அலசு
அலசு (வி)
- பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு
- ஒரு விடயத்தின் அனைத்து அம்சங்களையும் விவாதி/ஆராய்
- வெட்கும்படி பலபடப் பேசு. அவனை நன்றாய் அலசிவிட்டான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊறவைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். (பட்டுத் துணிகளை பராமரிக்கும் வழிகள், யோசனன்)
- ஆற்று நீரில் துணிகளை அலசி, கருங்கல்லில் ‘ஹோ. . .ஹோ’ என சப்தத்துடன் தோய்த்துக் காய வைத்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். (கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு, ந. முருகேசபாண்டியன்)
- கீரையை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை: கீரையை தண்ணீரில் நன்கு அலசி விட்டு பின்னர் நறுக்க வேண்டும். நறுக்கி விட்டு அலச கூடாது. ([1])
- (விவாகரத்துக்காக) நீதிமன்றத்தில் ஏறி, குடும்ப ரகசியங்களைப் பொத்தாம் பொதுவில் அலசி, சொத்துப் பகிர்வுக்குப் போராடி, குழந்தைகளைப் பிரித்தெடுக்க சட்ட நுணுக்கங்கள் தேடி... இதற்காகவா ஊரறியப் பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது? (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
- தனியாய் வாழ்வதிலும் சமூகமாய் வாழ்வதிலும் உள்ள நன்மை தீமைகளை அவர்கள் அலசி ஆராய்ந்திருக்க வேண்டும் (சேது சமுத்திர திட்டம் - பொருளியல் கண்ணோட்டம், தீக்குருசி)
- எவருடனும் எளிதில் நட்புகொள்ள முடியாத ஒருவித தனிமை விரும்பி என்றாலும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிகக் கூர்மையாகக் கவனித்து, அலசும் திறன் உண்டு. (விகடன், 3 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
அலசு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +