மடிப்பிச்சை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மடிப்பிச்சை(பெ)
- இடுப்புத்துணியில் ஏற்கும் பிச்சை
- தாழ்மையாய்க் கேட்கும் யாசகப் பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தெய்வமே இந்தப் பிள்ளையை மடிப்பிச்சைதரவேணும்
- அந்த பெண்மணி சேலை மடியை விரித்து பிடித்துக்கொண்டு நின்றது துயரமான காட்சி. முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு. அம்மா உள்ளே போய் ஒரு கைப்பிடி அரிசி கொண்டுவந்து அவர் மடியில் போட்டார். தலையை ஆட்டிவிட்டு அவர் அடுத்த வீட்டுக்கு புறப்பட்டார். அம்மா அவர் மடிப்பிச்சை எடுக்கிறார் என்று சொன்னார். ஏழு வீடுகளுக்கு போய் பிச்சை எடுத்து கஞ்சி காய்ச்சி குடிப்பார். அது மிகத் தீவிரமான நேர்த்திக்கடன். ஊரிலே நெருப்புக் காய்ச்சல் பரவி வந்த நேரம் அது. அவர்களுடைய ஒரே மகனுக்கு நெருப்புக் காய்ச்சல் கண்டு அவன் படுத்த படுக்கையாக கிடந்தான். அதற்காகத்தான் விரதம் என்றார் அம்மா. (22 வயது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மடிப்பிச்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +