கடுக்காய்
கடுக்காய்(பெ)
- திரிபலைகளில் ஒன்று
- கடுக்காய் மரம்; கடுமரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- gall-nut
- chebulic myrobalan, m.tr., terminalia chebula
விளக்கம்
பயன்பாடு
- உருண்ட மலையாள எழுத்துக்களில் கடுக்காய் மையில் எழுதப்பட்ட எழுத்துக்கள். அவன் ஜோசியர் கடுக்காய் மை செய்வதை கண்டிருக்கிறான். ஜாதகங்களை அவர் இப்போதும் கடுக்காய் மையில்தான் எழுதுகிறார். எழுத்தாணியால் ஓலையில் எழுதுத்துதான் அதிகம். சிலர் காகிதத்தில் வேண்டுமென்று கேட்பார்கள். அவர்களுக்காக கடுக்காய் மையைத் தொட்டு முள்ளம்பன்றி முள் கூர்த்து செய்த பேனாவால் எழுதிக் கொடுப்பார்.
- கடுக்காயை நன்றாக உடைத்து கருக வறுத்து அரைத்து தண்ணீரில் கலக்கி நாலைந்து நாள் வைத்தபின் பழைய பானையில்போட்டு நன்றாக காய்ச்சுவார். கொதிக்கும்போது அதில் கொஞ்சம் நவச்சாரத்தையும் சேர்ப்பார். வற்றி வரும்போது கருப்பாக கெட்டியாக கஷாயம்போல் இருக்கும். அதை தொட்டுத்தொட்டு எழுதுவார். சொட்டி துணியில் விழுந்தால் என்ன செய்தாலும் அழியாது. ஆதாரங்களெல்லாம் அழியாமல் இருக்க கடுக்காய் மையால்தான் எழுதுகிறார்கள். அப்படியே எரித்து விட்டால் என்ன செய்வார்கள்? (கிளி சொன்ன கதை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடுக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +