ஓங்காரம்
ஓங்காரம்(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிரணவம் என்ற ஓங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதைப் பிரித்தால் அ+உ+அம் என்று வெளிப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது(கூகுள் குழுமம்)
- வராண்டாவிலும் முகப்பிலும் செம்மச் செம்ம ஆட்கள் நிரம்பியிருந்தனர். முற்றமெங்கும் மனிதத் தலைகள். மனித நெடி. மனித ஓங்காரம். (புது வெள்ளம், ஜெயமோகன்)
- வண்டுகள் ரீங்காரம், ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் (எல்லாம் ஆன இசை, ஜடாயு, திண்ணை)
- காட்டெருமைகள். மான்கள். நரிகள், சிறுத்தைகள் என்று விதவிதமான மிருகங்கள் வாழும் காடுகள் அவை. இரவு முழுக்க ஜிவ் என்ற ரீங்காரம் இருக்குமே. ஒட்டு மொத்தமாக எழுந்து அடங்கும் ஓங்காரம் இருக்குமே. (மேகமலை, கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவா. 320, 10)
ஆதாரங்கள் ---ஓங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +