கவும். நான் இதுவரை செய்ததில்லை. தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி, printscreen செய்து அதை paint-க்கு மாற்றி முயற்சி செய்யலாம்.

(என்னிடம் இப்போது Windows இல்லை). பின்பு செய்து பார்க்கிறேன். பழ.கந்தசாமி 02:46, 16 ஜனவரி 2010 (UTC)

தானியங்கி நினைவூட்டல்

தொகு

விக்சனரி இலச்சினை ஓட்டெடுப்பு-2010

தொகு

இத்தொடுப்புப் பக்கத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுங்கள். ஒரு நிமிடம் தான் ஆகும். இடப்பக்கமுள்ள புத்தகவடிவிலான இலச்சினை(சின்னம்)யைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், வலப்பக்கம் உள்ளதில் (தொன்மையான மொழிகளில்) தமிழ் இல்லை. இடப்பக்கமுள்ள புத்தகவடிவில் தமிழைக் கொண்டு வர முடியும் என்று அங்குள்ள உரையாடல்களைக் கவனிக்கும் போது தெரிகிறது. நன்றி. வணக்கம்--த*உழவன் 14:10, 30 ஜனவரி 2010 (UTC).

  • நினைவூட்டியதற்கு நன்றி. செய்கிறேன் பழ.கந்தசாமி 18:03, 30 ஜனவரி 2010 (UTC)

உபுண்டுபற்றி

தொகு
  • http://tamilfoss.org/ பல குறிப்புகள் உள்ள இணையம்
  • ஒரு வழியாக உபுண்டுவில் இணைய இணைப்பையும், தமிழ்99 விசைப்பலகையினையும் நிறுவி விட்டேன். வின்டோசும் நிறுவி உள்ளேன். நேற்று முதல் உபுண்டுவில் தான் பங்களிக்கிறேன்.த*உழவன் 05:47, 2 பெப்ரவரி 2010 (UTC)
  • வார இறுதியில் உபுண்டு - அதன் மூலம் விக்சனரி ஸ்கிரிப்ட் பற்றி உரையாடுவோம் பழ.கந்தசாமி 06:00, 2 பெப்ரவரி 2010 (UTC)
  • சரி. அதுபற்றி சிந்தனையோட்டங்களை துவங்குகிறேன்.த*உழவன் 06:55, 2 பெப்ரவரி 2010 (UTC)

ஆங்கில பெயர்ச்சொல் வடிவமைப்பு

தொகு
  1. புதிய பெயர்ச்சொல் உள்ள படிவப் பக்கம் உள்ள ஆங்கிலப்பெயர்ச்சொல் படிவத்தினை, பலரது கருத்தினை ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளேன்.
  2. பயன்படுத்திப் பார்த்து, தங்கள் கருத்தினை, இங்கு இடவும்.
  3. இவ்வடிவமைப்பின் இறுதிநிலைக் கருத்தோட்டங்கள், இப்பகுதியில் நடந்தது.த*உழவன் 07:19, 6 பெப்ரவரி 2010 (UTC)

 //வார்ப்புரு புதிய பக்கவடிவுக்கு மாற்றப்படவேண்டுமா?,// அப்பக்த்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு பெயர்சொல் என்பதில் ஒரு சொல்லிட்டுப் பார்க்கவும்.

  • //ஆதாரம், பயன்பாடு // இணைக்கப் பட்டுள்ளது.
  • பயன்படுத்திப் பார்த்து, தங்கள் ஆதரவினை, இங்கு இடவும். நன்றி. வணக்கம்த*உழவன் 01:09, 7 பெப்ரவரி 2010 (UTC)
  • shortcut keys என்பதின் ஆதாரங்களை hotkeys என்பதோடு ஒப்படுக. ஆங்-கூட்டு-சொற்களில் சென்னைப்பேரகரமுதலி பிழை காட்டும்.-- த*உழவன் 02:48, 7 பெப்ரவரி 2010 (UTC)
  • நமக்குப் பொருந்தும் ஆதாரங்களின் வார்ப்புருக்களை மட்டும் இணைக்கவேண்டும். கூட்டுச்சொல் பிழைகளைத் தனியாக நீக்கவேண்டும் பழ.கந்தசாமி 03:24, 7 பெப்ரவரி 2010 (UTC)

 

  1. ஆங்-விக்சனரியும், பிறஆங்-அகரமுதலிகளும், ஒரே வார்ப்புருவாகப் பட்டது.
  2. தனித்தும் அவைகளை பகுப்பு: சொற்களின் வார்ப்புருக்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  3. சென்னை ஆங்-அகரமுதலியால், வழு வந்தால், உடன்நீக்குவதற்காக தனித்துள்ளது.
  4. பயன்பாடுகள் உருவாக்கினால், doveபோன்ற பன்மொழி சொற்களில் வரிசை எண் பாதிக்கப் படுகிறுது.

பிற இணைய ஆங்கில அகரமுதலிகளில், ஆங்கில விக்சனரியும் இருந்ததால், முன்பு உருவாக்கவில்லை. மேலும் en:PAGENAME என்ற இந்த இணைப்பே, ஆங்கில விக்சனரிக்கு இட்டுச்செல்லும்.த*உழவன்

  • generalissimo உள்ளது போல, உச்சரிப்புதவியை, சொல்லுக்கு அருகிலேயே சேர்க்கலாமா?த*உழவன் 01:37, 10 பெப்ரவரி 2010 (UTC)
  • இது பலுக்கலுக்கான இன்னொரு உதவி என்பதால் அதன்கீழ் அல்லது பக்கத்தில் வந்தால் சிறப்பு என்று பார்த்தேன். முடிந்தால் செய்யவும். இதுவும் நன்றாகத்தான் உள்ளது. என்ன செய்யலாம் பழ.கந்தசாமி 01:45, 10 பெப்ரவரி 2010 (UTC)

படிவ மாற்றம்

தொகு

ஆங்-படிவங்களில் ஒலிக்கோப்புகளையும், நீக்க வேண்டியப் பகுதிகளையும் செம்மைப் படுத்தியுள்ளேன்.பார்க்கவும்(.!.)த*உழவன் 06:58, 11 பெப்ரவரி 2010 (UTC)

  • நன்றி, இவை நன்றாக வந்துகொண்டுள்ளன. நாளை முதல் பயன்படுத்துகிறேன். ஆதார வார்ப்புருவில் PAGENAME என்ற இடத்தில் நாம் குறிப்பிடும் சொல் வருமாறு செய்யமுடியுமா? bloemfontein பார்க்கவும். பழ.கந்தசாமி 07:11, 11 பெப்ரவரி 2010 (UTC)
  • ஆதார வார்ப்புருவில் ஏற்படுத்திய மாற்றங்கள் எப்படியுள்ளது.?- பார்க்கவும். கூட்டுச்சொல்லுக்கு சென்னை அகரமுதலி நீக்கப்படும் என்பதால், இரண்டு பக்கப்பெயர் கொடுத்துள்ளேன்.த*உழவன் 07:41, 11 பெப்ரவரி 2010 (UTC)
  • சிறிய மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். நான் தெளிவாகச் சொல்லவில்லை. bloemfontein-ன் ஆதாரத்தில் ஆங். விக்சனரியில் Bloemfontein என்று உள்ளதால் நான் வார்ப்புருவை நேராகப் பயன்படுத்தமுடியவில்லை. அதனால், இப்படி வித்தியாசப்படும்போது PAGENAME என்ற இடத்தில் நாம் தேவையானதை போட்டுக்கொள்ளுமாறு மாற்ற இயலுமா என்று கேட்டேன். அதே வார்ப்புருவை 'tie up' என்பன போன்ற PAGENAME-களில் நாமாக 'tie_up' என்று மாற்றி இடவும் பயன்படுத்தலாம். பழ.கந்தசாமி 07:47, 11 பெப்ரவரி 2010 (UTC)
  • இப்பொழுது நன்றாக புரிகிறது. ஒலிக்கோப்பில் குறிப்புகளை நாமே இடுவது போல, ஆதாரங்களில் (தேவைப்பட்டால்)இட வேண்டும். முயற்சி செய்கிறேன். முடியுமென நினைக்கிறேன்.

. ஆங்கில விக்சனரியில் தானாகவே அப்பக்கம்bloemfontein-ன் சென்று விடுகிறது. இடப்பக்கமுள்ள English என்பதைச் சொடுக்கிக் காணவும்.

அநேகமாக இவ்வாரத்தில் இரவியை நேரில் (முதன்முதலாக) சந்திக்க உள்ளேன். என்னென்ன கேட்க வேண்டும் என்று கூறுங்கள். இப்பொழுது நேரம் முடிகிறது. மீண்டும் 7-8மணிநேரத்திறகு வருவேன்வருகிறேன் வணக்கம்த*உழவன் 08:08, 11 பெப்ரவரி 2010 (UTC)

கிரந்த எழுத்துப் பயன்பாடு

தொகு

ஒலிப்பெயர்ப்புகளில் தமிழோடு ஆங்கிலம் கலந்து பயன்படுத்தலாம். கிரந்த எழுத்துக்கள் வேண்டாம். spurge milk என்ற சொல்லில் பயன்படுத்தியது போல, பயன்படுத்த எனக்கு எண்ணம்.

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தானியங்கிகளைக் காட்டு என்பதைச் சொடுக்கிப் பார்க்கவும்.த*உழவன் 01:23, 18 பெப்ரவரி 2010 (UTC)

PPN மின்னஞ்சல் வேண்டும். AWB பற்றி

தொகு

PPN மின்னஞ்சல் வேண்டும்.அவரது மின்னஞ்சல் முகவரியை குறிப்பெடுக்கத்தவறி விட்டேன்.உங்களிடம் உள்ளதா? எனக்கு அனுப்பவும். நேற்றிரவு ஊரிலிருந்து வந்தேன்.AWB பற்றி உங்கள் இருவரிடமும் எனது நிலையைத் தெரிவிக்கவேண்டும்.த*உழவன் 02:12, 21 பெப்ரவரி 2010 (UTC)

  • PPN முகவரி என்னிடம் இல்லை. கிடைக்கும்போதும் நாம் மூவரும் அ.அ.வில் சந்திக்கலாம். பழ.கந்தசாமி 02:27, 21 பெப்ரவரி 2010 (UTC)
  • மின்னஞ்சல் காணவும். தமிழ்விக்கிப்பீடியாவில் ஓட்டளிக்கவும்.த*உழவன் 17:14, 24 பெப்ரவரி 2010 (UTC)
  • மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். உடனே வாக்களித்துவிட்டேன். நன்றி. பழ.கந்தசாமி 06:23, 25 பெப்ரவரி 2010 (UTC)

Tamil bot குறித்து

தொகு

தகவல்! இவ்வாறு கூப்பிடலாமா? இன்று தான் TamBot இன் செயல்பாட்டைப் பார்த்தேன். சிறப்பாக இருப்பதாக எண்ணுகிறேன். உங்கள் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள். --பரிதிமதி 17:39, 28 பெப்ரவரி 2010 (UTC)

  • தகவல் என்றோ அல்லது 'தகவல் எந்திரன் ' :) என்றோ சொல்லலாம். எந்திரம் வேகம், மாயம் இரண்டையும் குறிப்பதால் பழ.கந்தசாமி 23:57, 28 பெப்ரவரி 2010 (UTC)
  • dove(ஆங்)என்பதன் உரையாடற் பகுதியைக் காணவும். த*உழவன் 13:45, 1 மார்ச் 2010 (UTC)

அட்டவணை வார்ப்புரு

தொகு
  • அட்டவணை வார்ப்புருக்களை நீங்கள் சொன்னபடி அமைக்க எண்ணம். எளிமையான முறைதான். அதைப் புரிந்து கொள்ள 6மாதம் ஆகிவிட்டது. இதுவரை ஒன்றிற்கு மேற்பட்ட சொற்களை <br>பயன்படுத்தி வரிசைஎண் இல்லாமல் தான் செய்யமுடிகிறது. அட்டவணை வார்ப்புருவை, மேலும் மேம்படுத்தலாமென்று இருந்தேன்.அதற்குள் நண்பனுடன் கருடன் கிழங்கு(விசமுறிவுக்கானது)த் தேட, மற்றொரு நண்பன் காட்டுக்குச் செல்கிறேன்.

இன்றுக்குள் அட்டவணையைச் செய்து விடுகிறேன். பனையை விக்கிப்பீடியாவிலும் பதிவேற்றிவிடுகிறேன். பனைக்குரியத் தொடுப்பினைத் தந்தமைக்கு நன்றி. வணக்கம்.த*உழவன் 05:40, 2 மார்ச் 2010 (UTC)

ஆலமரத்தடியைப் பார்க்கவும்

தொகு

விக்சனரி:ஆலமரத்தடி#சொற்றொடர் எடுத்துக்காட்டுகள் + சொற்பிறப்பியல் + கலைச்சொற்கள்

--செல்வா 14:20, 2 மார்ச் 2010 (UTC)

கூட்டு வார்ப்புருக்கள்

தொகு

dove வினைக் கண்டு, அதன் பேச்சுப்பக்கத்தில் உங்கள் கருத்தினைக் கூறவும்.

  1. ஒலிக்கோப்புகளை தனியாக ஒரு வார்ப்புருவாக அமைத்துள்ளேன்.
  2. பொருள்+பயன்பாடு என்று ஒரு அட்டவணை ஏற்படுத்தியுள்ளேன். சரியெனில், பிறருக்கான வார்ப்புருவாக அமைத்து விடலாம்.த*உழவன் 17:13, 4 மார்ச் 2010 (UTC)
  • அவ்வப்போது செல்வாவும்(கணினியியல்,கனடா), பரிதிமதியும்(இயற்பியல், சென்னை.)(இருவரும் பேராசிரியர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்.) பல்வேறு சொற்களில் உரையாடுகின்றனர். அதையேக் குறிப்பிட்டேன். dove அட்டவணைப்பற்றி, அதன் உரையாடல் பக்கத்தில் கூறவும்.த*உழவன் 06:39, 5 மார்ச் 2010 (UTC)

observation தமிழில்

தொகு

கந்தசாமி! மிகவும் சிறப்பான பங்களிப்புகள் அளித்து வருகிறீர்கள்; உங்கள் பக்கங்கள் மிகவும் dependable ஆக உள்ளன. ஒரு வினா. observation என்ற சொல்லுக்குப் பொருள் எழுதியுள்ளேன் (அதாவது, உய்த்துணர்வு, கவனிப்பு -இரண்டுமே Tamil Lex கண்டது) வேறு சொற்கள் உள்ளனவா? ஏனெனில், field observation என்ற கூட்டுச்சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் வேண்டும். (கள கவனிப்பு, கள உய்த்துணர்வு என்று எழுதியுள்ளேன். எனினும் இச்சொற்களில் முழுமையான மன நிறைவு இல்லை) -- பரிதிமதி 09:02, 06 மார்ச் 2010 (இந்திய நேரம்)

  • அவதானம் என்ற ஒரு சொல்லை observation என்ற பொருளில் எஸ். இராமகிருஷ்ணன், ஜெயமோகன் எழுத்துக்களில் பலமுறை படித்திருக்கிறேன். எ. கா: [[1]] "அதே ஒவியங்களை கண்ட அவளது அப்பா உடலின் மர்மங்களை அவள் எவ்வளவு நுட்பமாக அவதானம் செய்திருக்கிறாள் "
  • க்ரியாவும் 'அவதானம் என்பதற்கு observation என்று பொருள் தருகிறது.
  • தசாவதானி - பத்து விடயங்களைக் கூர்ந்து நோக்குபவர்
  • சென்னைப்பேரகரமுதலியிலும் பொருள் அவதானம் கவனிக்கை என்று வருகிறது
  • ஆனால், கள அவதானம் என்பது நச் என்று இல்லை போலத் தோன்றுகிறது :( பழ.கந்தசாமி 03:46, 6 மார்ச் 2010 (UTC)
கள நேர்ப்பார்வை என்ற சொல் மிகச்சரியாக உள்ளது (செல்வாவிற்கு நன்றி). field observation என்ற சொல் field monitoring என்ற பொருளில் அமைந்து ஒரு சொற்றொடரில் வந்தது; அப்பதத்திற்கு கள நேர்ப்பார்வை, கள கவனிப்பு ஆகிய சொற்கள் நெருக்கமான பொருளை அளிக்கின்றன. அதிலும் கள நேர்ப்பார்வை சிறப்பாக உள்ளது. --பரிதிமதிஒ 15:31, 6 மார்ச் 2010 (இந்திய நேரம்)

நன்றி

தொகு

பழ.கந்தசாமி, உங்கள் பாராட்டு மொழிகளுக்கு நன்றி. நீங்களும் த.உழவனும் மிக அருமையாக விக்சனரிக்கு ஆக்கம் தந்துவருகின்றீர்கள். என்னால் இயன்றபொழுதெல்லாம். வந்து உதவுவேன். லோச^ன் (lotion) என்பதற்கு குழைமம், குழைநெய் எனலாம். lubricant என்பதற்கு உயவுநெய் என்றுகூறுவதுபோல நெய் அல்லது குழைமம் எனலாம். சந்தனத்தை அரைத்துக் குழைத்து என்று சொல்வோம் அல்லவா. அதுபோல குழைநெய் எனலாம். உடலில், முகத்தில் பூசும் குழைமத்தை குழைப்பூச்சு, குழைநெய் எனலாம். http://en.wikipedia.org/wiki/Lotion : A lotion is a low- to medium-viscosity, topical preparation intended for application to unbroken skin; creams and gels have a higher viscosity. தமிழில் நீர் வடிவான பொருளை நீர்மம் என்கிறோம். ஒரு நீர்மம் சற்று கூடுதலான பிசுபிசுப்புமை (viscosity) கொண்டுடிருந்தால் அதனை நெய், நெய்மம் எனலாம். குழைவு உடைய பொருளை குழைமம் எனலாம். இன்னும் பிசுபிசுப்புமை கூடுதலாக இருந்தால் பசைமம் எனலாம். face lotion என்பதை முகக்குழை, முகக்குழைமம், முகநெய், முகநெய்மம் எனலாம்.--செல்வா 05:00, 6 மார்ச் 2010 (UTC)

தமிழிணையப் பல்கலைக்கழக இணைப்புகள்

தொகு

நீங்கள் சுட்டியபடி, இங்குள்ள தமிழிணையப் பல்கலைக்கழக இணைப்புகளில் பிழைகள் இருந்தன. அத்தளம் ஒருங்குறியில் இல்லை. எனவே, நேரிடையாகத் தெளிவான இணைப்புத்தருவதில், சில இடர்கள் உள்ளன. இருப்பினும், மாற்றுவழிகளை எண்ணுகிறேன். அதனால்தான் TamilBOTல் தாமதமாகிறது.த*உழவன் 01:36, 7 மார்ச் 2010 (UTC)

  • abandonment of claim மற்றும் abetment என்பதில் மேற்கூறிய இணைப்புப் பிழைகள் இல்லாது இருக்கின்றன. firefoxல் அப்பல்கலைக்கழக எழுத்துகளை காண இயலவில்லை. firefoxல் ஒருங்குறி மட்டும் தான் தெரியும் போல, பலமுயற்சிகள் செய்தும் அத்தமிழ் எழுத்துக்களை காண இயலவில்லை. மின்னஞ்சலில் தேவையான காட்சிப்படங்களை இணைத்துள்ளேன். நீங்கள் சரி என்று சொன்னவுடன், தகவல் எந்திரன் தன் பணியைத் துவங்கி விடுவான். அதற்கு முன்,சுந்தரிடமும், உசாத்துணை என்பதை ஆதாரம் என்று மாற்றவுள்ளதைத் தெரியப்படுத்துவேன். தூங்கப்போகிறேன். இனி காலை நேரத்தில் தான் இருப்பேன். ரொம்ப புழுக்கமாக இருக்கிறது. உடல் சோர்ந்து விடுகிறது. பகுப்புச்செய்வதால், இன்னும் சில நூறு சொற்களாவது, அதிகரிக்கும் போலத் தெரிகிறது. இரண்டொரு நாளில் எண்ணிக்கையைக் கவனிக்கிறேன்.

எத்திரை என்றாலும், நித்திரை அவசியமன்றோ!!!! :)  :)  :)

வணக்கம். த*உழவன் 19:02, 9 மார்ச் 2010 (UTC)

  • த*உழவனே! சரியான இணைப்பு, ஒருங்குறியில் இருந்தால் எந்திரனை ஏவிவிடவும். உசா என்பதை விடா ஆதாரம் மற்றவர்களுக்குப் புரியும் என்பது என் எண்ணமும். உசா, பலுக்கல் என்ற இரண்டும் நான் முன்னர் கேள்விப்படாத பதங்கள். பழ.கந்தசாமி 21:50, 9 மார்ச் 2010 (UTC)
உசாவுதல், உசாவினேன் என்பது தக்கவர்களிடம் கேட்டு அறிதல். சான்று, சான்றுகோள், அடிச்சான்று என்றும் கூறலாம். நல்ல தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தருவோமே. மேலும். மீசுட்டும்/தொடுப்பும் தரலாம், எ.கா: (பலுக்கல்). ஆங்கிலத்தில் conative, phatic என்றால் எனன்வென்று தெரியாவிட்டாலும் எப்படி அறிந்துகொள்ள முயலுகின்றோமோ அப்படித் தமிழிலும் (அதுவும் எளிதாக மீசுட்டு தரும் இந்தத் தளத்தில்) செய்யலாமே. Lexicography என்றாலும் பொதுமக்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள், ஆனால் வழக்கு பெருகி வருகின்றது. உசாத்துணை என்பது நல்ல சொல். மாற்ற வேண்டும் எனில் சான்றுகோள், சான்று, அடிச்சான்று என்னும் சொற்களும் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. சான்றுநூல், சான்றுப்பட்டியல், சான்றாவணம் என்று பலவாறு இயல்பாய் இணையும் தனிமை கொண்டது. --செல்வா 22:55, 9 மார்ச் 2010 (UTC)

பாராட்டுப் பதக்கம்

தொகு
-------
 
பழ.கந்தசாமி, விக்சனரிக்கு நீங்கள் அளித்துவந்துள்ள அரும்பணியைப் பாராட்டி உடன் பங்களிப்பாளனாகிய நான் என் உவப்பைத் தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

உங்கள் நல்லாக்கங்களுக்கும் தொடர்ந்த உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.--செல்வா 17:46, 9 மார்ச் 2010 (UTC)

ஒரு சொல் இருநிலை- தமிழ்

தொகு
  1. பரப்பு ஏற்படுத்திய மாற்றங்களை அப்பக்கத்தின் உரையாடற் பகுதியில், கருத்திடுங்கள்
  2. {{படம்|#}} {{சிறியது|#}} {{சொல்வளம்|#|#|#}} {{நீலஅடிக்கோடு}} போன்றவற்றைத் தேவைப்படும் பயன்படுத்திக் கொள்ளவும். append / prepend கட்டளை மூலம் பின்னர் இணைத்திட எண்ணம். இப்பொழுது வேகமாக செயல்படுவதற்காக, பொதுப்படிவத்திலிருந்து எடுத்து விட்டேன்.
  3. தமிழிணையப் பல்கலைக்கழக இணைப்புகளில் குறித்த மாற்றத்தை எற்படுத்த இயலவில்லை. வெளியிணைப்புக்கான அடைப்புக்குறிக்குள், AWB செயல்படவில்லை. மாற்றுவழிகளை சிந்திக்கிறேன். தமிழ் மாநாடு கட்டுரைப்போட்டி நடைபெற இருப்பதால், இரவி, சுந்தர் இங்கு வர இயலவில்லை. செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்து வைக்கச்சொல்லியிருக்கின்றனர். நன்றி! வணக்கம்.

--த*உழவன் 07:42, 11 மார்ச் 2010 (UTC)

தமிழ் நூல்கள்

தொகு

http://commons.wikimedia.org/wiki/File:Thambiraan_Vanakkam-TamilNadu163.jpg

http://commons.wikimedia.org/wiki/File:CHRISTIAN_BOOK-printed1781-Tamil_nadu-India41.jpg

காண்க த*உழவன் 02:28, 15 மார்ச் 2010 (UTC)

எண்ணிக்கையைக் கூட்ட

தொகு
  • பகுத்தல் செய்வதன் மூலம் எண்ணிக்கையைக் கூட்ட முடியும் என்பது நாம் அறிந்ததே. பகுக்காதவற்றை எப்படி பிரித்தெடுப்பது, என்பதே புரியவில்லை. எனினும் நான் பின்வரும் வழியைக்கையாளுகிறேன்.

http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex&from=adelphous&prefix=a

இதுபோல பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ளச் சொற்களைக் காண்கிறேன். பின்பு பகுக்கிறேன்.awbயில் பகுக்காதவற்றை விரைவில் காணமுடியும். அதுவே பகுக்காதப் பக்கம் என்று சொல்கிறது. ஆனால், சொற்களை நோட்பேடில் எழுத வேண்டும்.

முன்பு காட்டியத் தொடுப்பில், சொற்கள் மூன்று வரிசையில் இருப்பதால், நகலெடுத்து நோட்பேடில் ஒட்டும் போது, ஒரு சொல்லுக்கு கீழே அடுத்த சொல் என்று வருவதில்லை. அப்படி வந்தால் தான் awbயில் வேகமாக பகுக்காதவற்றை கண்டு, பகுக்க முடியும். இதனை தீர்க்க ஏதேனும் ஒரு வழி தெரிந்தால் சொல்லுங்கள்.த*உழவன் 07:08, 17 மார்ச் 2010 (UTC)

  • த*உழவனே! எந்த மாதிரி வருகிறது, எப்படி வரவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை அனுப்புங்கள். வாரக்கடைசியில் முயன்று பார்க்கிறேன். நன்றி பழ.கந்தசாமி 14:57, 17 மார்ச் 2010 (UTC)
  • கண்டு கொண்டுடேன்! கண்டு கொண்டேன்!! (4மணிநேரப்போராட்டத்திற்கு பிறகு) ஆனால், நீங்க லினக்சு வல்லுநர். உங்களுக்கு பயன்படாது. 'இன்டர்நெட் எக்சுபுளோரையும்' (Internet explorer browser), AWBயையும், நோட்பேடினையும் இணைத்து வழிமுறையைக் கண்டு கொண்டேன். 30 நிமிடங்களில் 210 பக்கங்களைத் திறந்து , AWB மூலம் பார்த்தேன். அதனால் சுந்தர் தானியங்கியின் பிழைகளைக் கண்டறிந்து, 7,8 எண்ணிக்கையை (நேற்றிரவு) அதிகரித்துள்ளேன்.

ஏறத்தாழ 50 சொற்களில் ஒரு சொல், எண்ணிக்கையைக் கூட்டப் பயன்படுகிறது. அந்த ஒன்றிற்காக, 50 சொற்களை பார்வையிட வேண்டியுள்ளது. அதனை வேகமாகச் செய்ய, ஒரு சொற்பட்டியலிலிருந்து ஆங்கில கூட்டுச்சொற்களை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி? அல்லது தனிச்சொற்களை நீக்குவது எப்படி? (இவ்வார இறுதியில் நான் தெரிந்து கொள்ள விரும்புவது)

இவ்வாரத்தில் சில நூறு எண்ணிக்கை அதிகமாகும். ஆயிரங்களைத் தாண்டினாலும், ஆச்சரியமில்லை. பார்ப்போம். சுந்தர் தானியங்கியின் பகுப்புப்பிழைகளை ஓரளவு மேம்படுத்தி விட்டோம். அடுத்து நீங்கள் சுட்டியபடி, வெளியிணைப்புப் பிழைகளை சரிசெய்ய வேண்டும். அநேகமாக 50,000 சொற்கள், தமிழ் இணையப்பல்கலைக்கழக தரவுத்தளத்துடன் இணைக்கப் படாமல் இருக்குமென்று கருதுகிறேன். அதையும் , தகவல் எந்திரன் சரிசெய்து விடும்.(இரவு மின்தடை - இப்பொழுது தொடர்கிறேன்...)

அங்ஙனம் சரிசெய்தவைகளைக்காண, இரண்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  1. தமிழிணையப் பல்கலைக் கழக எழுத்துருக்களை, பயனர் தங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.
  2. அந்நிறுவலுக்குப் பிறகு, நம் தளத்தை 'இன்டர்நெட் எக்சுபுளோரர்' மூலம் கண்டால் மட்டுமே தமிழ் எழுத்துக்கள் தெரியும். Firefoxல் தமிழிணையப் பல்கலைக் கழக எழுத்துக்கள் தெரியாது. ஆனால், ஆங்கில எழுத்துக்களைக் காணமுடியும். ஏனெனில், தமிழிணையப்பல்கலைக்கழகம், ஒருங்குறியில் இல்லை. இக்குறிப்புகளை, ஒவ்வொரு உரையாடற் பக்கத்திலும் எழுத வேண்டும்.

நன்றி.

__த*உழவன் 01:43, 18 மார்ச் 2010 (UTC)


இந்த உத்வேகமும், உங்களின் உத்தியால் தான். தமிழிணையப் பல்கலைக் கழக இணைப்புப் பிழைகள் பற்றி நீங்கள் கூறியிருக்காவிட்டால், இம்மாற்றம், ஏமாற்றமாக இருந்திருக்கும். உங்கள் பணிப்பளுவினை, விக்சனரியின் நினைவாக, மனப்பளூவாக மாற்றிக் கொள்ளதீர்கள். நமக்காக த*எந்திரன் இயங்குவான். நான் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்ன மின்தடைதான், மிகுந்த தொந்தரவாக இருக்கிறது. எப்ப மின்சாரம் வருது போவுதுன்னே புரியலை. வழக்கமாக 7மணிநேரம் தூங்குவீர்கள். பணிப்பளுவினால் அதிக தூக்கமும், பழங்களும் (பழச்சாறாக வேண்டாம். கடித்தே உண்ணவும் - பேரீச்சம் பழம் நல்லது என்று நினைக்கிறேன். ) எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.த*உழவன் 06:52, 19 மார்ச் 2010 (UTC)


  • மின்னஞ்சல் காணவும்.த*உழவன் 05:53, 22 மார்ச் 2010 (UTC)

மின்தடை

தொகு
  • இப்பொழுது எமது பகுதியில், இந்திய நேரம் காலை6மணிமுதல்9மணிவரை தொடர்மின்தடை. இடையிடையே எப்பொழுது வேண்டுமானாலும் மின்தடை வரும் என்பது தனிச்சிறப்பு. அதனால் அதிகாலை4மணிக்கு எழுந்து விடுவேன். சொற்களின் எண்ணிக்கையைக் கூட்ட, நம் சந்துபொந்துகளில் மிச்சம்மீதிக்காக அலைகிறேன்!  :)

--00:11, 31 மார்ச் 2010 (UTC)

கடுஞ்சொற்கள் எளிதாகும் மாயம்

தொகு

மிகவும் கடினமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கிலச் சொற்களுக்கு எளிதான, நறுக்கென்ற விளக்கமும் உரையும் அளித்து வருகிறீர்கள். மிகுந்த பாராட்டுக்குரிய முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி. -- பரிதிமதி 22:17, 5 ஏப்ரல் 2010 (இந்திய நேரம்)

  • பரிதிமதி, நன்றி; தங்களைப் போலவே ஒரு சிறிய அணில் பணி பழ.கந்தசாமி 17:53, 5 ஏப்ரல் 2010 (UTC)
  • ஒரு பானைச்சோறுக்கு, ஒரு சிட்டிகை உப்பினைப் போன்றது உங்கள் பணி.த*உழவன் 05:06, 6 ஏப்ரல் 2010 (UTC)

உறவுகள்

தொகு

விக்சனரி_பின்னிணைப்பு:உறவுகள் முன்பு நாம் உருவாக்க நினைத்தவை இது தானே? இதனைத் தனிப்பகுப்பில், அடக்கலாமா? அதாவது [[பகுப்பு:தமிழர் உறவு முறைகள்]] என்ற பகுப்புக்கு மாற்றலாமா? த*உழவன் 13:06, 12 ஏப்ரல் 2010 (UTC)

  • த*உழவனே! அவ்வாறே மாற்றலாம். இந்த வார இறுதியிலாவது அ.அ.வில் சந்திக்க முயற்சிப்போம். கடந்த 2 வாரங்களாக முடியாமல் போய்விட்டது. பழ.கந்தசாமி 19:52, 12 ஏப்ரல் 2010 (UTC)

மின்தடையும், இயங்கமுடியா நேரமும்.

தொகு
  • இந்திய நேரம் காலை6மணிமுதல்9.30மணிவரை எனக்கு மின்தடை. முன்பு 8முதல் 10வரை இருந்தது. வேனிற்காலமென்பதால், மின்தடை நேரத்தினை மாற்றியும், அதிகரித்தும் உள்ளனர். எனவே, இந்திய நேரம் காலை10 முதல் 1மணிவரை பெரும்பாலும் இருப்பேன். இனி என்னால் இங்கு வர இயலா நேரத்தினையும், நாட்களையும் எனது உரையாடற்பக்கத்தில் காண வழி செய்துள்ளேன். நீங்கள் அழைத்த நேரத்தில் வர இயலாமைக்கு வருந்துகிறேன். வணக்கம்.த*உழவன் 05:54, 17 ஏப்ரல் 2010 (UTC)

பாராட்டு

தொகு

மிக அருமையாகவும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றீர்கள். பாராட்டுகள்! ஆங்கிலச்சொற்களை நீங்கள் தக்க எடுத்துக்காட்டுகளுடன் தந்து பொருள் எழுதி வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.--செல்வா 22:16, 17 ஏப்ரல் 2010 (UTC) உங்களைப்போல் இன்னும் ஒரு 10-20 பேர் தக்க அறிவோடும், ஒத்த உழைப்போடும் தொண்டாற்றினால் எவ்வளவோ முன்னேற முடியும். நினைப்பதில், ஆசைப்படுவதில் என்ன பஞ்சம்!! ஏன் 90 மில்லியன் மக்களில் ஒரு 1000 பேரேனும் வந்து ஆளுக்கு ஒரு 10 சொற்கள் ஆக்கினால் 10,000 சொற்கள் பதிவாகிவிடுமே!! இந்த சிறுதுளி பெருவெள்ளம் மந்திரத்தை எப்பொழுது நம் மக்கள் உணர்வார்கள் ?!!--செல்வா 22:21, 17 ஏப்ரல் 2010 (UTC)

  • செல்வா, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எனது நண்பர்கள் (மிகத் தமிழ்ப்பற்று உள்ளவர்கள் தான்) சிலரைச் சில மாதங்களாக இங்கு கொணர முயன்று கொண்டுள்ளேன். இதுவரை வெற்றியில்லை. இருந்தாலும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தராமலா போய்விடும். பார்ப்போம். பழ.கந்தசாமி 22:29, 17 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ்விக்கிப்பீடியாவில் வாக்களியுங்கள்

தொகு

இத்தொடுப்பு தமிழ்விக்கிப்பீடியாவில் கூகுள் மொழிபெயர்ப்பு குறித்த, கலந்துரையாடற் பகுதியாகும். எந்த விக்கியாக்கமும் செய்யாமல், கட்டுரைகளை இணைப்பதனைத் தற்காலிகமாக நிறுத்த கேட்கப்படும் வாக்களிப்புப் பகுதியாகும். வணக்கம்.நான் இன்றே வாக்களித்தேன். த*உழவன் 14:18, 27 ஏப்ரல் 2010 (UTC)

  • தங்களது கூகுள் கருத்துகளைக் கண்டேன். அங்கு வாக்களிப்பதில் உடன்பாடு இல்லையா? கருத்தறியவே கேட்டேன். நன்றி.த*உழவன் 07:26, 28 ஏப்ரல் 2010 (UTC)
  • அங்கே நான் பங்களித்து வருவதில்லை என்பதால் தயங்கினேன். வேறொன்றுமில்லை. இருப்பினும், சில இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். அவ்வாறான வாக்கிய அமைப்புகள் விக்கிப்பீடியா வருநர்களை விரட்டியடிக்கும் என்பதால், அவைகள் விரைவில் செப்பனிட வேண்டிய கட்டுரைகள். அதனால் வாக்களிக்க முடிவு செய்துள்ளேன். பழ.கந்தசாமி 07:31, 28 ஏப்ரல் 2010 (UTC)
  • எப்பொழுதும் தயக்கம் வேண்டாம். அவர்கள் நம்மை கவனித்தே வருகின்றனர். நாம் இங்கு செயல்பட்டாலும், அது நமது உரிமையல்லவா? கூகுள் மொழிபெயர்ப்பு பற்றி நாம் அ.அவில் கலந்துரையாடி இருந்தோம். இரவி உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரவேண்டுமெனக் கருதுகிறார். பலமுறை பேசினார். நான் தங்கள் பணியடர்வு குறித்துக் கூறியுள்ளேன். அநேகமாக தொடர்பு கொள்வார். அவர் கேட்டால் உங்களது மின்னஞ்சலை தரலாமென நினைக்கிறேன். உங்கள் நிலையென்ன? நான் சில தினங்கள், இருக்கமாட்டேன். நண்பரின் இல்லத்திருமணத்திற்காக வெளியூர் பயணிக்க உள்ளேன். அங்கு இணைய வசதியிருக்காதென்றே கருதுகிறேன்.மீண்டும் சந்திப்போம். வணக்கம்.த*உழவன் 07:47, 28 ஏப்ரல் 2010 (UTC)
  • த*உழவனே! இரவிக்கு எனது மின்னஞ்சலைத் தாராளமாகத் தரவும். நிர்வாக அணுக்கம் பற்றி நிச்சயம் யோசிக்கிறேன். எப்போது திரும்ப வருவீர்கள்? பழ.கந்தசாமி 08:00, 28 ஏப்ரல் 2010 (UTC)
  • ஒரே வீட்டில் இரண்டு திருமணங்கள். அக்காவுக்கு நாளை, அதற்கு அடுத்து தம்பிக்கு ஒருநாள் விட்டு திருமணம். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஊர்களில். 2 நாட்கள் வரமாட்டேனென்று நினைக்கிறேன். அங்கு அருகிலிருக்கும் ஊரில் இணைய வசதி கிடைக்குமென நம்புகிறேன். பார்ப்போம். வருகிறேன். வணக்கம்.த*உழவன் 08:07, 28 ஏப்ரல் 2010 (UTC)

எனக்கு சென்னைக்கண் நோய்தாக்கம்+இரு திருமணங்களும் இனிதே முடிந்தது.

தொகு
  • கண் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் உங்களுடன் இணைய, இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுமென நினைக்கிறேன். இரு திருமணங்களும் இனிதே முடிந்தது. வருகிறேன். வணக்கம்.த*உழவன் 04:58, 4 மே 2010 (UTC)Reply

அட்டவணை வார்ப்புரு

தொகு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தமிழ்பொருள் ஆங்கிலப்பொருள்

வார்ப்புருக்களை பயன்படுத்துவது பற்றி உங்களின் கருத்தென்ன? 1 முதல் 9 வரை எண்களை மாற்றிப் பார்க்கவும்.(எ.கா) {{அட்டவணை9}}மத்தகம்த*உழவன் 00:27, 9 மே 2010 (UTC)Reply

இக்கேள்வி பழ.கந்தசாமிக்கா எனக்கா எனத் தெரியவில்லை, த*உழவன். ஆலமரத்தடியிலும் உரையாடலாம்.--செல்வா 05:43, 9 மே 2010 (UTC)Reply
  • பழ.கந்தசாமிக்கே.ஏனெனில், அவரது பக்கத்திலிருந்து உரையாடல்களை மாற்ற, அவரது அனுமதியை நாடுகிறேன். வணக்கம்த*உழவன் 05:51, 9 மே 2010 (UTC)Reply

சொற்பிறப்பியல்

தொகு

புதிய ஆங்கில எழுத்துக்களை உருவாக்கும் போது , சொற்பிறப்பியல் என்பதற்கு மேலாக ஒரு கிடைமட்டக்கோடு வருவது போல வார்ப்புருவிலேயே மாற்றம் செய்துவிட்டேன். இரு கோடுகள் வராமலிருக்க, உங்கள் படிவத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.த*உழவன் 06:43, 11 மே 2010 (UTC)Reply

  • இருகோடுகள்! நாமிருவரும் கூட விக்சனரிப் பாதையில் இருகோடுகள். சரி. பக்கத்தில் இருகோடுகள் வராமல் பார்த்துக்கொள்வோம். வெள்ளிக்கிழமை இருகோடுகள் அ.அ.வில் சந்திக்கலாமே? பழ.கந்தசாமி 06:50, 11 மே 2010 (UTC)Reply

feliz

தொகு

feliz என்பதனை, வார்ப்புருக்களுக்கு மாற்றியுள்ளேன். இம்மாற்றங்களைக் குறித்து, உங்களின் கருத்தறிய ஆவல். புதியசொற்களுக்கான படிவப்பக்கத்தில் எசுப்பானிய பெயர்சொற்களுக்கான படிவத்தைப் பற்றியும் உங்கள் கருத்தறிய ஆவலாக உள்ளேன்.த*உழவன் 02:29, 21 மே 2010 (UTC)Reply

evangelist

தொகு

இச்சொற்கான பக்கத்தின் உரையாடல் பகுதியில் என் கருத்துகளை இட்டிருகின்றேன் பார்க்கவும். மேலும் 10-15 சொற்களைக் கூட ஈடாகப் பரிந்துரைக்கலாம். பரிதுரைத்த சொற்கள் உவப்பானதாக இல்லை எனில் கூறுங்கள் வேறு விதமாகவும் பொருத்திப் பார்ப்போம். --செல்வா 16:54, 27 மே 2010 (UTC)Reply

பழ.கந்தசாமி, த*உழவன்,உங்கள் பாராட்டுக்கு நன்றி :) நீங்கள் உங்களுக்குள் இருக்கும் தமிழறிவைக் கிளருங்கள். இதைவிடக் கூடுதலாக ஆக்க இயலும். தமிழின் சொல் வளத்தில், வெறும் நுனிப்புல் மேய்ப்வன் நான். தோண்டத் தோண்டத் தங்கச்சுரங்கமாய், வைரச்சுரங்கமாய் இருக்கும் தமிழ். சுரங்கம் கூட அளவெல்லை உடையது. தமிழில் உள்ளதோ உயிர்த்துப் பெருகுவன, அளப்பரியன. --கற்றனைத்தூறும் என்பார்களே, அப்படி, தமிழில் அறிவுறவாட உறவாடப் பெருகும் கூர்ப்பு பெறும். அறிவுறவாட்டம் தமிழில் நடந்தால் பன்னூறாயிரம் மடங்காகப் பெருகும். --செல்வா 15:46, 28 மே 2010 (UTC)Reply

தமிழ்ச்சொற்களைச் சேர்த்திருக்கின்றேன். பார்க்கவும்.--செல்வா 19:24, 28 மே 2010 (UTC)Reply

மொழியைக் குறிப்பிடும் தலைப்பு

தொகு

கிசுவாகிலி, ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரும்பொழுது, மொழியை மேலே குறிப்பிடுவது வழக்கம். அதற்கு நான் தேர்வு முயற்சியாக சில இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். ஆங்கிலத்துக்கு thou, கிசுவாகிலிக்கு mti,பிரான்சியத்துக்கு légume ஆகியவற்றைப் பார்க்கவும். --செல்வா 05:11, 29 மே 2010 (UTC)Reply

  • நன்றாக உள்ளது. எசுப்பானியத்துக்கும் ஒரு கொடி போடுங்களேன். (ஸ்பெயினா, மெக்சிகோவா என்பதை முடிவு செய்யவேண்டும்). பழ.கந்தசாமி 05:19, 29 மே 2010 (UTC)Reply

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு

தொகு

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

கம்பின் உமி

தொகு

கம்பின் உமிக்கான, இப்படம் சரியா?(த*உழவன் 01:51, 10 ஜூன் 2010 (UTC))

ஆங்கில கூட்டு வார்ப்புருக்களுக்கான ஆதாரம்

தொகு

நமக்கு ஆங்.கூட்டுச்சொற்களுக்கான வார்ப்புருவினை உருவாக்கியுள்ளேன். ஒப்பிட்டளவில் இது எளிமையாக இருக்குமென்பது என்கருத்து. உங்கள் கருத்தினை எதிர்நோக்குகிறேன். பொதுபடிவத்தில் வரும் வார்ப்புருவின் இறுதியில் 2 என்பதை மட்டும் சேர்த்தால் போதும், இப்புதிய ஆங்கில கூட்டுச்சொற்களுக்கான வார்ப்புரு வரும்.

மேலும் கூட்டுச்சொற்களுக்கு இடையில், தாழ்நிலை கழித்தல்குறியை under score? தவறாமல் இட வேண்டும். மேலும், பிற ஆதாரங்களையும் இதில் இட வழியமைத்துள்ளேன்.

ஆங். கூட்டுச்சொற்களுக்கான வார்ப்புரு தொந்தரவுகளில், இது சிறிது முன்னேற்றமென நினைக்கிறேன்.

en:Human Resource Management என்றிருப்பதால், இங்கும் Resources என்பதனை Resource என்று மாற்றி விடலாமா?

என்று ஊருக்கு வருகிறீர்கள் என்பதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.த*உழவன் 05:57, 15 ஜூன் 2010 (UTC)

அடையாள அட்டைக்கான தகவல்கள்

தொகு

கந்தசாமி,

  • நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடும் என்று இரவி கூறினார். அப்படியென்றால், உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டதா? இல்லையெனில், கீழுள்ளபடி செய்யவும்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
  • http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODUwMA%3D%3D&z=MjczOF8xMjc2ODQ4NTAw
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். --பரிதிமதி 17:46, 18 ஜூன் 2010 (UTC)
  • பரிதிமதி, ரவி: அடையாள அட்டை விபரங்களுக்கு நன்றி. இன்றோ நாளையோ நான் புகைப்படத்துடன் விபரங்களை பதிவேற்றம் செய்துவிடுகிறேன். நான் 25, 26 தேதிகளில் கலந்துகொள்ள உத்தேசித்துள்ளேன். பழ.கந்தசாமி 02:35, 19 ஜூன் 2010 (UTC)
கந்தசாமி! உடனேயே செய்ய வேண்டும். இன்று மாலைக்குள் விபரங்களைப் பதிவு செய்துவிடுங்கள்.

விக்சனரியின் எண்ணிக்கை

தொகு
  • விரைவில் நம் விக்சனரியின் எண்ணிக்கை சில இலட்சம் அதிகரிக்க உள்ளது. இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரவி தகவல் அளிப்பாரெனக் கருதுகிறேன். அதன் மூலம் தமிழ் 15வது இடத்திலிருந்து, 10வது இடத்திற்குள் வருமெனக் கருதுகிறேன். நீங்கள் ஊருக்கு செல்வதற்கு முன் சற்று விரிவாக பேச விரும்புகிறேன். நேரில் சரிவர பேச இயலவில்லை. குறிப்பாக பைத்தான் பற்றியும், நிழற்பட கருவி பற்றியும் உரையாட எண்ணம் கொண்டுள்ளேன். நாம் கடைசியாக சந்தித்த அன்று ஒரு அலைப்பேசி தொலைந்து விட்டது. நமக்காக பயிற்சி அளித்த பெண்ணின் அலைப்பேசி. அதன் விலை 4000 என்று அப்பெண் சொன்னாள். எனது வேண்டுகோளுக்கு ஏற்ப, அலைப்பேசியிலும் தமிழை பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்குச் சொல்லி கொடுத்தாள். என் முன்னால் அழுதுவிட்டாள். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அது குறித்த சிந்தனையிலிருந்தேன். ஏதேனும் உங்களிடம் கவனக்குறைவாக நடந்திருந்தால் மன்னிக்கவும். --(த*உழவன் 07:52, 29 ஜூன் 2010 (UTC))

 இரவியும், தமிழிணையப் பல்கலைக்கழக நிருவாகிகளும் தகவல் அளித்துள்ளனர். பைத்தான் மூலம், அவர்கள் அளித்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டச்சொற்களை பதிவேற்றிட முடியுமென நம்புகிறேன்.உங்களது வழிகாட்டல்களை எதிர் நோக்குகிறேன்.--(த*உழவன் 05:05, 2 ஜூலை 2010 (UTC))

  • பயனர்:Ganeshk தமிழ் இணையப் பல்கலைக் கழக தரவுகளைப் (குறிப்பாகAWBபற்றி) கலந்துரையாடுகிறேன். பிறகு நாம் அனைவரும் இணைவோம். அதிகமாக ஒரு வாரம் ஆகலாம்.--த*உழவன் 06:47, 5 ஜூலை 2010 (UTC)
  • த*உழவனே! நன்றி. கணேசின் பேச்சுப் பக்கங்களைக் கண்டபோது AWB-க்கான முயற்சி என்று ஊகித்துக்கொண்டேன். நிச்சயமாக உரையாடுவோம். பழ.கந்தசாமி 14:13, 5 ஜூலை 2010 (UTC)
  • கணேசு' எனக்குப் புதிய சொற்களை AWBயில் பதிவேற்றும் முறையை அருமையாக அலைப்பேசி மூலம் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு தமிழால் பேச மட்டுமே வரும். ஏறத்தாழ 1.30 மணிநேரம் சொல்லிக் கொடுத்தார். அதை பின்பற்றி, constant of aberration என்ற சொல்லை உருவாக்கினேன்.

இதனுடன் மேலும் 9 சொற்களை இணைத்து செய்து பார்த்திருந்தேன். மொத்தம் 10 சொற்களில் செய்தேன்.ஏற்கனவே 9 இருந்ததால், AWB அதில் எம்மாற்றமும் செய்யவில்லை.

இனி ஒட்டுமொத்த சொல் வடிவமைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு முன் த.இ.ப. தந்த 1,40,000 சொற்களில், ஏற்கனவே பதிவாகி இருப்பதை பிரித்தெடுக்க வேண்டும். பிரித்தெடுக்கும் போது, த.இ.ப. வின் பகுப்பினையும் இணைக்க வேண்டும். பிரித்தெடுத்தச் சொற்களை, இங்கு(பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்) காணலாம். ஏறத்தாழ பிரித்தெடுக்கும் பணி முடிந்து விட்டது. மின்தடை அடிக்கடி வருகிறது. அதனால் இணைய இணைப்பிலும் தடைகள். எனவே, தானியங்கி தடைப்படுகிறது.

மேலும் சில ஐயங்கள் உங்களிடம் கேட்க வேண்டும். அதில் முதல் ஐயம்

ஆங்கில கூட்டுச்சொற்களை எப்படி பிரித்தெடுப்பது?

பிறவற்றினை அப்புறம் கேட்கிறேன். இரண்டு மணி நேர மின்தடை வரவுள்ளது.--த*உழவன் 02:25, 12 ஜூலை 2010 (UTC)


  • த*உழவனே! தானியங்கி மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். த.இ.ப. தரவுத் தொகுதியில் விக்சனரியில் இதுவரை சேர்க்காத சொற்கள் எத்தனை உள்ளன? பக்கவடிவம் நாம் இப்போது கொடியுடன் பயன்படுத்தும் வடிவம் தானே? சொற்களைப் பிரிப்பது குறித்து, மூலத் தரவின் வடிவத்தைப் பார்த்து அதற்கேற்ப script எழுதலாம். பழ.கந்தசாமி 04:47, 12 ஜூலை 2010 (UTC)

 பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய த.இ.ப. சொற்கள், ஏறத்தாழ ஒரு இலட்சமிருக்கும். ஏற்கனவே தமிழ் விக்சனரியில் இருக்கும் த.இ.ப.வின் எண்ணிக்கையும் ஒரு இலட்சமிருக்கும். அனைத்து த.இ.ப.வின் சொல்லமைப்பும் ஒரே போல இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.

1) உங்களின் கருத்தென்ன?

  • இனிமேல் வரப்போகும் சொற்கள் நமது புதிய அமைப்பில் இருத்தல் நலம். ஆலமரத்தடியில் விவாதிக்கலாம். பழ.கந்தசாமி 06:29, 13 ஜூலை 2010 (UTC)

2) மேலும், இவைகளில் ஆங்கில கூட்டுச்சொற்கள் அதிகம். கூட்டுச்சொற்களை எளிதாக பிரித்தெடுப்பது எப்படி? முன்பு நீங்கள் எண்ணிக்கையைக் கூட்ட நான் நோட்பேடில் (notepad) அனுப்பிய போது,அதனை எளிதாக பிரிக்கலாம் என்று கூறியிருந்தீர்கள். அதனை உங்களிடமிருந்து கற்க எண்ணுகிறேன். ஆங்.கூட். சொற்களில் ஆதாரங்கள் பிழையாக வருகின்றன. அதனை ஓரளவு {{ஆங்ஆதாரம்2|}} நீக்குகிறது. {{ஆங்ஆதாரம்2|Adelie_penguin}} Adelie_penguin என்ற இரு சொற்களுக்குமிடையில், அடிநிலை கிடைமட்டக்கோட்டை, நாமே இட வேண்டியுள்ளது. இருப்பினும் இதனை தானியக்கமாக அமைக்க முடியவில்லை.

  • அவர்களின் மூல ஆவண வடிவம் பார்த்தால், அதற்கேற்ப script எழுதலாம். AWB அதிகம் பழக்கமில்லை, ஆனால், பைத்தானில் கூட்டுச்சொற்களைப் பிரித்து எளிதில் அடிக்கோடிடலாம். அ. அ. வில் இந்த வாரம் ஒரு நாள் விவாதிப்போம். பழ.கந்தசாமி 06:29, 13 ஜூலை 2010 (UTC)

3)மேலும் AWB மூலம் விக்கிப்படங்களை தானியக்கமாக பதிவேற்றக் கற்று வருகிறேன்.

4) உங்களின் சொற்பதிவேற்றங்கள் வழமைப் போல சிறப்பாக இருக்கின்றன. எனக்கு கற்பதற்கே அதிக நேரம் செலவாகி விடுகிறது. உங்களைப் போல நானும் பதிவேற்றம் செய்ய என்னும் ஏக்கம் ஏற்படுகிறது.--த*உழவன் 06:14, 13 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலக் கூட்டுச்சொற்கள்

தொகு
  • ஒரு கோப்பினை, தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறேன். முடிந்தால் ஆங்கிலக் கூட்டுச்சொற்களைப் பிரித்தனுப்பவும். எதிர் நோக்கும்..த*உழவன் 16:37, 14 ஜூலை 2010 (UTC)
  • பிரித்துப் பதில் அனுப்பிவிட்டேன். பார்க்கவும்.பழ.கந்தசாமி 17:09, 14 ஜூலை 2010 (UTC)
  • மின்னஞ்சல் மூலம் பெற்றேன். மீண்டும் இணைவோம். வணக்கம்.--த*உழவன் 17:21, 14 ஜூலை 2010 (UTC)
  • த. இ. ப. மொத்த்ச் சொற்கள் பட்டியலை இங்கே தனியே ஒரு இணைப்பில் வைத்துக்கொண்டால், (அடிக்கடி தேடப்படும் ஆங்கிலச் சொற்கள் பட்டியல் போல்), பதிவேற்றம் நடந்தபின் ஏதாவது வார்த்தைகள் தவறிப்போயிருந்தால் சிவப்பு வண்ணங்களின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் பழ.கந்தசாமி 17:23, 14 ஜூலை 2010 (UTC)
    • எக்சலில் செய்ய முனைந்தேன். நீங்கள் சொன்ன வழிமுறை எளிமையாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. மின்னஞ்சலில் ஆங்.கூட்டு அனுப்பியிருந்தீர்கள். அதிலிருந்து பிரிக்கப்பட்டத் தனிச்சொற்களை அனுப்ப இயலுமா? ஏனெனில், அவைகள் ஆங்.பொறியியல் பகுப்பில் இணைக்கப்பட வேண்டும்.--த.உழவன்
  • பட்டியலை எனக்கு அனுப்புங்கள். நான் script மூலமாக உள்ளிணைப்பு அடைப்புகள் இட்டு உங்களுக்கு அனுப்புகிறேன். அல்லது பட்டியலை நேரடியாகப் பதிவேற்றம் செய்கிறேன். பின்னால், எல்லா வார்த்தைகளையும் பொருள்களுடன் பதிவேற்றம் செய்தபின் சிவப்புக் கோடுகள் பதிவேற்றம் தடைபட்ட (சில) வார்த்தைகளுக்குத்தான் வரும்; அல்லது வரவே கூடாது. பழ.கந்தசாமி 07:09, 15 ஜூலை 2010 (UTC)
  • பிரித்தெடுத்த தனிச் சொற்களை நாளை காலை (உங்கள் மாலை) அனுப்புகிறேன். பழ.கந்தசாமி 07:09, 15 ஜூலை 2010 (UTC)
  • அவசரமில்லை. ஆங்.பொறியியல் சொற்பட்டியலே அதிகம்.ஏறத்தாழ53,000சொற்கள். அதிலுள்ள ஆங்.கூட்டுச்சொற்களைப்பிரித்தெடுத்தீர்கள். தனிச்சொல்லையும் அனுப்புவதாகக் கூறியிருந்திங்க. அதனுடம்

53,000சொற்களுக்கும் உள்ளிணைப்புகள் இருக்குமாறு பதிவு செய்யவும் அல்லது அனுப்பவும். AWBகொண்டு சிவப்புச்சொற்களை தனியாகப் பிரித்தெடுக்க முடியுமென நினைக்கிறேன். சோதிப்போம். இன்னும் இரண்டு நாட்களில் ஆங்.கூட்டுச்சொற்களுக்குரியப் பகுப்பினையும், ஆங்,பொறியியலுக்கானப் பகுப்பினையும் செய்துமுடித்து விடுவேன். நன்றி.வணக்கம்--த*உழவன் 16:26, 15 ஜூலை 2010 (UTC)

படிமம்:DancingBunny.gifகண்டு கொண்டேன்.கண்டு கொண்டேன்.உங்கள் ஆலோசனையையும்,AWB வசதியையும் இணைத்து மிக எளிதாக 15 நொடிகளுக்குள் சிவப்புச்சொற்களைக் கண்டறியும் முறையைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் அக இணைப்புகளுடன் சொற்களை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும்.? அநேகமாக ஒரு நிமிடம் என்று சொல்லுவீரகள் எனக் கருதுகிறேன். எக்சலிலும் செய்வதைக் கண்டேன். அதனை விட, நமது வழிமுறை எளிமையாக உள்ளது.

உங்களிடமிருந்து அக இணைப்புகள் உருவாக்கும் முறையினையும், கூட்டுச்சொற்களைப் பிரிக்கும் முறையினையும் கற்றால் முழுமையடைகிறேன். மற்றொன்று, ஆங்கில கூட்டுச்சொற்களுக்கான பிழையற்ற வார்ப்புருவை கண்டறிய வேண்டும். படிமம்:Smiley-Dancing.gif--த*உழவன் 07:18, 16 ஜூலை 2010 (UTC)

உங்கள் மின்னஞ்சல் முகவரி

தொகு

உங்கள் மின்னஞ்சல் முகவரியை என் முகவரிக்கு c.r.selvakumar அட் gmail டாட் காம் என்னும் மின்வரிக்கு அனுப்ப இயலுமா? நன்றி--செல்வா 19:31, 15 ஜூலை 2010 (UTC)

(பெ) எதிர் பெயர்ச்சொல்

தொகு

புத்தக வடிவ அகரமுதலிகளில், பெயர்ச்சொல் என்பதற்கு (பெ) என்று குறிப்பர். காகிதம் என்பதல் இடச்சுருக்கத்திற்கு அம்முறை உகந்ததே. மேலும் அங்கு பக்கத்தில் பல சொற்களை அடக்க வேண்டிய நிலை. இங்கு நாம் ஒரு பக்கத்தில் ஒரு சொல் என்பதால் சற்று விரிவாக, பெயர்ச்சொல் என்று எழுதலாமென்று நினைக்கிறேன். உங்கள் கருத்தறிய ஆவல்.--த*உழவன் 05:39, 16 ஜூலை 2010 (UTC)

  • இலக்கணக்குறிப்புகள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று நானும் முடிவெடுத்து விட்டேன்.--த*உழவன் 05:56, 19 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலக் கூட்டுச்சொற்களின் ஆதார வார்ப்புரு

தொகு
  • {{ஆங்ஆதாரம்2|big_hairy_armadillo}}இதிலுள்ள படி, அந்த கீழ்நிலை அடிக்கோட்டினை ஏறத்தாழ 50,000 சொற்களுக்கும் மேலே இட வேண்டிய நிலையுள்ளது. அதனை ஏதேனும் நிரல் மூலம் எழுத முடியுமா? சில இடங்களில் இப்படி இரண்டு சொற்களுக்கு இடையிலும் வரும்.

{{ஆங்ஆதாரம்2|banded_ mongoose}} அவசரமில்லை. இன்னும் ஒரு இலட்சம் சொற்களிலுள்ள ஆங்.கூட்டுச் சொற்களைப் பிரித்தனுப்ப அனுப்ப இயலுமா? இந்த வார இறுதியில் அனுப்பவா? அவசரமில்லை. தொடர்ந்து புதிய சொற்களைப் பதிவதில் அசத்துகிறீர்கள். எனக்குள்ளே ஆர்வம் மேலோங்குகிறது. விரைவில் ஓரளவு உங்கள் தரத்துடன் இணைவேன்.--த*உழவன் 05:55, 19 ஜூலை 2010 (UTC)

  • ஆங்கிலக் கூட்டுச்சொற்கள் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் அனுப்புங்கள். உடனே அவற்றைப் பிரித்து அனுப்பிவிடுவேன். ஆங்ஆதாரம்2 பற்றி உங்கள் தேவையை அ.அ.வில் விவாதிக்கலாம். பின் எப்படிச் செய்வது என்று யோசிப்போம். பழ.கந்தசாமி 06:06, 20 ஜூலை 2010 (UTC)

எண்ணும் எழுத்தும்

தொகு

இதைப்போல தானே ஆலமரத்தடியில் சொல்லியிருந்திங்க!--த*உழவன் 06:47, 21 ஜூலை 2010 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம் பழ. கந்தசாமி, விக்சனரியில் நீங்கள் காட்டி வரும் தொடர் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்கு விருப்பம் என்றால், தங்கள் பெயரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புகிறேன். நன்றி--ரவி 07:21, 22 ஜூலை 2010 (UTC)

பொறுப்பேற்க முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. Wiktionary:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பொறுப்பேற்க முன்வருவதாக முறைப்படி குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி--ரவி 19:02, 25 ஜூலை 2010 (UTC)

தமிழ் படிவ ஐயம்

தொகு

{{ஆங்-சொற்பிற}} என்பது ஆங்கிலச்சொற்களுக்கு தானே. தவறுதலாக உங்கள் படிவத்தில் வந்து விட்டதா?--த*உழவன் 01:21, 24 ஜூலை 2010 (UTC)

  • ஆம், இப்போதுதான் கவனித்தேன். சரி செய்துகொள்கிறேன். 'சொற்பிற' என்று நேற்று ஒரு வார்ப்புரு தமிழுக்காகச் செய்தேன். பழ.கந்தசாமி 01:27, 24 ஜூலை 2010 (UTC)
  • அவ்வார்ப்புருவைக் கண்டேன்.மகிழ்ந்தேன். மற்றொன்று சொல்ல மறந்துவிட்டேன். முழுமையாகவும் அதிகமாகவும் நீங்களே சொற்களைச் சேர்க்கிறீர்கள். ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சொற்படிவம் மாறும் பொழுது, அதனை மாற்றும் வேலை வரின், அதனை நான் உங்களுக்காகச்செய்ய எண்ணுகிறேன். நீங்கள் வழமைப் போல, பதிவுகளைத் தொடரலாம். இன்று ஆங்.கூட்டுக்காக அனுப்புகிறேன்.மின்தடை என்பதால் இன்னும் 3மணிநேரம் கழித்தே அனுப்புவேன். நீங்கள் உறங்கி எழுந்த பின் கவனிக்கத் தவறாதீர்கள். நன்றி.வணக்கம் --த*உழவன் 01:46, 24 ஜூலை 2010 (UTC)
  • {{ஆங்-சொற்பிற}} மறவாமல் நீக்க வேண்டுகிறேன்.ஆங்கில-கூட்டு அனுப்பவும்--த*உழவன் 02:18, 25 ஜூலை 2010 (UTC)

நன்றி

தொகு

நிருவாகித் தேர்வுக்கு வாக்களித்தமைக்கு நன்றி.--செல்வா 00:02, 26 ஜூலை 2010 (UTC)

  • செல்வா, நன்றி. அதேபோல் உங்கள் நல்வாக்கை எனக்கு நல்கியமைக்கும் நன்றி. பழ.கந்தசாமி 00:08, 26 ஜூலை 2010 (UTC)
  • நிருவாக அணுக்கத்திற்கு வாக்கை நல்கியமைக்கு நன்றி. --பரிதிமதி 17:53, 26 ஜூலை 2010 (UTC)

எண்ணிலிருந்து எழுத்து

தொகு

கந்தசாமி, நீங்கள் கேட்டுக்கொண்டபடி ஆங்கில விக்கியிலிருந்து நகலெடுத்து உருவாக்கியிருக்கிறேன். சோதித்து சொல்லவும். {{Number to word|98387}} = , தொன்னூற்று எட்டு ஆயிரத்து, முன்நூற்று எண்பத்தி ஏழு. --Mahir78 06:01, 28 ஜூலை 2010 (UTC)

  • Mahir. மிக மிக நன்றி. இது விக்சனரியில் இருக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. மொழிமாற்றம் பேச்சுவழக்கில் உள்ளதுபோல் தெரிகிறது. எழுத்துவழக்குக்கு மாற்றவேண்டும். மேலும் மேலும் சோதிக்க வசதியாக நமது பொருள் தேடுசாளரத்தில் ஒரு சொல்லை இடுவதுபோல் எண்ணை இட்டு இவ்வாறு பெறமுடியுமா? அப்படி ஒரு சோதனைப் பெட்டி தற்காலிகமாக ஏற்படுத்தினால் சோதிக்க வசதியாக இருக்கும்.
  • மேலும், இது இந்திய முறைப்படி இலட்சம், கோடி என்றும் வரவேண்டும் (அமெரிக்க முறையும் இருக்கலாம்). ஆமாம், உங்களுடைய Number to Word--இன் தமிழாக்க மாறுபாடுகளை எப்படிக் காண்பது? பழ.கந்தசாமி 07:06, 28 ஜூலை 2010 (UTC)
{{Number to word|908}} பல்வேறு எண்களை கொடுத்து சோதித்துப் பார்க்கலாம். பல்வேறு வார்ப்புருக்கள் அடங்கி உள்ளது. அதனால் அவை சற்றே குழப்பலாம். திருத்தம் தேவைப்பட்டால் w:வார்ப்புரு:Number to word பக்கத்தில் உள்ள todo பெட்டியில் தேவைப்படுபவற்றைத் தொகுக்கலாம். Mahir78 08:25, 28 ஜூலை 2010 (UTC)

ஆங்-கூட்டு அனுப்பவும்

தொகு
  • திட்ட காலம் 15 நாட்கள் என முடிவு செய்துள்ளமையால், விரைவாக ஆய்வினை முடிக்க வேண்டும்.எனவே,அடிக்கடி ஆங்.கூட் பாரக்கவும்.தினம் ஒரு முறை. குறிப்பாக இந்திய நேரம் காலை6.30 முதல் 8.00 வரை. நேற்று 2.CHEMISTRY-ALL(5646), 3.PHYSICS-ALL(7474), 5.BIOLOGY-ALL(7214) அனுப்பியுள்ளேன். வழமை போல மாற்றமிடவும். நன்றி.--த*உழவன் 00:25, 29 ஜூலை 2010 (UTC)
  • பிரித்தனுப்பிவிட்டேன். "சேர்க்குமுன் பிரி" என்பது நமது மந்திரம் :) பழ.கந்தசாமி 00:42, 29 ஜூலை 2010 (UTC)

உங்களுக்கு பணியடர்வு இருப்பினும், நீங்கள் தொடர்ந்து த.விக்சனரிக்கு செயல்படுவது எனது சோம்பலை நீக்குகிறது. இன்று 10மணிநேர மின்தடை வரவுள்ளது. எனவே, த.விக்சனரிக்கு நாளை காலையே வருவேன். --த*உழவன் 00:50, 29 ஜூலை 2010 (UTC)

  • புள்ளியியல்,கால்நடை,மீன்வளம் அனுப்பியுள்ளேன்.--த*உழவன் 02:21, 30 ஜூலை 2010 (UTC)

 இறுதியான இரண்டு .

  1. நிருவாகவியல்,
  2. சட்டம் அனுப்பியுள்ளேன்.
  1. அனைத்துச் சொற்களுக்கும், பகுப்புகள் முடிந்து விட்டன.
  2. ஆதார வார்ப்புருக்களுக்கான பிரிப்புகளும முடிந்து விட்டன. ஆங்.கூட்டு வார்ப்புரு பிழையை, சுந்தர் அல்லது மாகிர் சீர் செய்வரென்று நினைக்கிறேன்.

த.இ.ப இணைப்புகளை இதற்கு கொடுக்க வேண்டாமென்று கருதுகிறேன். ஏனெனில், அத்தளம் ஒருங்குறிக்கு மாற ஆயுத்தமாகி வருகிறது. நமக்கு தான் இரட்டிப்பு வேலை.

ஓடினான்-ஓடுகிறான்-ஓடுவான் தகவல் எந்திரன்!

மற்றவை உங்களின் கருத்துக்கள் வழி. பணியடர்விலும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

நன்றி சொல்லவே
என் மன்னவா
வார்த்தையில்லையே!

உங்களை மாதிரி எனக்கும் பட்டிமன்ற நடை வருதா?படிமம்:Smiley-Dancing.gif--த*உழவன் 15:43, 30 ஜூலை 2010 (UTC)

  • த*உழவனே! சட்டதை உடைத்து, நிருவாகத்தைப் பிரித்து அனுப்பிவிட்டேன். கூட்டைத் தனியாக உடைப்பதும் கூட்டணியைக் கலைப்பதும் நமக்குத்தான் கைவந்த கலையாயிற்றே அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்தனுப்பியமைக்கு நன்றி. பழ.கந்தசாமி 16:10, 30 ஜூலை 2010 (UTC)

விளக்கம் வார்ப்புருவின் நிறத்தோற்றம் பற்றிய கருத்து

தொகு

வார்ப்புரு_பேச்சு:விளக்கம் பற்றி, உங்களின் கருத்தினை அறிய ஆவலாக இருக்கிறேன்--த*உழவன் 01:22, 31 ஜூலை 2010 (UTC)

எடுத்துக்காட்டுகள்

தொகு

நீங்கள் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவது மிகவும் அருமையாக உள்ளன. இந்த அகராதிக்குத் தனிச்சிறப்பு தருகின்றது. நானும் பல சொர்களுக்குத் தர விழைகிறேன், ஆனால் ஒருசிலவற்றுக்கே தந்துள்ளேன். பாராட்டுகள்!--செல்வா 02:54, 31 ஜூலை 2010 (UTC)

எடிட்டர் வேலை இன்னும் முடியவில்லை

தொகு

சில கோப்புகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதனால் இன்னும் editor க்கான வேலைகள் முடியவில்லை. முடிந்தவுடன் அறியத்தருகிறேன். -- Mahir78 18:31, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

  • நன்றி. பொதுவாகவே, js பயன்பாடு எப்படி என்று அறிய ஆவல். மேலும், எண்->எழுத்தைத் தேடுபெட்டியில் இடவேண்டும் என்பது என் ஆசை. அதை மற்றவர்கள் அனுமதியுடன் அங்கு சேர்க்கவேண்டும். பழ.கந்தசாமி 18:36, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

பதிவேற்றம் பற்றிய வேண்டுகோள்

தொகு

நீங்கள் புதியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் அதனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுகிறேன். ஏனெனில், பக்க வடிவம் மாறிய பிறகு அனைத்தினையும் மறுபதிவேற்றம் செய்ய வேண்டும். நன்றி.--த*உழவன் 01:29, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

எடிட்டர்

தொகு

எடிட்டர் என்று நீங்கள் எதனை குறிப்பிட்டீர்கள் என்று சரியாக தெரியவில்லை. நான் சோதித்துக்கொண்டிருந்தது மொழி மாற்றி எடிட்டரை. அதாவது உதா. en:blood பக்கத்தில் உள்ள மொழிமாற்றிகள் பகுதியை பாருங்கள். இப்பொழு விக்சனரி வழு நீக்கப்பட்டுள்ளதால், இந்த வசதி கிடைக்கப்பெறும் அதற்கு நீங்கள் சில வேலை செய்யவேண்டும். ஆலமரத்தடியில் சற்று விளக்கியிருக்கிறேன். பார்க்கவும். சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். - Mahir78 18:24, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

  • மாஹிர், நான் editor.js-ஐக் குறிப்பிட்டேன். (அது எதற்காக என்று தெரியவில்லை எனினும்). பொதுவாக இங்கு எப்படி ஒரு js-ஐ இயக்க ஆரம்பிப்பது, எழுதுவது இப்படி பல கேள்விகள் என்னுள் ஓடுகின்றன. எங்கே ஆரம்பிப்பது? எப்படி? இப்படி. உங்கள் உதவியுடன் கற்கவேண்டும். தேடுசாளரத்தில் ஒரு எண்ணை இட்டால் எழுத்துவடிவில் வர இந்த மாதிரி js-கள் நமக்குத் தேவை. பழ.கந்தசாமி 20:01, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

jangle ஒலிபற்றி

தொகு
Pazha.kandasamy/2010:
உலோக ஒலி

jangle என்பதில் இணைக்கப் பட்ட உலோக ஒலி என்பது சரியென்று நினைக்கிறேன்.--த*உழவன் 01:10, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

பயன்பாடு

தொகு

ஆதாரம், பயன்பாடு, விளக்கம் இவைகளை விரைவில் சேர்க்கிறேன். நன்றி.--இராஜ்குமார் 18:02, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

உதவி

தொகு

தொழில் நுட்ப ஆலோசனைக்காக, ஒரு சிறு கோப்பினை அனுப்பியுள்ளேன்.--த*உழவன் 02:04, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

  • சீராக்கம் செய்யப் பட்ட கோப்பினை அனுப்பியுள்ளேன். சில சந்தேகங்கள் உங்களிடம் கேட்கவேண்டும். இவ்வார இறுதியில் உங்களுக்கு நேரம் கிடைக்குமா?

--த*உழவன் 16:57, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

"ஏசு" பற்றி ஒரு குறிப்பு

தொகு

பழ.கந்தசாமி, விக்சனரியில் "ஏசு" என்னும் தங்கள் இடுகை கண்டேன். தமிழில் "ஏசு" என்னும் வினைச்சொல் "திட்டு", "தூற்று" என்னும் பொருள்படும் என்பது தெளிவு. பெயர்ச்சொல்லாக அதைப் பயன்படுத்தும்போது, "இயேசு கிறித்து", "இயேசு" என்னும் பெயரைக் குறிக்கும் ஒரு வடிவம் என்று மட்டுமே தந்துவிட்டு, அது பெயர்ச்சொல் பயன்பாடு என்றும் குறித்துவிட்டு, எஞ்சிய விளக்கங்களை "இயேசு" என்னும் தலைப்பில் தருவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஏசு என்பது இயேசு என்று கிறித்தவத்தில் அதிகம் வழங்கப்படும் சொல்லின் ஒரு வடிவம் எனக் குறித்துவிட்டு விளக்கங்களை இயேசு பக்கத்தில் தரலாம். கிறித்தவ வழக்கில் அதிக வழக்கில் இயேசு என உள்ளதையும் குறிப்பிடலாம்.

பழ.கந்தசாமி 06:38, 11 ஆகஸ்ட் 2010 (UTC) இரு காரணங்கள்:
1) இன்று கிறித்தவ வழக்கில் "இயேசு" என்பதே அதிகம் வழங்குகிறது. அந்த வழக்கத்தைப் பின்பற்றுவது நல்லது என்பது என் கருத்து.
2) "ஏசு" என்னும் தமிழ்ச் சொல் வினைச்சொல்; "இயேசு" பெயர்ச்சொல். பெயர்களைப் பொறுத்த மட்டில் அவற்றைப் பயன்படுத்துவோர் பொதுவாக எவ்வடிவில் அதைக் கையாளுகிறார்களோ அவ்வாறே பயன்படுத்தல் நன்று.

  • ஏசு, இயேசு இரண்டுமே Jesus என்பதன் தமிழாக்க வடிவங்கள். அவ்வகையில் ஏசுவும் பெயர்ச்சொல்லே. பேரகரமுதலியில் ஏசு என்ற பெயர்ச்சொல்லுக்கு குற்றம் என்ற இன்னொரு அரும்பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது, கண்ணதாசன் ஏசு காவியம் என எழுதியுள்ளார். ஜெயமோகன் போன்ற படைப்பாளர்களும் ஏசு என்றே எழுதி வருகின்றனர். மேலும், கல்கி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் ஏசு என்று பயன்படுத்திய எடுத்துக்காட்டுகளைப் பயன்பாட்டின்கீழ் தந்துள்ளேன். பழ.கந்தசாமி 06:38, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

இறுதியாக, "பயன்பாடு" பகுதியில் விவிலிய பாடங்கள் தரலாம். அவை இன்றைய வழக்கில் "இயேசு" என்றே உள்ளன.

  • விவிலியப் பயன்பாடுகளில் ஏசு என்பதைத் தேடிப் பார்த்தேன், உடனே கிடைக்கவில்லை, அப்படி விவிலியத்தில் ஏசு என இருப்பதை முதல் பயன்பாடாகக் குறிப்பிடுவது மிகப் பொருத்தம். நான் அளித்துள்ள மற்ற பொதுப்பயன்பாடுகள் அதன்கீழே வரலாம். பழ.கந்தசாமி 06:38, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். இடுகைக்கு மெருகூட்ட விரும்புகிறேன். அதற்குமுன் தங்கள் கருத்தை அறிய விழைகின்றேன். வணக்கம்.--பவுல்-Paul 05:27, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

"ஏசு" பற்றிய குறிப்பு - குழப்பம் தவிர்ப்பது எப்படி?

தொகு
  • பழ. கந்தசாமி, தங்கள் பதிலுக்கு நன்றி. "ஏசு" என்னும் பதிகை மூன்று தனிப் பதிகைகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று வினைச்சொல். அதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் தந்திருக்கிறீர்கள். இன்னொன்று மாசு, குற்றம் என்னும் பொருளில் வரும் பெயர்ச்சொல். மூன்றாவது இயேசு கிறித்துவின் பெயர்.

ஒரே சொல் வினையாகவும் பெயராகவும் இருந்தால் அவற்றிற்குத் தனித்தனி பதிகை வேண்டும் என்று விக்சனரி நெறியில் பார்த்ததாக நினைவு. அதுவே பொருத்தம் என்பது என் கருத்து. ஆயினும் தற்போது விக்சனரியில் பல சொற்கள் வினையும் பெயரும் உரியும் ஒரே பதிகையில் உள்ளன. ஒருசில எடுத்துக்காட்டுகள் தேடிப்பார்த்தேன். இதோ:படி; கரை; கல்; ஓடு; நாடு; ஆறு; கூறு

வேறு பதிவுகள் இந்த வினை-பெயர் வேறுபாடு சுட்டவில்லை. ஒருவகை மட்டுமே உள்ள சொற்கள் சில: படை;உடை; முளை; களை.

ஆக, ஒரு பெரிய குழப்படி உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறேன். இதை எப்படி சரிசெய்வது? இது பற்றி விக்கி நெறி உள்ளதா? நீங்களும் த*உழவனும் வேறு சிலரும் பல சொற்களை இடுகை செய்வதால் உங்களிடம் இந்த ஐயப்பாட்டை எழுப்புகிறேன்.

  1. பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் இடுகைகள் தனித்தனியாக இருந்தால் நன்றாயிருக்காதா?
  2. அப்படியே, ஒரே இடுகையில் எல்லா வகைகளையும் ஏற்றினால், அவற்றை எப்படிப் பிரிப்பது? அதற்கான வார்ப்புரு உள்ளதா?
  3. "ஏசு" போன்ற சொற்கள் மிகவும் வேறுபட்ட அடிகளிலிருந்து பிறக்கும் சொற்களாக இருப்பதால் (எ.டு.: ஒலி, ஒளி, ஒழி) அவற்றை ஒரே இடுகையில் தராமல், வெவ்வேறு பதிவுகளாகத் தருவதன்றோ நன்றாயிருக்கும்?

உங்கள் (மற்றும் பிறரின்) கருத்து அறிய அவா.--பவுல்-Paul 15:50, 11 ஆகஸ்ட் 2010 (UTC) --பவுல்-Paul 16:02, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

  • பவுல், நன்றி. வெவ்வேறு பக்கங்களாக வருவதே சிறப்பு என்பது என் கருத்தும். எனினும், எப்படிப் பக்கங்களைப் பிரித்துக்காட்டுவது என்பதன் குழப்பம் காரணமாக இவ்வாறு இட்டுவருகிறோம். பக்கவடிவ மாற்றத்தின்போது கவனிக்க வேண்டிய ஒன்று. அதனால், இதை இனி ஆலமரத்தடியில் விவாதிக்கலாம் அங்கே மாற்றியுள்ளேன் பழ.கந்தசாமி 16:15, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

கருத்திடவும்

தொகு
  1. கொடுக்கப்பட்ட த.இ.ப. சொற்களுக்கு மட்டும் பொருந்தும் வடிவமாற்றத்தினைப் பற்றி உங்களின் கருத்திட வேண்டுகிறேன்.dado. எத்தகைய பக்க வடிவம் வரினும், அதனை இட்டு 5நிமிடங்களில் பணிகளைத் தானியங்கி மூலம் துவக்கும் வண்ணம், அனைத்தினையும்(பகுப்பு, படங்கள்) ஆயுத்த நிலையில் வைத்துள்ளேன். பேச்சு:dado பக்கத்திலேயே கருத்திட வேண்டுகிறேன்.--த*உழவன் 06:27, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

த.இ.ப. சொற்பதிவேற்றம்

தொகு

த.இ.ப.சொற் பதிவுகளுக்கு முன்னுரிமைத் தாருங்கள். உங்களின் இறுதி கட்ட சொல்லினைத் தாருங்கள். அது 90% முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:28, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆங்கில ஆதாரங்களுக்குரிய வார்ப்புருக்கள்( 41, 47ன் முடிவு)

தொகு

இப்பக்கத்தின் வரிசை 41, 47ன் தொடர்ச்சி .{.{ஆங்கில ஆதாரங்கள்}} என்ற வார்ப்புருவே அனைத்துச் சொற்களுக்கும் வழுவில்லாமல் இணைப்புகளைத் தரும்படி மாஹீர் உருவாக்கி உள்ளார். (எ. கா.) .Adelie penguin அதிலும் ஒரு சிறு வழு வருகிறது. அதுபற்றி வார்ப்புரு பேச்சு:ஆங்கில ஆதாரங்கள் கூறியுள்ளேன்.Galápagos இது போன்ற சொற்கள் அதிகம் வருவதில்லையென்றாலும், பின்னாளில் பிறமொழி தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு பயன்படலாமென்று சுட்டிக்காட்டினேன். த.இ.ப. சொற்களின் பதிவேற்றக் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் முன்பு அலைப்பேசியில் எடுத்துரைத்தது போல, ஒரே வடிவம் அனைத்துக்கும் வரவேண்டிய அவசியமில்லை என்பதனைப் புரிந்து கொண்டேன். விளம்பரமில்லா விக்கி என்பதன் ஆழத்தைப் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. பல்வேறு சொற்களுக்கு பல வடிவம் தேவைப்படுவதை உணருகிறேன். ஒரு சில நாட்களில் நான் புரிந்து கொண்டதைத் தெரிவிக்கிறேன்.--த*உழவன் 06:56, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

Wiktionary ---> விக்சனரி

தொகு
  • உங்களின் இப்பதிவினை , இங்கேயே இனித் தொடரலாம். ஆலமரத்தடியில் பெயர்வெளிபற்றி மாஹீர் குறிப்பிட்டுள்ளார். கவனிக்கவும். அப்பதிவினை உரிய பக்கத்திற்கு மாற்றிவிட்டு நீக்கக் கோருகிறேன்.--த*உழவன் 01:54, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மேலுள்ள கூறியபடி அப்பக்கத்தின் கருத்துக்களை, முன்பு கலந்துரையாடிய இப்பக்கத்தில் ஒருங்கிணைத்து விட்டேன். இனி அங்கேயேத் தொடர வேண்டுகிறேன்.நன்றி. வணக்கம்.உங்களுக்கு நேரமிருப்பின் இவ்வார இறுதியில் பேச கலந்துரையாடுவோம். நன்றி. வணக்கம்வார்ப்புரு:சிறயது

பதிவேற்ற ஆரம்ப நாள்

தொகு

பதிவேற்றத்திற்கான ஆரம்ப நாளாக எந்நாளைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்? கொடி பற்றி உங்களது கருத்தினை இவற்றினைக் கண்டு, அங்கேயே கருத்திடக் கேட்டுக் கொள்கிறேன். மற்ற அனைத்து கூறுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது.காண்க. நன்றி.வணக்கம் --த*உழவன் 02:26, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கையொப்பம்

தொகு

கையொப்பம் இடும் போது பல நேரங்களில் வேகமாக செயல் படும் போது,4குறியீடுகளுக்கு ~~~~ மாற்றாக, ~~~~~ 5குறியீடுகள் வந்தால், அவ்விடத்தில் பெயர் மறைந்து விடும். dado2,dado4 என்பது உங்கள் பரிந்துரை என்பது, அப்படித்தான் மறைந்து போனது. மேலே செல்வா குறிப்புகளுடன் இணைத்து படித்ததால், பிழை ஏற்பட்டு விட்டது. மன்னிக்கவும். (காணவும்:த.இ.க. சொற்களுக்கான பக்கவடிவம் முடிவு செய்யும் வழிமுறை? ). விரைவில் பதிவேற்ற dadoமுன்மொழிவை விலக்க எண்ணுகிறேன். கருத்துக்கணிப்பால் நாட்கள் மேலும் தள்ளிப் போக வாய்ப்புண்டு. குறுகிய காலத்தில் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த முடியாது. நீங்கள் சொல்வது போல, ஏழு கோடி தமிழர்களுக்கா , 7பேர் உழைப்பு .. நமக்குள் கருத்துவேறுபாடு வேண்டாமென்று எண்ணுகிறேன். எனது கருத்து சிறப்பென்றோ அல்லது வேறு எண்ணங்களோ எனக்கில்லை.ஊருக்கு போக உள்ளேன். வந்தவுடன் இது பற்றி இறுதியான முடிவு எடுப்பேன். வணக்கம்.--த*உழவன் 02:24, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

absolute line

தொகு

absolute line - இதன் வடிவத்தில் முன்மொழியப்பட்டுள்ள மூன்று வடிவங்களின் முதல்வரியை எப்பொழுது வேண்டுமென்றாலும் கொண்டு வரலாம் . உங்களுக்கு அவ்வடிவம் பிடித்துள்ளதா? நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்யவிரும்புகிறீர்களா? அதன் பேச்சுப்பக்கத்திலேயேக்கூறவும்.முதற்கட்டமாக ஆங்கிலம்-கணிதம் சொற்களின் ஆங்கிலக்கூட்டுச்சொற்களை பதிவேற்ற உள்ளேன். எத்தகைய கருத்து மாறுபாடும், வேறுபாடும் வரினும் அதனை வார்ப்புருவின் 5நிமிடங்களுக்குள் கொண்டு வர முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.--த*உழவன் 02:22, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

absolute line என்பதிலுள்ள படி, ஒலிப்பு என்ற பட்டையையையும், கொடியுள்ள ஒலிகோப்பு அமைப்பினையும் பயன்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு என்றே எண்ணுகிறேன். எனவே, உங்களின் புதிய சொற்களில் பயன்படுத்தக் கோருகிறேன்.archetypal criticism என்பதன் மாற்றங்களைக் காணவும்--த*உழவன் 04:43, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆங்கிலச்சொல்லொலிக் கோப்புகள்

தொகு

வின்டோசில் உள்ள narrator-ல் ஆங்கிலச் சொல்லைக் கொடுத்தால், அதன் ஒலிவடிவம் கிடைக்கிறது. அதுபோல, காப்புரிமைத் தடையில்லா text to speech மென்பொருள் இருப்பின் நன்றாக இருக்குமென கருதுகிறேன். அதன் மூலம் நம் விக்சனரியில் இருக்கும் சொற்கள் அனைத்துக்கும், ஒலிக்கோப்புகளை உருவாக்கலாமல்லவா? உங்களின் கருத்தென்ன?--த*உழவன் 05:37, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • த*உழவனே! அத்தகைய கட்டற்ற மென்பொருட்கள் உள்ளனவா எனத் தேடுவோம். ஆங்கில விக்சனரியினர் எவ்வாறு ஒலிக்கோப்புகளைப் பெறுகின்றனர் என்பதை நான் இதுவரை பார்க்கவில்லை. பழ.கந்தசாமி 22:15, 21 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நான் அறிந்தவரை ஆங்.விக்சனரியர் விக்கி ஊடக நடுவக்கோப்புகளையே பயன்படுத்துகின்றனர்.எனினும், உங்கள் கண்ணோட்டமும் இதில் தேவை.ஆங்கில கீழ் எழுத்துக்களை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், விக்கி ஊடக நடுவத்தில் அனைத்து ஒலிக்கோப்புகளும் மேல் எழுத்துக்களில் உள்ளது. இங்குள்ள சொற்களில் மேல் எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது ஒலிக்கோப்புகள் இருப்பதாகக் காண்பிக்கிறது.

(எ. கா.)

இல்லை
(கோப்பு)
(கோப்பு)

. இது போல எத்தனைக்கோப்புகள் இங்கு மறைந்து கிடக்கிறதோ? இதுதான் கைஎட்டியும், வாய்க்கு எட்டலை என்பார்களோ!இதற்கு தீர்வாக, ஆங்கில விக்சனரியில் இருக்கும் auto-redirection நிரல்நுட்பம் இருக்குமென்று எண்ணுகிறேன். யாமறியேன் பராபரமே!--த*உழவன் 02:16, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • எல்லாச் சொற்களுக்கும் அப்படி இருந்தால், ஒலிக்கோப்பில் மேலெழுத்து உள்ள சொல்லை நம் கீழெழுத்துச் சொற்களுக்கு இணையாக வருமாறு ஒலிக்கோப்பு வார்ப்புரு ஒன்றை ஏற்படுத்தமுடியுமா? பழ.கந்தசாமி 02:22, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • சுந்தர் வடிவமைப்பில் இது பற்றி கூறுகிறேன். ஊடக நடுவ கோப்புகளை இன்னும் கவனிக்கவேண்டியுள்ளளது.பெயர்ச்சொல்லுக்கம், பிறவற்றிற்கும் வேறுபாடுகள் உள்ளன போல் தெரிகிறது. இதன் மூலம்நாம் தேவையான ஒலிக்கோப்புகளை உருவாக்க முடியுமெனக் கருதுகிறேன்.--த*உழவன் 01:10, 23 செப்டெம்பர் 2010 (UTC)Reply
{{உச்சரிப்புதவி|<small>*</small>}}{{audio|En-us-{{PAGENAME}}.ogg|[[File:Flag of the United States.svg|24px]]}} என்பதனை உங்களின் புதிய சொற்களில் இணைக்கலாம். --த*உழவன் 14:36, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மலைவாழ் சமூகம் - ஓர் ஆழ்ந்த அனுபவம்

தொகு
  • பள்ளிக்கால நண்பனை(மலைவாழிடன்) தற்செயலாகச் சந்திந்தேன். அதனால், அருகிலுள்ள மலைக்கு சிறு பயணம். மலைவாழ் மக்களின், வாழ்க்கையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. எனது அகம் விரிந்தது. பாமரரின் கல்விக்காகப் பாடுபட்டவர்களின் இன்னல்களை, ஓரளவு உணர முடிந்தது. யாருக்காக இங்கிருக்கிறோம்? என்று என் மனதில் பல எண்ணங்கள்...
''நெஞ்சில் உரமுமின்றி,
நேர்மை திறமுமின்றி,
வஞ்சனை செய்வாரடி கிளியே!
வாய்சொல்லில் வீரரடி''

என்ற பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. மேலும், தமிழ் மாநாட்டிற்கு வந்த போது, இரவி மூலம் பலவித அனுபவங்கள் கிடைத்தது. அதில் ஒரு நாள் இரவு, இகலப்பை முகுந்தன், அவரது கால்நடை மருத்துவ நண்பர், இரவி, மயூரன் ஆகியோர், விக்கி விசயங்களை விட்டு, வேறு சமூகவிசயங்களைப் பற்றி கலந்துரையாடினர். அப்பொழுது நிறைய கவனித்தேன். அவற்றில் சில சமூக கல்விச் சிந்தனைகள், அப்பொழுது புரியவில்லை. இப்பொழுது தான் அவை புரிந்தன.

அகரத்தில் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும். கருத்துப்பணியை விட, களப்பணி முக்கியமென என் உள்ளகம் உரைக்கிறது.

நீங்களே தமிழ் விக்சனரியில் தவறாமல் பங்களிக்கிறீர்கள். நாளை மறுநாள் முதல் உங்களுடன், புதிய சொற்களுக்காக நானும் இணைவேன். நாளை கோப்புகளைச் சீர் செய்வதற்கு ஒதுக்கியுள்ளேன்.

மிகப்பெரிய பாறை . அதன் மீது மிகப் பெரிய மரம். அதனை அரைகுறையாக படமெடுத்தேன். நிழற்படக்கல்வி இல்லேயே என்று வருத்தப்பட்டேன். விரைவில் படங்களை சீர் செய்து அனுப்புகிறேன்.

விண்டோசு இயங்குதளம் மூலம் பதிவேற்றுவதை விட, திறந்த மூல இயங்கு தளம் மூலம்(நமது தளம் திறந்த மூலம் என்பதால், உங்களின் துணையோடு) த.இ.ப. சொற்களைப் பதிவேற்றிட சிறு ஆசை. முன்பு இது பற்றி பேசினாம். இவ்வார இறுதியில் அதற்கு நேரம் ஒதுக்க முடியுமா? எதிர்பார்ப்புடன்,--த*உழவன் 14:00, 4 அக்டோபர் 2010 (UTC)Reply

  • த*உழவனே! உங்களில் மலைவாழ் சமூகம் கண்டு பொங்கும் சமூக ஆர்வம் உண்மையான மன உவகையும் நிறைவும் தரவல்லது. களப்பணி, கருத்துப்பணி எனக் 'கலக்க' வாழ்த்துகள்.
  • சோதனைப் பதிவு முடித்ததும் உடனே ஒருமுறை சரிபார்த்து எந்திரனை இயக்கி ஒரு பகுதி சொற்களையும் மற்றவை லினக்சு மூலம் பதிவேற்றவும் முயற்சிப்போம். நன்றி. பழ.கந்தசாமி 02:18, 5 அக்டோபர் 2010 (UTC)Reply

{.{மேல்எண்1}} -தொடர்ச்சி

தொகு

சிதை என்பதில் மேற்கோள்களை அமைத்தோம் அல்லவா? அதனைக் கண்டே , மேலெண்ணைப் பயன்படுத்தினேன். dado2 வடிவம் உங்களுக்கு பிடித்திருப்பதால், dado2வில் இருப்பது போலவே மேலெண்களின் அமைப்பை மாற்றியுள்ளேன். முன்பு விட எடுப்பாக இல்லாமல் இருக்குமென நம்புகிறேன். --த*உழவன் 01:28, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

இப்பொழுது உபுண்டு இயங்குதளத்தில் பணியாற்றுவதால், AWB-ஐ இயக்கமுடியவில்லை.எனவே,25சொற்களில்தற்காலிகமாக மறைத்துவிட்டேன். அதனை மறுபதிவேற்றத்தின் போது பயன்படுத்த மாட்டேன். மேல் எண்பற்றிய குறிப்புகளை வாக்குப்பகுதியில்நீக்கினால் நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன்.பவுல் கூறியது போல எப்பக்கத்தில், ஒருங்கிணைக்கலாம். வழிகாட்டுங்கள்.--த*உழவன் 00:44, 9 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pazha.kandasamy/2010&oldid=1187422" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Pazha.kandasamy/2010".