விரிவு
விரிவு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படிப்பு அறிவை விரிவு செய்யும்.
- 2-வழிச் சாலை 4-வழிச் சாலையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.
- மார்பு விரிவு - chest expansion
- உயரம், எடை, மார்பு விரிவு, ஓட்டப்பந்தயம் என பல்வேறு தகுதித் தேர்வுகள் மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்டது (18 செப்டம்பர் 2009)
- கடல் என்ற விரிவு நம் மனத்தை விரிய வைக்கிறது (முடிவற்ற அறிதல், ஜெயமோகன்)
- மனித குலத்தின் மன எல்லைகளை விரிவு படுத்துவோம் (அய்யா பெரியார் -கை.அறிவழகன், ஜெயமோகன்)
- சுவர் விரிவு கண்டிருக்கிறது
- பேச்சு வாக்கில் உதிரும் விஷயங்களில் இருந்துதான் அவரது அறிவின் விரிவு நமக்குப் புரியும். அது நம்மை மேலும் வியப்பிலாழ்த்தும். (‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’, ஜெயமோகன்)
- நாவல் வாழ்வின் முழுமையை உள்வாங்கிக்கொள்ள எல்லையற்ற விரிவை அடையவேண்டும். விரிவு என்பது குவிதலுக்கு நேர் எதிரான ஒன்று. தமிழ் நாவல் என்றுமே விரிவை எதிர்கொள்ளாத ஒன்றுதான். இந்த விரிவினை அடைய அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்க்கை குறித்த உணர்வு அடிப்படையிலான [[விவாதம்|விவாதங்களை] அது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் (கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விரிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +