அக்கானி
பொருள்
அக்கானி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அப்பா அதிகாலையில் எழுந்து பனையேறப்போவார். தங்கைகள் காட்டுக்குச் சென்று சருகும் விறகும் அள்ளிவருவார்கள். அக்காக்களும் அம்மாக்களும் பதனீர் காய்ச்சுவார்கள். வெள்ளிதோறும் நானும் அம்மாவுமாக கருப்பட்டிகளை பனைச் சிப்பங்களாக கட்டி தலைச்சுமையாக எட்டு மைல் நடந்து கருங்கல் சந்தைக்குக் கொண்டுசெல்வோம். அப்பா கொரட்டிமேட்டிலும் ஆனைக்கயத்திலும் எல்லாம் இறக்கி வைக்கும் அக்கானியை சுமந்துகொண்டு வந்து வீடுசேர்ப்பது எனக்கும் சின்ன அக்காவுக்கும் தங்கைக்குமான வேலை.
- நான் திரும்பி ஓடி வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொன்னேன். அக்கானியடுப்பை ஏற்றிக்கொண்டிருந்தவள் அப்படியே என்னை பார்த்தாள். கண்கள் விழித்திருக்க தலை ஓணான் போல ஆடியது. திடீரென்று வீரிட்டு அலறி, மார்பில் அறைந்து கதறியபடி மயானக்கொள்ளைக்கு போகும் பூசாரி போல இடைவழியில் இறங்கி ஓடினாள்.
- எங்கள் வீட்டில் எப்போதுமே பசியைப்பற்றி எவரும் எதுவும் சொல்லும் வழக்கம் இல்லை. காலையில் பெரும்பாலும் பனம்பழம் சுட்டு தின்பதுதான். நான் அக்கானி கொண்டு வரும் வழியிலேயே கொஞ்சம் குடிப்பேன். (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
- அக்காக்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அக்கானி பானையில் புளித்து விளிம்பு கவிந்து நுரை வழிந்துகொண்டிருந்தது. (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
- ‘இவன் சொல்லுகத கேட்டியா? பாம்பு பனை கேறுமாம். அக்கானி எடுக்குமாண்ணு தெரியேல்ல ஹஹஹ’ என்றார். (மத்துறு தயிர் [சிறுகதை-1, ஜெயமோகன்])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அக்கானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +