mung bean
ஆங்கிலம்
தொகு- mung bean, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- பாசிப்பயறு
விளக்கம்
தொகு- இந்திமொழியின் मूंग மூங்க்3---எனும் சொல் வேர்ச்சொல்...பச்சைப்பயறு, பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இதன் பருப்பு தினமும் தமிழக சமையலில்,பயன்படுத்தப்படும் நான்கு வகைப் பருப்புகளில் ஒன்று..பயத்தம் பருப்பு எனப்படுவதும் இதுவே..உணவில் முழு பயறாகவும், பருப்பாகவும் பயன்படுகிறது...இந்தியாவே இதன் தாயகம்..இந்தியாவிலிருந்து சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்குப் பரவி, தற்போது உலககெங்கும் உணவில் முக்கிய பங்காற்றுகிறது...இப்பயறு கபரோகத்தையும், பித்தத்தையும் மற்றும் அரோசகத்தையும் நீக்கும் ஆனால் பித்தவாதத்தை உண்டுபண்ணும்...உடலுக்குக் குளிர்ச்சியைத்தரும்...குறையில்லாத உணவுப்பொருள் ஏதுமில்லை என்னும் நிலையில் இப்பயறும், பருப்பும் பொதுவாக ஆரோக்கியகரமான உணவுப்பொருளாகவேக் கருதப்படுகிறது...
- தமிழக உணவில் பொங்கல், சர்க்கரைப்பொங்கல், கிச்சடி, தினசரி காய்கறிகளோடு சேர்த்துச் சமைக்கும் கூட்டு, பொரியல் வகைகள் தயாரிக்கப் பயனாகிறது...முழுப் பயறு சுண்டலாகவும், முளைக்கட்டவைத்து ஆரோக்கிய உணவாகவும் பயனாகிறது...பயத்தங்கஞ்சி எனப்படும் இனிப்புத் தயாரிப்பு உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது...தெலுங்கு நாட்டின் மிகப் பிரபலமான பெசரட்டு எனும் தோசைவகையும் இந்தப்பயிறைக்கொண்டேத் தயாரிப்பர்...இதுவுமன்றி இன்னும் பற்பல இனிப்பு மற்றும் உப்பிட்ட உணவுவகைகள் இந்தப்பருப்பினால் அந்தந்தக் கலாச்சாரத்திற்குத் தக்கவாறு உண்டாக்கப்பட்டு உலகம் முழுவதும் உண்ணப்படுகிறது....
( மொழிகள் ) |
ஆதாரம் ---mung bean--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி[1]