முதன்மை பட்டியைத் திறக்கவும்

பொருளடக்கம்

தமிழ்தொகு

[[|thumb|250pxpx||பகல்:
எனில் சூரியன் என்பது ஒரு பொருள்]]

 
பகல்:
எனில் அக்குள்/கமுக்கட்டு என்பதும் ஒரு பொருள்

பொருள்தொகு

 • பகல், பெயர்ச்சொல்.
 1. பகுக்கை (பிங்.)
  (எ. கா.) நெருநைப் பகலிடங் கண்ணி (புறநா. 249).
 2. நடு (திவா.)
 3. நடுவுநிலைமை
  (எ. கா.) அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9).
 4. நுகத்தாணி
  (எ. கா.) நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206).
 5. முகூர்த்தம் (பிங்.)
  (எ. கா.) ஒருபகல் காறு நின்றான் (சீவக. 2200). 206).
 6. அரையாமம்
  (எ. கா.) அரையிருள் யாமத் தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81)
 7. மத்தியானம் (பேச்சு வழக்கு)
 8. காலைமுதல் மாலைவரையுள்ள காலம்
  (எ. கா.) பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா.8)
 9. இளவெயில்
  (எ. கா.) பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96)
 10. அறுபது நாழிகைகொண்ட நாள். (திவா.)
  (எ. கா.) ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி. 169). )
 11. ஊழிக்காலம்
  (எ. கா.) துஞ்ச லுறூஉம் பகலுறு மாலை (பதிற்றுப். 7, 8) )
 12. சூரியன்
  (எ. கா.) பன்மலர்ப் பூம் பொழிற் பகன் முளைத்ததுபோல் (மணி. 4, 92). )
 13. பிரகாசம் (திவா.) (ஒப்பிடுக)பகர்
 14. வெளி (சீவக. 1596, உரை.)
 15. கமுக்கட்டு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்தொகு

விளக்கம்தொகு

 • மேற்கண்ட அர்த்தங்களில் கடைசியான கமுக்கட்டு என்னும் பொருளுக்குத் தமிழில் வழங்கும் பகல் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் உருது மொழி bagal என்பதாகும்.சொல்வளம்தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்&oldid=1635181" இருந்து மீள்விக்கப்பட்டது