இழைத்தல்
தமிழ்
தொகு[[|thumb|200pxpx||இழைத்தல்:
என்றால் வரைதல்---வரையப்பட்ட ஓவியம்]]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இழைத்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- நூற்றல்
- செய்தல்
- (எ. கா.) இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச். 2, 2).
- சூழ்தல் (சீவக. 1089.)
- செதுக்குதல் (ஈடு. 1, 4, 7.)
- நுண் பொடியாக்குதல் (பரிபா. 10. 91.)
- மாமுதலியன மெதுவாக்குதல்
- பதித்துச் செய்தல்
- (எ. கா.) மணியினிழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6).
- கூறுதல்
- விதித்தல்
- வரைதல்
- அமைத்தல்
- (எ. கா.) பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக. 4).
- திரட்டிவைத்தல்
- சங்கற்பித்தல் (குறள். 779.)
- மாத்திரைமுதலியன உரைத்தல் (பேச்சு வழக்கு)
- இழையாக்குதல் (பேச்சு வழக்கு)
- (எ. கா.) கதிரிலுள்ள நூலை யிழைத்தான்
- நிமிண்டுதல் (உள்ளூர் பயன்பாடு)
- பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல் (W.)
- பின்னுதல் (J.)
- (எ. கா.) பாயிழைத் தான்
- நுண்ணிதாக ஆராய்தல்
- (எ. கா.) இழைத்துணர்ந்து (குறள். 417).
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
verb. tr.
- to spin
- to make, do, construct
- to turn over in one's mind, deliberate, calmly, consider
- to plane, scrape off
- to grind into fine powder
- to make soft, as fine powder
- to set, as precious stones
- to utter, say
- to appoint, determine, destine, fix
- to paint, draw, daub
- to take, accept
- to store up
- to determine, to take a vow
- to rub so as to be dissolved, as a pill in honey or milk
- to divide into strands, as a thread
- to squeeze the flesh so as to give pain
- to select, pick out, separate, to cull, as cotton
- to braid, as mats, to plait, weave
- to scrutinize
verb.intr.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +