மாலைமாற்று
மாலைமாற்று(பெ)
- திருமணத்தில் மணமகன், மணமகள் தத்தம் தாய் மாமன்மார் தோளி லேறிக்கொண்டு கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக் கொள்ளும் மணவினை, சடங்கு
- எழுத்துக்களை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமல் இருக்கும் மிறைக்கவிவகை. (யாப். வி. பக். 493.)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the ceremony of exchanging garlands by the bride and the bridegroom, when they are lifted on the shoulders of their respective maternal uncles standing face to face,
- a kind of verse that remains identical when its letters are read in the reverse direction; palindrome
விளக்கம்
- மாலைமாற்று = மாலை + மாற்று
- திருமண மாலைமாற்றில், மணமக்கள் தத்தம் தாய்மாமன்மார் தோளிலேறிக் கொண்டு கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக்கொள்வதுண்டு
- palindrome-ஆக எழுதப்படும் பாடல்களுக்கு மாலைமாற்று எனப் பெயர். அதையே தமிழில் palindrome என்பதற்கு இணையாகச் சொல்லலாம். இதற்கு இருவழியொக்கும் சொற்கள் என்று சிலர் சொல்லுகின்றனர். ஆனால் மாலைமாற்று என்றே முன்னர் தமிழில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மாலைமாற்று செய்யுள் என்பதன் இலக்கணமாக “ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி” என்று சொல்லுவார்கள். திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப் பதிகம் மிகவும் புகழ் பெற்றது. தமிழில் னகரத்தில் சொற்கள் ஆரம்பிக்காது என்பதாலும் நகரத்தில் முடியாது என்பதாலும் நகர, னகர, ணகரங்களை ஒன்றாகக் கருதுவது வழக்கம். (பாலிண்ட்ரோம் – கடிதங்கள், இலவசக்கொத்தனார்)
- முதலிலிருந்து முடிவு வரையிலும், முடிவிலிருந்து முதல் வரையிலும் எப்படி மாற்றிப் பார்த்தாலும், ஒரே தன்மையில் இருக்கும் செய்யுள் அல்லது சொல். (ஏகபாதமும் மாலைமாற்றும்! தினமணி, 27 மார்ச் 2011)
- மாலைமாற்று மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. இவ்வாறு ஒரு மாலையின் நுனியும் இறுதியும் மாறி மாறி அமைந்திருப்பதால், இது "மாலைமாற்றுப் பதிகம்' எனப் பெயர் பெற்றது. (ஏகபாதமும் மாலைமாற்றும்! தினமணி, 27 மார்ச் 2011)
- ஆக,ஒரு செய்யுளை இடமிருந்து வலமாக, முதலிலிருந்துப் படித்தாலும் அல்லது செய்யுளின் இறுதியிலிருந்து, வலதுப்புறத்தில் இருந்து இடதுப்பக்கமாகப் படித்தாலும் செய்யுளின் சொற்களோ, பொருளோ மாறாமல் அமையும் பா வகைகள் மாலைமாற்று எனப்படும்...தமிழில் சித்திரக்கவி என்னும் பகுப்பைச்சேர்ந்த இத்தகைய பாக்களைப்பற்றி தண்டியலங்காரம் என்னும் தமிழிலக்கண நூலில் கூறப்பட்டிருக்கிறது...நுட்பமான பல விடயங்கள் அடங்கிய இந்த நூலை 12ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த 'தண்டி' எனும் புலவர் ஆக்கியுள்ளார்...இவர் கம்பனின் மகனான அம்பிகாபதியின் புதல்வர் எனக் கருதப்படுகிறார்...பாடுபவரின் மொழிப்புலமை மற்றும் மொழியின் செழுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் செய்யுள்நடையே மாலைமாற்று என்பதாகும்...
பெயர்க் காரணம்
தொகு- செபமாலை என்னும் இறைவனின் திருநாமங்களைச் சொல்லப் பயன்படும் மாலையின் மணிகளை வலப்புறத்திலிருந்து இடமாக இறைவனின் ஒவ்வொருப் பெயரைச்சொல்லியோ அல்லது ஒரே பெயரை மீண்டும், மீண்டும் சொல்லியோ உருட்டிக்கொண்டேவந்து ஒருக் குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்ததும், மறுபடியும் இடது புறத்திலிருந்து இறைவனின் பெயரைச் சொல்லிக்கொண்டு வலது புறமாக உருட்டுவர்...அதாவது செபமாலை மாற்றி உருட்டப்படுகிறது...ஆனாலும், இதனால் உண்டாகும் புண்ணியப் பலன்களும், இறைவனின் அருளும் மாறாமல் நிர்ணயிக்கப்பட்டபடியே இருக்கிறது...இதைப்போன்றே மாலைமாற்று செய்யுள்களிலும், எப்படிப்படித்தாலும், பொருள் மாறாமல் இருக்கிறது...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- >>>யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
- காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
- யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மா, யாழீ, காமா, காண் நாகா
- காணா காமா, காழீயா, மா, மாயா நீ மா மாயா <<<...(மாலைமாற்றுப் பதிகம் பா.1, ஞானசம்பந்தர்)
தமிழ் மாலைமாற்றுச் சொற்கள்
தொகு- விகடகவி, திகதி, குடகு ,மாவடு போடுவமா?, துவளுவது, தாளாதா?, வா தாத்தா வா, போ தாத்தா போ, தேருவருதே,மேளதாளமே,மேகமே!, வாடா வா, போடா போ, தாத்தா, கலைக, வினவி, யானை பூனையா?, பாப்பா, தந்த, மாறுமா?, தேயுதே, மாடு ஓடுமா,மோருபோருமோ?, மாடமா?, மாதமா?, மானமா?, மாயமா?, மாமா, கற்க, மாமா, காக்கா, தேளுமீளுதே, தேடாதே, கருவாடுவாருக.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாலைமாற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +