பொருள்

கோட்டம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. division
 2. bend, curve, warp, as in timber
 3. bowing in worship, adoration
 4. partiality, as swerving from uprightness
 5. crookedness, as of mind
 6. hatred
 7. envy, jealousy
 8. district, province
 9. town, city
 10. garden
 11. shore, as of a tank
 12. lute
 13. lines, figures and diagrams drawn with rice-flour on the ground, on festive occasions
 14. eatables, edibles

(பெ)

 1. room, enclosure
 2. temple
 3. camp
 4. prison
 5. place}
 6. Administrative division

(பெ)

 1. arabian costum
 2. costus shrub, saussurea lappa
 3. putchock, fragrant costus root
 4. patchouli
 5. common bottle-flower

(பெ)

 1. cow-shed
 2. herd of cows

(பெ)

 1. monkey
 2. tank
 3. sheet of water
 4. field

பொருள்

தொகு
 1. பிரிவு
 2. வளைவு
  • மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் (நன்.25)
 3. வணக்கம்
  • முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடிவெற்பன் (திருக்கோ. 156)
 4. நடுநிலை திறம்புகை
  • கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (தேவா..1182, 2)
 5. மனக்கோணல்
  • உட்கோட்ட மின்மை பெறின் (குறள்.119)
 6. பகைமை
 7. பொறாமை
 8. நாடு
 9. நகரம்
 10. தோட்டம்
 11. கரை
 12. யாழ்
 13. மாக்கோலம்
 14. உண்பன

(பெ)

 1. அறை
  • சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் (மணி. 6, 59)
 2. கோயில்
  • கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்(சிலப். 14, 10)
 3. பாசறை
 4. சிறைச்சாலை
  • கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262)
 5. இடம்

(பெ)

 1. வெண்கோஷ்டம்
 2. ஒருவகை வாசனைச்செடி
  • கோட்டமுங் குங்குமமும் பரந்து(சீவக. 1905)
 3. ஒருவகை வாசனைப்பண்டம்
  • கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது (கம்பரா. கும்பக. 145)
 4. பச்சிலை
 5. குரா

(பெ)

 1. பசுக்கொட்டில்
 2. பசுக்கூட்டம்

(பெ)

 1. குரங்கு
 2. குளம்
 3. நீர்நிலை
 4. வயல்
 5. நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படும் பகுப்பு


சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோட்டம்&oldid=1995851" இலிருந்து மீள்விக்கப்பட்டது